திங்கள், 8 ஏப்ரல், 2024

மோடி செயல்வீரர்

 அடுத்தடுத்த நாடுகளுக்கு அடிவருடி ஆகாமல்

எடுத்தகரு மம்எதுவும்  இனிதாகத் தான்செய்யும்

மோடிஎனும் செயல்வீரர்  முனைந்திட்ட .மூதறிஞர்

தேடித்திரிந் தலைந்தாலும் தேசமிதில்  கிட்டாதார்

நல்லவேலை  செய்பவரை இல்லிற்குள் அனுப்பென்றே

சொல்லுவதும் ஏதுக்கோ சூழ்ந்துவிடை காணோம்நாம்..


தாம்நலமே  செய்வதற்கே தலையெழுத்துச் சரியில்லார்

நாம்நலமே பெறுங்காலை ஏன் அவரைத்   துரத்துகிறார்.

அவரிருந்து பலகாலம் அனைத்துமக்க ளும்உயர

இவர்வழியே விடவேண்டும் தடைசெய்தல் தக்கதன்றே 

மக்கள்நாட்டம் நாட்டினேற்றம் முக்கால மும்சிறக்க

ஒக்க அவர்  இருந்தாலே  உலகுமிகப் பயன்பெறுமே..


தம்நிலையைத்  தாமறிந்து தம்வசதி செல்வநிலை

இம்மண்ணோர் இருப்புநிலை எதிர்காலம் ஆறு பேறு

எல்லாமும்  கணித்தறிந்து  சொல்லாடும் சூழ்திறனே

நல்லாராய் எடுபடுவார் நாடோறும் செல்திசையே

இல்லாதார் சிந்தித்தல் இல்லாமல் இல்லிற்செல்

சொல்விடையோ மட்டமான வல்வழிச்சொல் ஐயமிலை


வாரிசுகள்  யாருமிலார் எண்மலராய் நாடெண்ணி

ஓருயிராய்  ஒடுங்கியவர்  மாமுனிவர் மோடி இவர்.

பிள்ளையில்லை குட்டியில்லை அள்ளுபெருஞ்  செல்வமிலை 

தாயிழந்தும் ஓய்ந்துவிடார்  ஆயும்மக்கள் மேலெனவே

தேசமொன்று குறிக்கோளாய் வாசமலர் வாழ்வார்ந்தார்

ஏசலறியா   மோடி இரும்பொறையை வாழ்த்துகவே.




தக்கதன்றே - தக்கதல்ல.

பெறும்காலை - பெறுகின்ற காலத்தில்

இவர் வழியே விட -  எதிர்ப்பவர்கள் தடுக்காமல் இருக்க

உயர - முன்னேற்றமடைய

மக்கள் நாட்டம் - மக்களுக்கு வேண்டியவை

நாட்டினேற்றம் - நாடு செப்பனிடப்பட்ட முன்னேற்றம்

ஒக்க - நாட்டினருடன்

எண்மலர்:

கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.ஆகிய எட்டு மலர்கள்.

தம் நிலை - தம்முடைய சொத்துப்பத்துகள்
இம்மண்ணோர் -  நாட்டுமக்கள் 
இருப்பு நிலை -  மக்களுக்குள்ள வசதிகள்
சொல்லாடும் -  உரை தொடுக்கும், பேச்சு நிகழ்த்தும்
நல்லாராய் எடுபடுவார் - நல்லவர்களாய் சொல்லப்படுவோர்
செல் திசை =  செல்லவேண்டிய வழி
இல்லாதார் -  சிந்தனை இல்லாதவர்கள்
இல்லிற் செல் - வீட்டுக்குப் போ எனப்படும் கூச்சல்
வல்வழிச்சொல் -  வன்மை காட்டும் சொல்
ஐயமில்லை - சந்தேகமில்லை

எண்மலர்  எட்டு நற்குணங்கள் மேலே காண்க
வாரிசு -  வருகின்ற  பின் தலைமுறைகள்.  ( வரு+ சு >வாரிசு,
சு - விகுதி ),
நாடெண்ணி - நாட்டு நலன் கருதி
மாமுனிவர் - மகரிஷி
ஆயுமக்கள், வாக்களிக்கும்  மக்கள்.
தலைவர்களை மக்கள் ஆய்வு செய்கின்றனர்.. முடிவுசெய்து
வாக்கை அளிக்கிறார்கள். அதனால் ஆயும் மக்கள்.
ஒ.நோ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? (குறள்).
இரும்பொறை -  மலைபோன்றவர்.  இது சேரமன்னர்
பட்டப்பெயர், பொருள்  உள்ளது. 

வல்வழிச்சொல்: போகிற வழியில் சிந்திக்காமற் பேசுவது.

கருத்துகள் இல்லை: