இன்று அதிருஷ்டம் என்ற பதம் கணித்தறிவோம்.
திருஷ்டம் என்பதனோடு அ என்ற எதிர்மறை முன்னொட்டு சேர்க்கப்பட்டு இச் சொல் புனையப்பட்டுள்ளது. இந்த அகரத்தை விலக்கிவிட்டு, திருஷ்டம் என்பதனைப் பல்கலைக்கழக அகரவரிசையில் தேடினால், கிடைக்கவில்லை. வடவெழுத்தை, தொல்காப்பியமுனி சொன்னதுபோல் விலக்கிவிட்டு, அதற் குரிய எழுத்தைப் போட்டு, திருட்டம் என்றாக்கினால் அதுவும் கிடைக்க வில்லை. ஆகவே அது தமிழாகிவிடும் என்று முனிவர் நமக்குச் சொன்னபடி, ஒன்றும் நடக்கவில்லை. இப்படித் தேடியது கிடைக்காவிட்டால்தான் மகிழ்ச்சி மேலிடுகிறது.
இது திருட்டம் என்று வந்துவிட்டாலும், திருட்டினுடன் தொடர்பு உடையசொல் அன்று. திருட்டு அம் என்று பிரித்து ஆனந்தம் கொண்டாட முடியவில்லை.
அ என்பது அல்லாமை என்றால், திருட்டல்லாமை என்பது மகிழ்ச்சிக் குரியது தான். நம் பொருள் திருடப்படாமை ஆனந்தம் தானே? ஆகவே சொல்லின் பொருள் வந்துவிட்டது எனலோமோ?
திருட்டில்லாவிடில் ஆனந்தமே. நம்மை அறியாமல் மனத்தில் பொங்கும் ஆனந்தமே.
என்னை அறியாமல் மனம் கொப்பளிக்கும் ஆனந்தமே?
எண்ணமெல்லாம் வெல்லும் கனவாலே
விண்ணிலே கண்ணைவைத்த அதிருஷ்டமே!
இங்குக் கண்ணுறும் தொடர்பில் அடுத்த இடுகையைச் சொடுக்கி வாசித்து உண்மை அறிக:-
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக