திங்கள், 8 ஏப்ரல், 2024

சமானம் என்னும் பதம்.

 பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு  விளக்கம் எழுதியுள்ளோம்.  ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது.  பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல்.  பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது.  ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில்  அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை.  மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்

இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம்.  சொடுக்கி வாயித்து  (வாசித்து)க் கொள்ளுங்கள்.  வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின்  சி  ஆகும்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html

சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்)  உள்ள தற்சமச் சொல்.

இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல்  தமிழ்வழியில் பிரித்தறிவோம்.

சமம் +  ஆன + அம் >  சம +  ஆன + அம் >  சமானம்.  

சமானம் என்பதை  ஸமானம் என்று முன்னர் எழுதினர்.

இதை:

சமம்  +  அன் + அம் >   சம + அன் + அம் >  சமானம் என்றும்  பிரிக்கலாம்.

அன் என்பது அன்ன என்ற உவம உருபு  அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும்.  " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.

சம என்பதில் இறுதி  அகரமும்   அன் என்பதன் முதலான அகரமும் இணைய:

அ + அ >  ஆ  என்பது ஒலியியல் முறையில்  சரியானதே,

அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால்  ஆ ஆகிவிடும்.  அறிக.

விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில்  சரிநிகர்  சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: