நம் வலைத்தள அன்பர்கள் திருவாளர்கள் ரூபன் சாருகா இருவரும் ஒரு திருமணத்திற்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தனர். அத்திருமணம் ஒரு மாதாகோயிலில் நடைபெற்றது. பிரான்சிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.சுற்றுலாவிலும் உலக நோக்கும் புவியியல் அறிவும் வளரும் வாய்ப்பு உள்ளன. இந்தப் படங்களில் நம் அன்பர்களைக் காணலாம்.
வெண்பா
பற்றில்லார் இவ்வுலகில் என்றால் படுத்துறங்கி
எற்றுக்கென் றீர்ப்பிலார் ; நன்றேநாம் ----- சுற்றுலாச்
சென்றிடங்கள் கண்டு மகிழ்தல்; செலவினால்
வென்றிட வேண்டும் அறிவு.
செலவு - பயணம் செல்லுதல்
சுற்றுலா - பயணம்.
பற்று - உலக மேல் உள்ள பற்று.
எற்றுக்கு - எதற்கு
ஈர்ப்பு - உலகின்மேல் உள்ள ஆசையினால் உந்தப்படுதல்.
மகிழ்வீர்.
மெய்ப்பு : பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக