வியாழன், 11 ஆகஸ்ட், 2022

துர்க்கை அம்மன் அலங்காரம் செலவுகள்.

 துர்க்கையம்மன் தேவியின்பால் உண்மை  அன்பு

தூய ஆடை  ஆய்மலரால் அழகு  செய்தல்,

அர்க்கமுறும் நாடுகளை அளாவு மக்கள்

அருஞ்சிங்கை வந்துவாழ்வோர் தம்மினோடு,

பொற்கமல மனம்பொருந்திப்  பூசை செய்து

பொங்கலிட்டு அனைவருக்கும் புசிக்கச் சாதம்

கற்கவணப் பாக்கள்பல கனிந்து பாடல்

காலமெலாம் இவைசெய்தார் வனஜா அம்மை.


பூசையொன்று கோவிலிலே நடக்கும் அம்மன்

பூண்டிருக்கும் மாலைகளும் பூக்கள் தாமும்

கூசுகவின் ஒளிவீச மகிழ்வார்  அம்மை.

கொடுக்கு(ம்)தொகை மிஞ்சிடினும் கவலை கொள்ளார்!

நேசமுடன் கீழிருக்கும் சீட்டு  தன்னை

நீங்களின்று காணுங்கள் கிடைத்த ஒன்று

பாசமுள்ள அன்னையருள் பயின்ற மக்கள்

பாரினிலே அனைவரும்பல்  லாண்டு வாழ்க.





இவை  (bill etc)  பழைய பதிவுகள். இவற்றை வீசவேண்டிய நேரம் இதுவாகும்.


அரும்பொருள்:

ஆய்மலர் -   ஆய்ந்தெடுத்த, (தேர்ந்தெடுத்த)  மலர்கள்.

அர்க்கமுறும் ---  பூமியைக் குறுக்காகத் தொடும்  ( நாடுகள்).

அருஞ்சிங்கை  ---  அருமையான சிங்கப்பூர்

பொற்கமலம் -  செந்தாமரை.

சாதம் ( இங்கு) பிரசாதம்,  இறையுணா.

கற்கவண -   கற்க  வண்ண -  கற்க இனிய

வனஜா -  பூசை செய்த  அமைப்பாளர்.

கூசுகவின்  -  ஒளிமிக்க அழகு.

பாடல் -  பாடிச் சமர்ப்பித்தல்.


கருத்துகள் இல்லை: