சீந்தில் என்பது ஒரு கொடியின் பெயர். இது சிந்துக்கொடி எனவும் குறிக்கப்பெறுகிறது. இதற்குப் பிறபெயர்கள் சீந்தி, சிலாந்தி, சிவேதை, சின்னம்,சின்னாருகம், சீலம், சீவசஞ்சீவி, பரிவை, பறிவை, பாதாளமூலம், பொற்சீந்தில், நற்சீந்தில், பொற்றாவல்லி, பொன்றாவல்லி, மதி ஆம்பல் (மதுவாம்பல்) , மதுச்சிரம், மதுபருணிகை, வச்சாதனி ( வைத்தால் தனி), வசீகரம், வயமது, வபாமது, வள்ளிக்கண்டம், விசலி, அமரை, அழுதை, அனந்தை, ஆகாசக்கருடன், ஆகாசவல்லி, ஆகாசி முதலிய பலவாம்.
மது என்பது ம(யங்குவ)து என்பதன் எழுத்துச்சுருக்கச் சொல். இதை முன்னர் எழுதியுள்ளோம்.
நோய்தீர்க்கும் மரஞ்செடி கொடிகள் எவை என்று கண்டறிந்து நலமாக வாழ்வது எப்படி என்பதில் முன்னோர் பெரிதும் கவனம் கொண்டிருந்ததையே இப்பெயர்கள் உணர்த்துகின்றன. இந்த அறிதொகுப்பில் பல இப்போது இல்லை என்பது இங்கு வருந்துவதற்குரியது ஆகும். இப்பெயர்களில் சில, வகைப்பெயர்களாயும் சில உயர்வகை குறிக்கும் பெயர்களாயும் இருக்கின்றன.
முதியவர்களுக்கு வரும் உடம்புவலி, மஞ்சட் காமாலை முதலியவை மட்டுமின்றி இது ஒரு பன்னோய் நீக்கி என்றும் கருதப்படுகிறது.
இதிலிருந்து செய்யப்படும் சர்க்கரை போன்ற தூள் " சீந்திற்சர்க்கரை" , "சீந்திலுப்பு" என்றும் குறிக்கப்பெறும். சூக்குமம், சோமவல்லி, தந்திரகம், தூறுபுட்பம், நிறைதருதூறு, பஞ்சகமம், பகன்றை, என்ற பெயர்களும் உள்ளன., தூறு என்பது செடியின் தூறு அல்லது கீழ்ப்பாகம்.
தொடர்புடைய பிற பூண்டுப் பெயர்கள்: சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப்பாட்டு. 88). (பிங்கலந்தை.) ; நறையால் முதலியவாம். சில மேல் குறிக்கவும் பட்டுள்ளன.
பனித்துறைப் பகன்றை (சங்கச்செய்யுள் தொடர்) என்பதனால், நீர்நிலைகள் உள்ள இடங்களில் இது செழித்து வளரும் என்று தெரிகிறது. ஆம்பல் என்று முடியும் பெயரும் கருதுக.
பூண்டு என்பது ஒற்றை குறிக்குங்கால் "பூண்டுப்பல்" என்றும் குறிக்கப்படுவதால், ஆம் பல் என்பது ஒற்றைச் சீந்தில் பூண்டு என்றும் குறித்தல் உரியது. ஆம் பல் > ஆகும் பல். இதிலிருந்து பொருள் திரிபினால், "ஆம்பல்" என்று திரிதலும் உடைத்தாம்.
சங்கச் சான்றோர் நன்கறிந்த கொடி சீந்தில். இத்தனைப் பெயர்கள் சீந்திலைக் குறிப்பனவாய் இருத்தலால், இது விரிந்த பயன்பாடு உடைய கொடி என்பது தெளிவு.
இதை வேற்றின மக்களும் பயன்படுத்தியுள்ளனர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
Note:
Whilst reading this, if you wrongly enter the "compose mode" ( without authority), please do not disturb the text with your mouse or otherwise. Please exit without causing changes to the text. Some changes were made by unknown persons. Thank you for your compliance.
To trespasser: text not test. Pl do not change it.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக