இந்தப் பூசை அமைப்பாளர்கள், ஒரு கடையில் பூவாங்கியதை காட்டும் விலைச் சீட்டினைத் தான் முன் ஓர் இடுகையில் கண்டோம். வாங்கிய எல்லாப் பூக்களும் ஒரே சீட்டுக்குள் அடங்கிவிடுவதில்லை. எமக்குக் கிடைத்தது ஒன்றுதான். அதை வெளியிட்டோம். 2015 ஆண்டில் இவ்வளவு என்றால் இன்றைய விலைப்படி எவ்வளவு ஆகுமென்பதை யூகம் செய்து அறிந்துகொள்ளவேண்டும். அன்று $50 தண்டப்பெற்றது என்றால் இன்று தலைக்கு $250 போட்டால்தான் "கட்டுப்படி" ஆகும் என்பதை உணர்க. பூசை முடிந்து கோவில் செலவுகள் எல்லாம் முடிந்தபின், கோவில் அலுவலர்கள் ( பூசாரி, உதவியாளர்கள், மேளம், தாளம், நாதசுரம் எல்லாவற்றையும் செய்தவர்கள் முதலானோருக்கு "தட்சிணை" ( தக்கிணை, தக்க இணை) வழங்கப்படும், இது சுமங்கலிப் பெண்காளால் ). வேட்டி துண்டு முதலியவையும் வெற்றிலை பாக்கு முதலியவையும் இக்கொடையினுள் வரும். இதைப் பின் விளக்குவோம்.
இப்போது சுமங்கலிப் பெண்கள் வாங்கிய பொருள்களில் படங்களைக் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக