இன்று கைலாசம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.
கைலாசம் என்ற சொல்லொலியை ஒத்த பிறமொழியின் ஒலிப்பு கைலாஷ் என்பதாகும்
என்பது நீங்கள் அறிந்ததே. கைலாஷ் என்பதற்குப்
பிறமொழியின் வழிச்சென்று அடிச்சொற்கள் கண்டுபிடித்துப் பொருள்விளக்குதல் நீங்கள் கேட்டிருத்தல்
கூடும்.
இதைத் தமிழின் வழிச்சென்று இன்று பொருள்விளக்குவோம்.
கை+ லாசம் என்று இதனைப் பிரித்தல் வேண்டும்.
இச்சொல்லில் லாசம் என்பதனை முதலில் எடுத்துக்கொள்ளலாம்.
இச்சொல் லாயம் என்றும் வழங்கும். இதில் உள்ள சகரமானது யகரமாய் வருவது
சகர யகரப் போலி. தேயம் > தேசம் எனல் போல. லா என்பது தமிழில் முதலெழுத்தாக வருவதில்லை. ஆகவே இது தமிழாயின், இலாயம் என்றே இருந்திருத்தல் கூடுமாதலால், இலாயம் என்பதனையே மேற்கொள்வோம்.
இலாயம் என்பது இல்+ ஆயம்.
இல்+ஆயம் என்பது புணரின் இல்லாயம் என்றன்றோ வருதல் வேண்டும்
எனின், அதுவும் இடைக்குறைந்து இலாயம் என வருதல் இலக்கணத்தின்கண் உளதாதலின், இதனால் ஆயதொரு வேறுபாடின்மை
அறிக.
இல்+ஆயம் என்பது புணரின் இல்லாயம் என்றன்றோ வருதல் வேண்டும்
எனின், அதுவும் இடைக்குறைந்து இலாயம் என வருதல் இலக்கணத்தின்கண் உளதாதலின், இதனால் ஆயதொரு வேறுபாடின்மை
அறிக.
இல் = இல்லம்;
ஆயம் = ஆய்+ அம்: இது ஆக அமைந்தது என்று வாக்கிய நிலையை அடையும். ஆய் - ஆதல்
என்பதன் வினை எச்சம்; அம் என்பது விகுதி என்று
வகைப்படுத்தினும் இழுக்கொன்றுமில்லை.
ஆய் அமைந்தது என்ற பொருள் அப்போதும் வெளிப்படும்.
எனவே இல்லமாய் அமைந்தது என்பதே பொருள்.
கை என்பது பக்கத்திலேயே இருப்பது
என்று பொருள்படும். வெகுதொலைவு எங்கும் செல்லாமல்
அருகிலே அமைந்துள்ள ( இல்லம்).
உலகனைத்தும் ஆண்டவனுக்கு இல்லம்தான். கடவுள் ஓரிடத்தில் ஒடுங்கிவிடும் நிலையினன் அல்லன். எனினும் மனிதனின் கருத்தில் கடவுளுக்கும் ஓர் உறையுள்
இருக்கவேண்டும். அவர் நாமிருக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியவில்லை ஆகையால், வேறோர் இடத்தில் இருக்கிறார், என்று மனிதன் எண்ணுவது
இயல்பு. அதுவே அவருடைய இல்லம். என்னுள்ளே இறைவரும் (இறைவனும்) உள்ளார் என்பதானது ஞான நிலை. கைலாசம்
என்பது அந்நிலையில் தோன்றிய சொல் அன்று. இயல்பான சொல் ஆகும்.
கை = அருகிலமைந்த
இல் ஆயம் = இல்லம் ஆவது.
இப்படி இச்சொல்லும் தமிழில் பொருள்தருகிறது.
அவர் இல்லம் ஒரு மலைப்பக்கமாய் உள்ளது என்பர். கைலாய மலை.
இதுவே இச்சொல்லின் தமிழ்ப்பொருள்.
அறிந்து மகிழ்வோம்.
பிழைத்திருத்தம் பின் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக