திங்கள், 11 செப்டம்பர், 2017

ரஜினி Rajnikanth (21% support)



ரஜினி காந்தின் அரசியல் முயற்சி.

ஜெயலலிதா அம்மையார்  இருந்தபோதே  இவர்அரசியலில் புகப்போவதாகத் தாளிகைகள் எழுதிக்கொண்டிருந்தன.  ஆனால் அவர் புகவில்லை. புகாமையின் காரணங்கள் என்ன என்ன என்பது வரலாற்று ஆராய்ச்சி ஆகிவிடும். இப்போது புகுமுகமாய் இருக்கின்றார். மக்களாட்சி நடைமுறையில் பலரும் சென்று பங்குபற்றுவதென்பது ஒருவகையில் நல்லது என்றே சொல்லவேண்டும்.  யாருமே சென்று கலந்துகொள்ளாமல் வெளிநாட்டுக்கார்ர்களை வாடகைக்குக் கொண்டுவருமளவிற்கு உலகில் எந்த மாக்களாட்சியும் போய்விடக்கூடாது.   சேவை மனப்பான்மையுடன் நேரமும் திறனும் பக்கபலமும் உடையோர் கலந்துகொள்வதே  மக்களாட்சிக்குத்  தெம்பு  தரும். கலந்துகொள்வதா இல்லையா என்பதைக் கலந்துகொள்ளும் நிலையுடைய குடிமகனே தீர்மானிக்கவேண்டும்;  அக்குடிமகனை ஏற்பதா இல்லையா என்பதை மக்களே ( வாக்களிப்போரே) முடிவுசெய்யவேண்டும்.  இது மக்களாட்சியின் செயல்பாட்டு முறையாகும்.
ரஜினி கலந்துகொள்ள முடிவெடுத்தபின், அரசியல் களத்தில் அவருக்கு வரவேற்பில்லை என்று தாளிகைச் செய்திகள் பகர்கின்றன!  இலயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு கருத்துக்கணிப்பை  நடத்தினர்.. அதில் ரஜினிக்கு 21% தான் கிடைத்துள்ளது.  களத்திலுள்ள பிற அரசியல் சேவையினர்  இன்னும் அதிகம் பெற்றுள்ளனர்.  ஓபிஎஸ் ஸுக்கு  1% மட்டுமே கிடைத்துள்ளது.  ஆகவே அவர் ஈபிஎஸ்ஸுடன் இணைந்துவிட்டதே சரி என்று தோன்றுகிறது.
இந்த அரசியல் களத்தில்  எப்படி நிலவரம் இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  அரசியல் கட்சிகளுடன் கொஞ்சவேண்டியவர்கள் வாக்காளர்கள்.  கொஞ்சியபடியே நெஞ்சிருந்துவிட்டால் கோடையென்றாலும் குளிர்காலமாகுமா? 

An external software (virus) supplies unwanted dots on this post and other posts as well. If the post appears bad on your screen, please reload your browser.  We have corrected some.

கருத்துகள் இல்லை: