நெடும்பல்லியத்தனார்
என்பவர் ஒரு சங்கப்புலவர்.
சங்ககாலத்திலும்
பல வாத்தியக் குழுக்கள் இருந்தன/ அப்போதிருந்த இசைக்கருவிகளை அவர்கள் இசைத்தனர். அப்போது அவை குறைவு என்று எண்ணலாகாது, யாழ்போலும் சில இப்போதில்லை. வீணை என்பது வேறு என்ப.
இயம் என்ற தமிழ்ச்சொல்
இசைக்குழுவைக் குறித்தது. இச்சொல்தான் வாழ்த்தியம் > வாத்தியம் என்ற சொல்லில் இருக்கிறது.
இயம் என்றால் பல்
கருவிகள் ஒன்றாகச் செயல்படுவது என்று பொருள்.
கூத்துக்கும் இயம் இன்றியமையாது தேவைப்பட்டது. எனவே இயங்களை இயக்க அறிந்தவர்கள் பலர் அப்போதிருந்தனர்.
இயைதல் பல கருவிகள்
இணைந்தொலித்தல்; இயை > இயம். ஐகாரம் கெட்டு அம் விகுதி புணர்ந்தது எனினுமாம். இய என்பது உரிச்சொல். அடிச்சொல் என் க. இயை என்பதினின்று இசை என்பது தோன்றியது. யகர சகரப் போலி/ பல சொற்களில் இத்தகு திரிபு நிகழும்.
நெடும் பல்லியத்தனார்
என்ற பெயர் அவர் பல இயங்களை உடையராய் இருந்தாரென்பதைத் தெரிவிக்கிறது இவற்றை இயக்குவது அவர்தம் வாழ்க்கைத் தொழில் என்று
தெரிகிறது; அவர் தம் தொழிற்சிறப்பாலே அறியப்பட்டவர்; அவர் இயற்பெயர் அறியோம். அவர்
உயரமானவர் போலும் அவரினும் உயரம் குறைந்த இயம் இயக்குவோர் இருந்தனர் போலும். நெடும்
என்ற அடைமொழி உள்ளவராதலின்..
அக்காலத்தில் அவர்
மிகுபுகழ் படைத்தவராக இருந்தமையின் அவர் இயற்பெயரால்
அறியப்படுதலின்றி அவர்தம் தொழில் அதன் திறம் இவைகொண்டே அறியப்பட்டார்.
சங்கப்புலவர் ஆதலின், சிறந்த செய்யுள் இயற்று திறனும் உடையராய் இருந்தார்.;
அவர்தம் பாடல் புறநானூற்றில் உளது. 64-வது பாடல் காண்க. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதியை “ பகைப்புலம் மரீஇஅய தகைப்பெருஞ் சிறப்பினன் என்று அவர் புகழ்கிறார். ஒரு
பஞ்சகோலம் வெளிப்படுத்திய விறலியைப் பார்த்து நீ முதுகுடுமியிடம் சென்று பரிசில் பெறுக;
உன் வறிய நிலை உனக்கு மாறிவிடுமென்று அவர் பாடியுள்ளார்., அத்தகு வள்ளன்மை அவனது ஆகும்.
இது இடுகைசெய்யப்பட்டும் கைகூடவில்லை. இது மீள்பதிவு.
பிழைகள் இப்போது கவனிக்கபடா. பின்.
Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக