திங்கள், 11 செப்டம்பர், 2017

பிரவேசம்



பிரவேசம் என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்யலாம்.

பிர என்பதொரு முன்னொட்டு என்பது இலக்கணியர் சொல்வது.  ஆனால் இது “புற(ம்)”  என்ற சொல்லின் திரிபிலிருந்து வருகிறது.
புற > ப்ர  > பிர

இதில் வரும் திரிபு  எளிதாக உணரக்கூடியது ஆகும்.    ஆனால்  வேசம்  (ஏசம் ) என்பதென்ன?

பிரவேசம் என்றால் வெளியிட்த்திலிருந்து ( புறம்)  உள்ளுக்குச் செல்லுதல்.  ( உள்ளே செல்லுதல் ),  ( உள்ளுக்கு என்பது பேச்சில்.  அதுவும் சரிதான்.  )

ஏசம் என்பது  ஏகு+ அம் என்பதன் திரிபு.  தானே வழக்கில் திரிதலும் திரிக்கப்படுதலும் ஒன்றுதான் என்று வைத்துக்கொள்க.  ஏகு என்பது ஏசு என்று திரிந்தது.   ஏகுதலாவது செல்லுதல்.

புற ஏகு = பிர ஏகு =  பிர ஏசு  >  பிரவேசு   வினையாக்க விகுதியாகிய இ என்பது சேர்த்தால் பிரவேசி  ஆகிறது.   அம் சேர்த்தால் பிரவேசம் ஆகும்.

இங்கு கூறப்பட்ட திரிபில்   கு என்பது சு ஆனது.  ககரச் சகரத் திரிபுகள் சிலவற்றை அடுத்தடுத்து வரும் இடுகை ஒன்றில் காண்போம். 

பிரவேசம் என்பது செந்தமிழுக்காகப் படைக்கப்பட்டது அன்று.  ஆனால் இங்கும் வழங்குகிறது.

.


கருத்துகள் இல்லை: