திங்கள், 25 செப்டம்பர், 2017

சம்பாதி - சொல்லுருவாக்கம்.


சம்பாதித்தல் என்ற சொல்லினமைப்பைப் பார்ப்போம்.

இதில் உள்ள முதல் சொல் சம்பா என்பது. இது ஒரு நெல்லின் பெயர்.
ஊழியர்களுக்கு முன் காலத்தில் கூலியாகக் கொடுக்கப்பட்டது  சம்பா நெல் ஆகும்.  உழைத்தவன் சம்பாவை ஊதியமாகப் பெற்றான்.“~தித்தல் “ என்பதில்  ~தல் என்பது தொழிற்பெயர் விகுதி.~தி என்பதற்கே நாம் எங்ஙனம் அமைந்தது என்று கண்டுபிடிக்கவேண்டும்.

இது முன் காலத்தில் சம்பா பகுதித்தல் என்று சொல்லப்பட்டது. ஒருவனுக்கு உரிய சம்பா விளைச்சலின் பகுதியை அவன்பெற்றுச் செல்லுதலே சம்பாதித்தல்.

சம்பா பகுதித்தல் என்பதில் பகு என்பது இடைக்குறைந்தது.

ஆகவே  - தித்தல் என்ற எஞ்சிய சொல் சம்பாவுடன் ஒட்டிக்கொண்டது.-தல் என்பதை விகுதி என ஒதுக்கிவிட்டால்,  -தி மட்டுமே ஒட்டியதாகக் கூறலாகும்.

ஒம்னிபஸ் என்பதில் ஒம்னி என்ற சொல் போய், பஸ் என்ற இலத்தீன் விகுதிமட்டும் நின்று இன்று பேருந்தைக் குறித்ததுபோலும் நிகழ்வு இதுவாகும். ( பகுதி-த்தல் என்பதில் ~தி மட்டும் எஞ்சியது).

பகுதி  என்பது தொழிற்பெயராதலின் மீண்டும் விகுதி பெறாது என்று வாதாடலாம்.  அதாவது முயற்சித்தல் என்பதுபோல் தவறான அமைப்பு  எனலாம். தவறாய்ச் சமைந்த பிள்ளை என்றாலும் பிறந்தபின் கொல்லுதல் ஆகாது.

தொழிற்பெயரானபின் மீண்டும் வினையாக மாறிய சொற்களைக் கண்டுபிடிக்கலாமே........ விழிப்புடன் படிக்க.
மொழி எப்போதும் இலக்கணப்புலவர் கையிலேயே இருப்பதில்லை. புலவர்கள் புறக்கணித்துப் போனபோது மக்களே மொழி அழியாது காத்தனர். அவர்களுக்கு இலக்கணவிதி தெரியாது. இலக்கணவிதி விற்பனையாகாத சரக்கு ஆனது.

இதுவே சம்பாதித்தலின் வரலாறு. இதைப் பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

சில சொற்களில்  ~தி வினையாக்கவிகுதியாகவும் வரும்.

மி >  மிதி.    மி = மேல்.
உ > உதி.      உ= முன். (முன்னெழுதல்).

ஆகவே  சம்பா > சம்பாதி எனினும் அமையுமே.

will review to edit (generated errors).


கருத்துகள் இல்லை: