திங்கள், 4 செப்டம்பர், 2017

சாமான் ( உயிரற்ற பொருள் வகைகள் )



சாமான்  என்னும் பொருளைக் குறிக்கும் சொல் அமைந்தவிதம் காண்போம்.

ஆங்கில மொழியில் inanimalte   objects  என்றொரு சொல் உள்ளது.  இதன் பொருள் “உயிரற்ற பொருட்கள் “  என்பது .   இத்தகைய பொருட்களை  உயிரற்றபொருட்கள் என்றே குறிப்பிடலாம் என்றாலும்,  கடை, பொருட்கிடங்குகள் முதலியவற்றில் இப்படிச் சொல்வது ஏற்புடையதாகத் தெரியவில்லை. பண்டக சாலைகளில் உயிர்ப்பொருள்கள் எவையுமில்லை -  வேலைசெய்யும் மனிதன் தவிர. மக்களின் பயன்பாட்டுக்கு  ஓர் இயல்பான சொல் தேவைப்பட்டது.

பொருள் என்ற சொல், பல விரிந்த அர்த்தங்களை உடைய சொல்.  அதையே சாமான்களுக்குப் பயன்படுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.
ஆகவே ஒரு புதிய சொல் பிறப்பிக்கப்பட்ட்து.

சா   -  உயிரற்ற.
மான் -   ஒத்தது. 

மானுதல்= ஒத்தல்.  மானுதலென்பது மதிப்புடையது
என்றும் பொருள்பட்டதால் இதன்  காரணமாகவும் மான் என்ற இறுதி மிகவும் பொருந்தியது. யாரும் பிரித்துப்பார்க்காத நிலையில் சாவு, ஒத்தது என்ற  அர்த்தங்கள் தோன்றி யாரையும் வருத்தவில்லை!!

மனிதனின் மதிப்பைக் குறிக்கும் மானம் என்ற பழைய சொல்லும் மான்
என்பதனடிப் பிறந்தசொல்லே.

ஆகவே  சாமான் என்ற சொல் வழக்கில் விடப்பட்டது.
இது வேற்றுமொழிச்சொல் என்று நினைத்துக்கொண்டனர்.   அதனால்  ஏதும் நட்டமில்லை. அப்போது ஒரு சொல் வேண்டுமேதவிர
மொழிப்பிறச்சினை  (பிரச்சினை அன்று ) எழவில்லை.
படித்து மகிழ்க.

இது ஜாமான் என்று எடுத்தொலிக்கப்பட்டது பெரும்பான்மை.  சீனாவிலிருந்து நாமறிந்துகொண்ட சீனி, கேரளத்தில் ஜீனி என்றானது போல.   சீனா > சீனி.   இது சில் > சின் > சீனி ( சிறு துகள்கள்)  என்றானது என்பாரும் உளர். எவ்வாறாயினும் இது வழக்கிலுள்ள சொல்லே.

பணமில்லாதவன் பிணம் என்ற கருத்தினின்று தோன்றியது சா+ மான்+ இயம் என்பது.  இ+ அம் = இயம். இருவிகுதி ஒட்டு.  சாமானியம் - சாவினை அல்லது செத்தோரை ஒத்த தன்மை. மக்களாயின் அவர்கள் சாமானியர், ஏழைகள்.


மறுபார்வை:  18.4.2019

கருத்துகள் இல்லை: