புதன், 22 ஆகஸ்ட், 2018

சீடன் என்ற சொல் வந்த விதம்.

ஒரு குருவென்னும் மனிதன், தன் சீடனின் மூளையைத் தீட்டித் தான் அகன்றபின்பு  சீடனும்  ஒரு குருவாகும் தகுதியை உண்டாக்குகிறான். எந்தக் குருவும் மேலுலகிலிருந்து நேராக வருவதில்லை.  அவன் பெற்ற அறிவைச் சீடனுக்கு வழங்கிப் படிப்பிக்கின்றான் என்பதே உண்மை.

சீண்டுதல் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை முதலில் அறிவோம்.

சீண்டுதல் என்பது தீண்டுதல் என்பதன் திரிபு.   சகரத்தில் தொடங்கும் சில சொற்கள் தகரத் தொடக்கமாய் இருந்தவை.   தீண்டுதல் > சீண்டுதல். இனி சகரம் தொடக்கம் எனினும் இழுக்கில்லை.  ச>< த ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.  ஒன்றுக்கு இன்னொன்று மோனை.

தூங்காதே தம்பி தூங்காதே  நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.

பட்டுக்கோட்டை பாட்டு.  தூ > சோ மோனையானது.
இக்கவி மிக்க எதுகை மோனை கூர்அறிவுடையவர்.

எல்லாப் பாடல்களிலும் இவை போலும் மோனைப் புனைவு காணலாம்.

சீ  <>  தீ  :  இதுபோல் திரிந்த சொற்களை ஒப்பு நோக்குவோம்.

தம்தம் (  மதங்க ஒலி)  -   சம்தம் >  சந்தம்.

இப்படி மதங்க ஒலி குறித்த சொல் பின் அதுபோன்ற பிற இசையொலிகளையும் குறிக்க விரிந்தது.

தம் பந்தி >  சம்பந்தி.

பல் > பல் து > பற்று.   பல் து > பந்து.   பல்து > பந்து > பந்தம்;.
தம்பந்தம் > சம்பந்தம்.

தனி > சனி (  இதன் பொருள் தனிச்சிறப்பு உடைய கோள் என்பது ).

கோள்களில் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் என்பர். இறைவன்> இறைவர்> ஈஶ்வர்> ஈஸ்வர்> ஈஸ்வரன்.

இவற்றில் சில நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள.

இப்படித் திரிந்ததுதான் தீண்டுதல் > சீண்டுதல்.

இன்னும் பல திரிபுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே அடியாக உள்வாங்கிக் கொள்ளுதல் கடினமே. ஆகவே இவை போதுமானவை.

இரண்டு தன் சேர்ந்தால் ஒரு தம் ஆகிறது.  இப்படித் தொடங்கியதே இப்பன்மை வடிவம்.

தன் உறவினர்  -  தம் உறவினர் (பன்மை)   தன் > தம் பின்னர் சம்.

ஆகத்  தீண்டுதல் என்பதற்கும் சீண்டுதல் என்பதற்கும் உள்ள திரிபுத் தொடர்பையும் பொருண்மை அணுக்கத்தையும் உணர்ந்தோம்.

என்னைச் சீண்டாதே என்றால் அடிக்கடி தொட்டுத்தொட்டுத் தொந்தரவு கொடுக்காதே என்பதுதான் அர்த்தம்.

இனி, ஒரு குருவானவர் ஒரு சீடனுக்கு நெற்றியைத் தீண்டிச் "சீடனாக்கி"க் கொள்கிறார்.    ஆகவே இந்தத்  தீட்சை பெறுபவன் சீடனாகிறான்.

தீண்டு > சீண்டு > சீடு  ( இது இடைக்குறை).

சீடு+ அன் = சீடன்.   குருவினால் தீண்டப் பெற்ற பாக்கியவான் சீடன்.

பகு> பகு+ இயம் = பாக்கியம்.  (  உலகில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு; இவற்றுள்  நற்பாகத்தைப் பெற்றவன் பாக்கியவான்.)  பாக்கிய + ஆன் = பாக்கியவான், வகர உடம்படு மெய்.  வான் என்பது ஒரு தனி விகுதியன்று.
பாக்கியவான் : நற் பகுதியைப் பெற்றவன்.

சீ > சீத்தல்.   தேய்த்தல், கூராக்குதல்.  ( தொடுதல் கருத்து.  தொடுதல் பலவகை. ஒரு முறை தொடுதல்; பல முறை தொடுதல்;   தொட்டுத் தொடர்தல், இதை விளக்கவேண்டாம்.  தெரிந்துகொள்க.)

சீ > சீடு ( டு ஒரு விகுதி ) > சீடன்.  (  குருவினால் புத்தி கூராக்கப்படுபவன்).
குரு சீடனின் நெற்றியைத் தேய்த்து விடுகிறார். எலாம் பொருத்தமே.

டு இறுதி வரும் சொற்கள் சில 

பா ( பொருள்: பாடல் )  :  பாடு.  (பாடுதல்)
மூ ( அடிச்சொல்)  ( பொருள்:  மேல் உள்ள திறப்பினை பரக்க அடைத்தல்)
 மூ >  மூடு.
டு விகுதி வினை பெயர் என இரண்டிலும் வரும்.

மற்றவை:

சீடு > சீண்டு ( இடைமிகை).

சீண்டு ><  தீண்டு.   இரண்டும் இருவழித் தொடர்புள்ள சொற்கள்.

சீடு > சீடு+இய > சீடிய > சிஷ்ய.

சீடு > சீசு > சீசப்பிள்ளை ( சிற்றூர் வழக்கு).

தீண்டு என்பதன் வேர்ச்சொல் தீள் என்பது.

தீள் > தீள்+து >  தீண்டு.
தீள் >  தீள்+து > தீட்டு.
தீள் + சை =  தீட்சை.   (. > தீக்ஷை )  குரு சீடனைத் தீண்டிப் பற்றுறுத்தல்).

குறிப்பு:  ஆரியர் என்பது வெள்ளைக்காரன் கூறினமாதிரி ஓர் இனப்பெயர் அன்று.  அப்படி ஓர் இனம் இல்லை.  எல்லா ஊர்களிலும் வெளி நாட்டினர் வந்து தங்குவதென்பது இயல்பானதே. பல நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கடல் வழியாக வந்தவர்களும் நில வழியாக வந்தவர்களும்  இருந்தனர்.  திருமணம் செய்துகொண்டு கலந்துவிட்டனர். ( சீனப்படைகளுடன் வந்து வழி மாறி இந்தியச் சிற்றூரில் தங்கித் திருமணம் செய்துகொண்டு பிள்ளை குட்டி பெற்று மூப்பும் அடைந்து அண்மையில்தான் ஒரு சீனர் சீனாவிற்குப் போய்ச் சேர்ந்தார்.  இதுபோல் எத்தனையோ.  அலக்சாந்தரின் படைகளுடன் வந்தோர் பலர். திரும்பிச் சென்றுவிட்டனரா?  யாரறிவார்?  ஆப்கானியர் வந்திருப்பர்.)
ஆனால் ஆரியர் யாருமில்லை.
ஆர் என்பது தமிழில் ஒரு பலர்பால் விகுதி.  உயர்திணை குறிப்பது. பணிவு பகர்வது.  ஆர் என்ற வினைச்சொல்லும் உண்டு.  இவற்றைக் கூறும் தனி இடுகைகளைப் படியுங்கள்.
சமஸ்கிருதம் என்பது பெரும்பாலும்  சாமி கும்பிடும்போது  பயன்படுத்திய மொழி.  சாமிகளை மரத்தடியில் வைத்துக் கும்பிட்டனர். பெரும்பாலும் கோயில் கட்டியவர்கள் மன்னர்களே, மரத்தடிப் பூசாரி,  பிறர் கட்டிய கோயிலுக்குள் போனபோது அதே வழிபாட்டு முறையே வழக்கில் தொடர்ந்தது.  வடமொழி என்பது மரத்தடிமொழி என்று திரு வி க கூறியது சரியானதுதான்.  ஆரியர் வரவுமில்லை. சமஸ்கிருதம் அப்படிப்பட்டவர்களால் பேசப்படவும் இல்லை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மீகி ஒரு வால்மீகி சாதியான்;  இன்று தாழ்குலம்.  பாணினி வடமொழி இலக்கணம் இயற்றியவன், ஒரு பாணன். பாண்+இன்+இ = பாணினி.   இது வெள்ளைக்காரனுக்குத் தெரியவில்லை.   புலவர்கள் குலப்பெயர்களால் அக்காலத்தில் அறியப்பட்டனர். வேதவியாசன் செம்படவன்.  சமஸ்கிருதம் எப்படி வெளிநாட்டு மொழி ஆனது.?  உரோமாபுரியின் காலத்திலே தமிழரும் பிறரும் அங்கு சென்று இந்தியச் சொற்களைத் தந்து உதவியுள்ளனர். (சென்னைப்பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசியர் ஆய்வு முடிவு ) ஆரியர் வந்தனர் என்ற தெரிவியல் (  தியரி)  நிறுவப்படவில்லை.

சமஸ்கிருதத்தில் உள்ள வெளிநாட்டுச் சொற்கள் பெறப்பட்டவை. ஒரு மொழியில் வெளிநாட்டுச் சொற்கள் இருந்தால் அது அக்காரணத்தினால் வெளிநாட்டினர் மொழி ஆகிவிடாது.  மூன்றில் ஒரு பகுதி திராவிடச் சொற்கள் அதில் உள்ளன; ( டாக்டர் லகோவரி).  சமஸ்கிருதம்  தென்னகத்து ஒலியமைப்பை உடையது ( சுனில் குமார் சட்டர்ஜீ).

நாம் எடுத்து விளக்கிய சொற்கள் சொற்பமே. அறிக. சமஸ்கிருதத்தில் சொற்கள் 170000 க்கு மேல் உள்ளன. நாம் இங்கு விளக்கியுள்ள சொற்கள் மிகவும் குறைவு.   மொத்த எண்ணிக்கையை எட்டமுடியாது. அது ஒருவர் இருவர் செய்து முடிக்கும் வேலையன்று,

பின் செப்பம் பெறும்.








 

இல்லாதது அல்லாதது: சொற்பம் அற்பம், தீவகம் அல் பு அம்!!

அல்லாதது  இல்லாதது என்பவற்றுள் பொருள் வேற்றுமை சிறிது உளதென்பதை நீங்கள் அறிவீர்.    ஒன்றை இல்லை என்றால் அப்பொருள் இவ்வுலகின்கண் காணமுடியாதது என்று கொள்ளுதல் வேண்டும்.   அல்லாமையோ  அதுவன்று, பிற என்று சொல்வதாகும்.

மிக்கப் பழங்காலத்திலே  அல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தமிழர் சொற்களைப் புனைந்துள்ளனர்.   உயர்திணை,   அஃறிணை என்னும் பகுப்பில் அஃறிணை என்ற சொல்லிலிருந்து அது  " திணை அல்லாதது "  என்று பொருள்தருதலை நன் `கு உணர்ந்துகொள்ளலாம்.  உயர்திணைக்கு உயர்  என்னும் மேன்மைக் குறிப்பு பயன்படுத்தப்படுவதால்,  அதன் மாற்றுக்கு "தாழ்திணை"   என்று பெயரிடப்படவில்லை என்பதையும் உன்னுக.   தாழ்வு என்று வகைப்படுத்தாமல் அஃறிணைப் பொருள்களைத் திணைப்பகுப்பில் உட்படுத்தாமல் திணை அல்லாதவை என்று மட்டுமே பகுத்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  இது எங்ஙனமாயினும்  "அல்" என்னும் சொல் ஈண்டு பயன் கண்டுள்ளமைமட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.

தீபகற்பம் என்ற சொல்லை ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.

இனி நாமெடுத்துக்கொண்ட அல்பம் என்ற சொல்லுக்கு வருவோம். கணக்கில் கொள்வதற்குத் தரம் அல்லாத பொருளே  அல்பம் ஆகும்.   அல்+பு+அம் = அல்பம்.  இது புணர்த்தப்படின் அற்பம் என்றாகும். தமிழிலிது புணர்த்தப்பட்டே வழங்குவது ஆகும்.   இச்சொல் பேச்சு வழக்கில் அல்ப்பம் என்று வழங்கும்.   லகர ஒற்றும் பகர ஒற்றும்  அடுத்தடுத்து நிற்றல் செந்தமிழ் முறையன்று ஆதலின் தமிழியல்பு பற்றி அது அற்பம் என்றே வரவேண்டும்.

இதே முறையை மேற்கொண்டு  சொல்பம் என்ற சொல்லும் பயனுக்கு வந்துள்ளது.  சொல்பமாவது  சொல்லத்தகுந்த எண்ணிக்கையிலானது என்பதுதான்,  இது சொல்லுதல் என்னும் வினையடித்தோன்றிய சொல்.  அற்பம் என்ற சொல் போலவே இதுவும் புணர்த்தியே சொல்லாய் அமையும்.   சொல்பம் என்னாமல் சொற்பம் ஆகும்.   அதுவே செந்தமிழியற்கை.

அயல் என்ற சுட்டடிச் சொல்லிலே  அல் வந்துள்ளமை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அயல் என்றால் அங்கு அல்லது அவ்விடத்தினது அல்லாதது என்பதுதான்.  அ+அல் என்று எளிமையாகவே சொல் அமைந்தது,  அன்னியன் என்ற சொல்லும் நல்லபடியாகப் புனைந்ததே.   நீயும் நானுமல்லாத பிறன் என்பது பொருள்.  இதை அல்+ நீ + அன் =  அன்னியன் ஆனது.   இதில் நீ என்பது நி என்று குறுகிற்று.  பழம்+நீ என்பது பழநி என்று குறுகினமைபோலுமே இதுவாம். நானும் நீயுமலாதான் அன்னியன் என்பது மிகநன்றாய புனைவு ஆகும்,  இது அந்நியன் என்றும் எழுதப்படும்.  நீ என்பதே நி என்று குறுகினமையால் அந்நியன்  என்று  எழுதுவது பொருத்தமாகத் தோன்றக்கூடுமெனினும்,  அல்+நி என்பது அன்னி என்று புணருமாதலின் அன்னியன் என்பதே நலமாம்.

அல் என்பது கடைக்குறைந்து அ என்று வந்து ஒரு முன்னொட்டாகப் பிறமொழிகளையும் வளப்படுத்தியுள்ளது.   எடுத்துக்காட்டு:  நீதி -  அநீதி எனக் காண்க.




செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பிரச்சினை.

இன்று பிரச்சினை என்ற சொல்லினையும் அறிந்து இன்புறுவோம்.

சினை என்பது தமிழில் உறுப்பு அல்லது உள்ளடங்கிய பகுதி என்று பொருள்தரக்கூடிய சொல். ஒரு மீனில் அதன் குஞ்சுகளைப் பிறப்பிக்கும் சிறுசிறு முட்டைகள் உள்ளன. இதனை உயிரியல் வகுப்பிலோ அல்லது மீன் வெட்டி எடுக்கும் இடங்களிலோ கண்டிருப்பீர்கள். இது மீனில் உள்ளிருக்கும் ஒரு பகுதி.  மீன் குஞ்சுகளைப் பொரித்தவுடன் இது மாறிவிடும். அப்புறம் மீன் மீண்டும் சினைப்பட்டாலே இவ்வுறுப்பு அங்கு உண்டாகியிருக்கும்.


சினை என்பது அது மட்டுமன்று; நம் கைகால்களும் உறுப்புகளே ஆதலால், இலக்கணத்தில் இவையும் சினைப்பெயர் என்றே குறிக்கப்பெறும்.  அதாவது கை கால் என்பன உறுப்பின் பெயர்கள்.

ஒரு நிகழ்வில் பிற சினை உண்டாவதென்றால்,  முன்னில்லாத புதிய ஒரு பகுதியோ உறுப்போ முளைத்துவிட்டது அல்லது தோன்றிவிட்டது என்று பொருள்.  இப்படித் தோன்றிய புத்துருவினால், நன்மையும் இருக்கலாம்; தீமையும் இருக்கலாம்; பெரும்பாலும் தீமை ஏற்பட்டாலே பிற சினை தோன்றிவிட்டது என்று கூறுவோம்.

இது பழந்தமிழ் வழக்கு.  இந்த பிற சினை என்பது பிற்காலத்தில் ஒரு சொல்லாகி "பிறச்சினை"  என்ற புதிய சொல் உருவானது.   பிற சினை என்ற இரு  சொற்களும் ஒரு வாக்கியத்தில் இரு சொற்களாக இருக்குமானால் அங்கு சகர ஒற்று (ச்) தோன்றாது.  அது ஒரு சொன்னீர்மைப்பட்டு புதுக்கிளவி ஆனபடியால் ச் என்ற ஒற்று உள் நுழைந்து "பிறச்சினை"  என்று ஒலிக்கப்பட்டது.  அப்புறம் தெரியாதவர்கள் இதனை பிரச்சினை என்று எழுதி றகரத்துக்கு ரகரம் மாற்றீடு ஆனது.  அவ்வாறு ஆனவுடன் அதன் பிறப்பு புலவராலும் கூட மறக்கப்படுவதாயிற்று.

பிற சினை > பிறச்சினை > பிரச்சினை > பிரச்னை!

இனிப் பிரஸ்னம் என்றும் ஒலிக்கப்பட்டு அயற்பூச்சு மேற்கொண்டது.

இந்தச் சொல் வரலாறு அறிய மகிழ்வு தருமே.

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சொல்லாக்கமும் வட\ திசைச் சொற்களும்

நாம் தமிழ் வாத்தியாரிடம் போய்த் தமிழ்ப் படிக்க அமர்ந்தவுடன் அவர் நமக்கு அறிவு கொளுத்தும் பொருட்டும் மொழியினை அறிவிக்கும் பொருட்டும் பல சொற்களைச் சொல்லிக்கொடுப்பார்.  அவர் பெரும்பாலும் நல்லவராகவே இருப்பார்.  அவருக்கு நாம் அதிகம் தொல்லை கொடுப்பதில்லை அல்லவா.....

நான்`கு வகைச் சொற்களையும் சொல்லுவார்.  இயற்சொல்,  திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பார்.

திசைகள் நான்`கு எண்ணங்கள் உள்ளன.  இன்னும் எட்டு பதினாறு என்று சொல்லிக்கொடுக்கும் வேறு வாத்தியார்களும் உள்ளனர். திசைகள்  என்பன  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு  என்று பொதுவாக நாலுதாம்.

நாலு என்று சொல்லக்கூடாது; நான்`கு என்றுதான் சொல்லவேண்டும் என்று சில வாத்தியார்கள் சொல்வர்.  சரியானது என்று அவர்கள் கருதிய சொல்வடிவத்தினை நம் மூளைக்குள் ஏற்றும்பொருட்டு அவர்களிற் பலர் படாத பாடு பட்டுள்ளனர். பாவம்.

நால் >  நாலு   இது உகரச் சாரியை பெற்றது. இப்படிச் சாரியை பெற்றதில் தவறேதும் இல்லை.  இந்த உகரச் சாரியை பல மொழிகளில் பல சொற்களில் வருகிறது.   ராஜு என்பதைத் தெலுங்கில் ராஜுலு, ரகு என்பதைத் தெலுங்கில் ரகுலு என்று உகரத்தில் முடித்துச் சொன்னாலும் அங்கும் உகரச் சாரியை வந்துவிடுகிறது.  பெங்களூர் என்பதைப் பெங்களூரு என்று சொன்னாலும் உகரத்தில் முடிந்து சாரியை வருகிறதே! இதைப் பிற்பாடு தான் கண்டு நாம் மகிழ்வு கொண்டோம்.

நால்  >  நாலு.
நால்+கு = நான்`கு.

இரண்டும் ஒன்றுதான்.  உகரச் சாரியை தாழ்வுமில்லை; குகரம் இங்கு உயர்வுமில்லை.  உகரம் வந்து வாலாகினாலும் குகரம் வந்து வாலாகினாலும் பொருளில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை.  மூழ் என்ற அடிச்சொல்லுடன் கு இணைய, வினைச்சொல் ஆக்கம் பெறுகிறது.  ஆனால் ஆழ் என்ற சொல் கு இல்லாமலே வினைப்பொருள் தருவதால் அங்கு நாம் கு என்பதைச் சேர்ப்பதில்லை.  தேங்கு  தாங்கு என்பவற்றில் கு வந்து வினைப்பொருள் விளைக்கின்றது. தே தா என்று மட்டும் சொன்னால் பொருள் மாறிவிடும்.  தே என்பது தேனையோ தேநீரையோ குறிக்கும். தேமதுரத் தமிழோசை என்ற தொடரில் தே என்பது இனிமைப் பொருளில் வருகிறது,

தா என்ற அடிச்சொல்லுடன் கு சேர்த்து வலித்தால் :   அதாவது வல்லெழுத்துக் கொண்டு  தா+கு =தாக்கு என்றால் வேறு பொருளும்  அதே கோவையில் மெலித்தால் தாங்கு என்று இன்னொரு பொருளும் கிட்டுகிறது.  இப்படி அருமையாக அமைத்திருக்கிறார்கள் சொற்களை.  ஆனால் அதே குகரம்தான்.

சொல்லமைப்பில் மிகுந்த கெட்டிக்காரர்கள் பழங்காலத்தில் இருந்தனர் என்று இதன் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

திசை என்பது ஒரு திசையிலிருந்து தமிழுக்குள் வந்த சொல்; அல்லது தமிழிலும் திசையிலும் ஒரே காலத்தில் வழங்கும் சொல்.  தமிழிலும் வழங்குகின்றது; திசையிலும் வழங்குகின்றது.  திசையிலிருந்து இங்கு வந்தது என்பது நாம் அறியாதது.  அங்கிருந்து இங்கும் வந்திருக்கலாம்; இங்கிருந்து அங்கும் போயிருக்கலாம்.  எது எங்கு உண்டாகியது, எப்படி எங்கு வந்தது என்று நாம் பார்க்கவும் கேட்கவும் செய்யாவிட்டாலும்,  சிலர் அது அங்கும் வழங்குவதால் நாம் இங்கு வழங்கக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்திருப்பார்கள் போலிருக்கிறது.  அதனால் தொல்காப்பியனார்: அது அங்கு இருந்தால் பின் இங்கும் இருந்தால் அது திசைச்சொல் அதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் என்று நாம் அறிகிறோம்.  அங்கிருப்பவர் அது இங்கிருந்த சொல் என்று ஒதுக்க,  இங்கிருப்பவர் அது அங்கிருந்த சொல் என்று ஒதுக்க இவர்கள் சண்டையில் சொல் வழக்கொழிந்து போய்விடாமல் தொல்காப்பியனார் காப்பாற்றியுள்ளார்.  இது டோக்லாமிலுள்ள சொல்  என்று சீனர்கள் சொல்ல, இல்லை, இது சீனாவில் உள்ள சொல் என்று டோக்லாமியர் சொல்ல,  சரிசரி, ஏன் இந்தச் சண்டை, நாமே அதை மேற்கொண்டு பிறச்சினையை (பிரச்னையை) முடித்துவைத்துவிடுவோம் என்று சீனா நடவடிக்கை எடுத்தால், தொல்லை ஒழிந்துவிடும் அன்றோ? ஒரே நாடு உலகத்தை ஆண்டுவிட்டால் திசைச்சொற்களும் இருக்கமாட்டா, வடசொற்களும் இருக்கமாட்டா என்பது சரியாகுமா?  எமக்கு உலக அரசியல் தெரியவில்லை.

வடசொல் என்றால் மரத்தடியில் வழங்கிய சொல் என்று திரு வி.க சொன்னார்;  தமிழ் என்றால் தமில்; தமில் என்றால் தம் இல்லத்தில் வழங்கிய சொல் என்று கமில் சுவலபெல் கூறினார்.  இல்லத்துக்கு வெளியில் இருந்தது மரம்;  மரத்திற்கு அப்பால் இருந்தது இல்லம்.  சரி, இன்னொரு நாள் சந்தித்து நாம் உரையாடுவோமே!
பின் திருத்தம் பெறும்


கோஃபி ஆநான் மறைவு இரங்கல்

உலகெங்கும் போரின்மை உயர வேண்டும்
ஊரெங்கும் ஊணுண்மை உறுதி வேண்டும்
விலகில்லாக்  கல்விநிலை விளைய வேண்டும்;
வீடுதொறும் குடும்பங்கள் மகிழ வேண்டும்;
சொலவாகாப் பன்னன்மை சுனையூற் றாகிச்
சூழுலகில் வாழ்வுயரப் பழிதீர் பாடு
பலகாலம் பட்டொளிர்ந்த பகலோன் ஆநான்
பார்நீங்கிச் சென்றனரோ பதறும் நெஞ்சே

பொருள்:

போரின்மை  :  அமைதி,  சமாதானம்
ஊணுண்மை :  சாப்பாடு உள்ளதாவது;
விலகில்லா : தவிர்த்தல் இல்லாத; இல்லையென்னாத
சொலவு ஆகா : இன்னும் உரைக்க முடியாத; எண்ணற்ற
பகலோன் : சூரியன்
ஆநான்: கோஃபி ஆநான் முன்னாள் ஐ நா பொதுச்செயலாளர்.

 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சமுத்திரம்: முன் ஆய்வாளர்கள் குழப்பங்கள்

சமுத்திரம் என்ற சொல்லின் ஆய்வுகளில் ஏற்பட்ட சில குழப்பங்களையும் அறிந்துகொள்வோம்.

திரை என்பது தமிழில் அலை என்றும் பொருள்படும்.  அலையெனப் பட்டது  ஒருமை ஆயினும் பன்மையும் குறித்து   அவ்வலைகள் வீசும் கடலை ஆகுபெயராக வந்து குறிக்கும்.  இங்கனம் கடலெனப் பொருள்படவே முத்திரை என்பது மூன்று கடல்கள் என்று பொருள்தரும். மூன்று கடல்கள் என்று பொருள்பட்டால் அதற்கப்புறம் அவை ஒன்று கூடுதலைக் குறிக்க சம் என்ற முன்னொட்டினைப் பெற்று  சம் முத்திரை >  சம் முத்திரை அம் >  சம் முத்திர அம் .> சமுத்திரம் என்று ஆனது என்பது  ஓர் ஆய்வின் ஓட்டமாகும்.சம் என்பது சமை என்பதன் திரிபாக ஒன்றுக்கு மேற்பட்டவை கூடுதலைக் குறிக்கும். சமையல் முதலிய காரியங்களில் பல் பொருள்கள் கூட்டியே ஆக்கம் பெறுகின்றன எனப்படுவது சரியே ஆகும். சமை என்பதில் ஐ குறைந்த நிலையில் சம் என்ற முன்னொட்டு கிட்டுகின்றது.  சமை என்பதன் முன்னோடி வடிவங்களுக்குள் செல்லவேண்டியதில்லை.

ஐகாரம் வீழ்ச்சி அல்லது கெடுவது தொல்காப்பியனாராலும் உரைக்கப்பட்ட நிகழ்வே ஆகும்.  இதைப் பண்டை நாட்களிலே ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.   திரை என்பது திர் என்று குறைவதும் சமை என்பது சம் என்று குறைவதும் சொல்லமைப்புகளில் இயல்பானதே.

சமுத்திரம் என்பதும் சிற்றூர்களில் வழங்கும் சொல்லே ஆகும். திர என்பதைத் த்ர என்று ஒலிப்பதாலேதான் அது அயல்போல் தெரிகிறது. திர என்பதைத் த்ர என்பது தமிழரல்லாதார் செய்த  குறுக்கமே.  அதனால் அவ்வாறொலிக்கும் சொல் அயலாகிவிடாது.

மூன்று கடல்கள் கூடாத நிலையில் அவற்றை முத்திரம் என்று இணைத்துக் கூறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அவை தனிக்கடல்களே.  அதனால் கூட்டு என்று பொருள்படும் சம் தேவையற்ற கூடுதல் சொல் ஆகிறது.

முத்தரையர் என்ற சொல்லை ஆய்ந்தவர்கள் அவர்கள் தரையரா அல்லது திரையரா என்று குழம்பியுள்ளனர்.  தரையர் என்றால் தரையில் வலிமையாய் ஆண்டவர்கள் என்றும் திரையர் என்றால் கடலில் வலிமையாய் ஆட்சி செலுத்தியவர்கள் என்றும் பொருள்படும்.   திரையர் என்பதில் உள்ள இகரம் அகரமாதல் சொல்லியலில் இயல்பானதே.

இதைக் கடலாட்சி என்று கூறுவதற்கு அவர்கள் கடலில் செய்த வீரதீரச் செயல்களின் வரலாறு தேவைப்படும்.  இவற்றை அறிந்து இதனை முடிக்கலாம்,  இதை அவர்களின் முடிவிற்கு விட்டுவிடுவோம்.

சா முத்திரை அம் என்பது  ச முத்திர் அம் என்று குறுகிற்று எனினும் இது சிந்திக்கத் தக்கதே ஆகும்.


சனி, 18 ஆகஸ்ட், 2018

சமுத்திரம் - குமரிக்கண்டம் தொடர்பு.

சமுத்திரம் என்ற சொல்.



இன்று சமுத்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்..



இச்சொல்லைப் பலவாறு முன்னைய ஆசிரியர்கள் கண்டனர். சிலர் தமிழன்று என்றும் கூறியுள்ளனர்.



தென்னிந்திய மொழிகளிற் பல பேச்சு வழக்குத் திரிபுகளைக் கொண்டு ஆக்கப்பட்டவை என்றே கூறல் தகும். இவைபோலவே சமஸ்கிருதம் என்றும்வடமொழி என்றும் கூறப்படும் இந்திய மொழியும் தமிழ்ப்பேச்சு வழக்குத் திரிபுகளில் பலவற்றைக் கொண்டுள்ளது. இதைப் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம்..



மூன்று பக்கங்களிலும் கடலினால் சூழப்பட்டது தென்னாடு எனப்பட்ட தென்னிந்தியா. முத்திரம் என்ற சமுத்திரத்தின் இறுதிப்பகுதி சொல் மு+திறம் என்ற இரு தமிழ்ப் பகவுகளின் ஓரமைவே ஆகும். இதன் பொருள் மூன்று பாகங்களிலும் கடல் என்பதுதான். ரகர றகர வேறுபாடு இன்றி வழங்கும் சொற்கள் பல உள்ளான. திறம் - திரம் என்பது அத்தகைய சொற்களில் ஒன்று. இதுவும் முன் இடுகைகளில் காட்டப்பட்டதுதான்.. திறம் என்பது விகுதியாய் வருங்கால் திரம் என்று திரிந்து சேரும் என்பது கண்டுரைக்கப்பட்டுள்ளது..



இவ்வாறாக, சமுத்திறம் > சமுத்திர மென்பதிலுள்ள ச என்பது சா என்ற இன்னொரு தமிழ்ச்சொல்லின் ஒலிச்சுருக்கமே ஆகும். இது முத்திறமும் (மூன்று பக்கங்களிலும் ) கடலென்/றும் கடலுக்குச் சென்றால் சாவு என்றும் பொருள்படுகின்றது. அடுத்தடுத்து இரண்டு கடல்கோள்களாவது நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றபடியால் அதனாலேற்பட்ட கிலியின் காரணாமக அமைந்த சொல்லே சமுத்திரம் என்பதாகும். சா என்பதிலிருந்து அமைந்த சவம் என்னும் சொல்லும் அந்நெடில் குறுகியே அமைந்ததென்பது காண்பீராக.. வினையிலிருந்து பி/ற பெயர்களும் இவ்வாறு அமைந்துள்ளன. தோண்டு> தொண்டை; காண் > கண். தீட்டு (தீட்டுதல் ) > திட்டம். என்ற உதாரணங்களிலிருந்து இவற்றை நன்றாக உணரலாம்.



இச்சொல்லிலிருந்தும் குமரி மூழ்கியதும் காவிரிப்பூம்பட்டினம் மூழ்கியதும் தமிழருக்கும் பிறருக்கும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தன என்பது தெளிவு. காலம் செல்லச்செல்லவே இவ்வச்சம் முதலியன மறைந்தன. மறைந்தபின்னர் வந்த சொல்லாய்வாளர் இதை உணர்ந்திருக்கவில்லை.
கடல் சாகரம் என்பனவற்றுக் கெழுதிய விளக்கம் இங்கு உள்ளது. அதையும் கண்டுணர்க.

http://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_78.html


COMPUTERS AND DATA LOST IN ATTACK.

நேற்று மாலை நம் கணினி மென்பொருள்  கள்ள மென்பொருளால் தாக்குண்டு நிலைகுலைந்து விட்டாலும் இன்று சிங்கையில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஓவிரல் THUMP DRIVES சேமிப்பகத்தில் இருந்த பல கோப்புகளும் அழிந்துவிட்டன என்றாலும் சில காப்பாற்றப்பட்டன.  இன்று கணினி புதுமென்பொருளுடன் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது.

இது புதுமென்பொருளால் எழுதப்படுவது.

உள்புகுந்த கள்ளமென்பொருள் கோப்புகளை அழித்ததுடன் வலைப்பூவுடன் தொடர்பையும் அறுத்துவிட்டது,  இணைப்பை மீட்க முடியாதுபோனதால் புதுமென்பொருள் புகுத்தப்பட்டுக் கணினி புத்துயிர் பெற்றது,



Error  678.
Connection with remote computer could not be reestablished.
Saved data in thump drives 60% wiped out.
Documents mostly wiped out.
Network Adapters were disabled by virus.
AVG Internet Security Lost.
Intel Adapters had their drivers wiped out.
Other damage not known. 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்

அத்தல்  பிகாரிவாஜ் பாய்தலைவர் ;   அந்நாட்டின்
எத்திசையும் போற்றும் இணையற்ற --- உத்தமரே
மெல்லெனும் பேச்சில் மிடுக்கற்ற  மேல்நடப்பில்
சொல்லன்ன செய்துமுடிப்  பார்.

தொண்ணுற்று மூன்றில் தொலைவுலகு சென்றதனை
எண்ணினும் நெஞ்சம் நெகிழுமே --- பெண்ணொன்று
தன்வளர்ப்பு நன்மகளாய்த்   தான்கொண்டார் நாட்டிற்குப்
பொன்வளரப்  பாடுபட்   டார் .     

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

தருதல் : தமிழ் இலத்தீன் வழக்குகளும் மற்ற அமைசொற்களும்

தருதல் என்ற சொல் தமிழை மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் குடியேறி அவற்றையும் வளம் செய்துள்ளது.  தமிழில் உள்ள "தா"  என்ற சொல் இலத்தீனிலும் சென்றேறி ஆங்கிலம் வரை வந்துள்ளது.

டோ என்று ஒலிக்கும் சொல் தா என்பதன் இலத்தீன் திரிபு ஆகும்.  அது ஆங்கிலத்தின் "டோனேஷன்"  ( நன்`கொடை ) என்ற சொல்லிலும் பதியாய் இலங்குகின்றது.   பதி என்றால் தலைமையேற்பு குறிக்க யாம் வழங்கும் சொல்.  அரத்த நன்`கொடையாளர் ( இரத்தம் கொடுப்பவர் அல்லது குருதிக்கொடைஞர்)  "பிளட் டோனர்"  எனப்படுகிறார்.   டோனரிலும் அது உள்ளது.

இவை தமிழிலிருந்து வந்தவை என்று சொல்வதால் எமக்கு எந்த நன்மையும் இல்லை. உண்மை என்பதால் சொல்கிறேம்.  இ வற்றால் தமிழுக்கும் நன்மை ஏதும் இல்லை.  நம் சொல் உலக சேவை ( செய்வை ) 1  செய்கிறது என்று மன நிறைவு கொள்ளலாம். சேவை செய்தாலே நன்மை காணலாம்.  மன நிறைவு மட்டும் சோறாகிவிடாது.

தரு என்பதே  தா என்ற ஏவல் வினையானது.  அது திரிபு.   தரு என்பதற்கு முந்திய அடிச்சொல் தள் என்பது.

தள் > தரு > தா.

இவற்றின் பொருள் ஒன்றுதான்.

தள் >  தள்ளை.  (தாய்).

தள்ளை என்ற சொல் தமிழில் நிகண்டில் மட்டுமிருக்க,  ஏனைத் திராவிட மொழிகளில் "தாய்" என்ற பொருளிலே நன்றாகவே வழங்குகிறது.    கூர்ந்து பிறமொழிகளைக் கேட்க.

பண்டைக் காலத்தில் சொற்களை எளிதாகவே படைத்துள்ளனர்.  நம் படிப்பாளிகட்கு இப்போது இது அவ்வளவாகத் தெரிவதில்லை.

தா  (  இன்னொருவனுக்கு தா என்பது ).
பிள்ளை பெற்றுத் தா என்றும் பொருள்.

தா > தாய்.  ( பிள்ளை9 பெறுபவள் ).

ஆய்> தாய் (= தம்+ஆய்) என்றும் அறிஞர் பிறர் உரைப்பதுண்டு.

தள்ளை என்பது  தல்லை என்றும் தமிழில் ஒருகாலத்தில் வழங்கிற்று என்று தெரிகிறது.  அந்தச் சொல் இல்லை.  ஆனால் அதிலிருந்து திரிந்த " தல்லி" என்ற சொல் இன்னும் ந்ம்மிடை உள்ளது.

தள்ளை >  (     )  > தல்லி.

நாம் வாழும் இந்த நிலமும் தாயைப் போன்றது என்பதை நாம் உணரவேண்டும்.   இன்னும் உணரவில்லை என்றால் இந்தச் சொல்லைப் பார்த்து நல்லபடியாக உணர்ந்துகொள்ளலாம்.

தா >  தாது.   1.  நிலத்தால் தரப்படுவது.  2. இதயத்தால் தரப்படும் துடிப்பு.

து : விகுதி.  ( மிகுதி > விகுதி ).   எ-டு:  விழுது,  பழுது.

தரையே நமக்குப் பலவும் தருகிறது.    தரு> தரு+ ஐ = தரை.

தரு > தரம்.   (  தரப்படும் பொருளில் மதிப்பீடு.   தரும் எண்ணிக்கை ).

தரு >  தார் > தாரை.  ( சிறு நீர்த் தாரை ).

தரு > தருப்பை:  வலிமை தருவதாக நம்பும் ஒரு புல்.  குசைப்புல்.

தருணம்  :  தரப்பட்ட ஏற்ற சமயம்.

தருமம் :  பிறருக்குத் தருவது.

தருக்கு :  மனத்தில் உள்ள உணர்வினால் ஏற்படும் பெருமித நடப்பு.

தருக்கித்தல்  - தருக்கம் செய்தல்.

தராசு :  தரு + ஆசு:     எடை தருவதற்குரிய கருவி.

தரா தரம் :  தரும் தரம்,   தராதலம் எனவும் படும்.

இன்னும் ஏராளம்.  எல்லாம் எழுத முடியாது.  சொன்னவை கொண்டு பிற உணர்க.

தருக்கம் :  வார்த்தை  தருதல்.  வாய்கொடல்.   

அடுத்து நேரம் கிடைப்பின் சில எழுதுவேம்.

பிழைகள் பின் திருத்தம் பெறும்.



நம் பூசை உதவியாளர் மோகன் --- இளையராஜாவுடன்






தமிழ் நாட்டின் மற்றும் தென்னகத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி +  இளையராஜா சிங்கப்பூருக்கு அண்மையில்  (16.8.2018)   வந்திருந்த போது துர்க்கையம்மன் சுமங்கலிப் பூசையில் பெருந்தொண்டாற்றிப் பாராட்டைப் பெற்ற நம் பக்தர் ஐயப்ப குருசாமி மோகன் அவர்களும் அவருடைய தமக்கையாரும்*  அவரைச் சென்று கண்டு தமது பணிவன்பைத் தெரிவித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்குப் பதிவு செய்யப்படுகின்றன. கண்டு மகிழுங்கள்.

திரு மோகன் அவர்கள் சபரிமலைப் பக்தரும் குருசாமியும் ஆவார்.  அம்மன் பக்தியும் மிக உடையவர்.  இசையிலும் பெரிய நாட்டம் அவருக்கு உண்டு. ஐயப்ப குழுப்பாடல்களிலும் (பஜன்)   நன்`கு பாடுபவர்.  இவருடைய சொந்தத் திருமணத்திலும் சில பாடல்களை வழங்கி யாவரையும் மகிழ்வித்தவர்.

முன் இங்கு வெளியிட்ட படத்தில் இவர் இவருடைய இல்லாள் ரஜ்னி ராயுடன் காட்சிதருகிறார். அதை அங்குக் காணலாம்.  சொடுக்கவும்.


http://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_45.html


இவர் மென்பொருள் பொறியியலாளர். இவர் துணைவியார் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார்.  இவருடைய சொந்தக் குழும்பு (கம்பெனி) சிங்கையில் செயல்படுகிறது.



இசைக்கலையே இனிதாமே
மேலான கானத்திலே ஆனந்தம்
இசைக்கு மயங்காதார் யாரே

என்பது உடுமலை நாராயணக்கவியின் வரிகள். திரு மோகன் அவர்களும் இசையால் கவரப்பட்டவர்.

அடிக்குறிப்புகள்


+இசைஞானி-  this word could not be typed as the software presented some
difficulty.  This has been overcome by pasting it from elsewhere. njA would not work


*  நினைக்கிறோம் தமக்கை என்று. இளையராஜாவின் உதவியாளராகவும் இருக்கலாம்.  இனிமேல்தான் தெரியும்.
.

விகுதி இன்றிச் சொற்களை அமைத்தல்.

ஒவ்வொரு சொல்லையும் ஒரு விகுதி சேர்த்துத்தான் முடித்து அமைக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை;  தமிழ் மொழியில் வழங்கும் பல சொற்களையும் ஆராயுங்கால் இது நன்`கு புலப்படுகின்றது.

இன்று சில சொற்களைக் கொண்டு இந்தக் கட்டின்மையை உணர்ந்துகொள்வோம்.

இரவிக்கை என்ற சொல் இப்போது பெரும்பாலும் வழங்கவில்லை. தையல்காரர்களும் அவர்களிடம் இரவிக்கை தைக்கக் கொடுப்போரும் பிளவுஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் இதைக் குறிப்பிடுகின்றனர்.

ஒரு நூற்றைம்பது ஆண்டுகட்கு முன் தமிழ்ப் பெண்கள் சிற்றூர்களில் இரவிக்கை அல்லது பளவுஸ் அணிந்திருக்கவில்லை.  இன்னமும் பழைய முறைப்படி இரவிக்கை அணியாமல் தான்  மணப்பெண் கோவிலுக்குள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற விதிகள் உள்ள கோயில்களும் கேரள மாநிலத்தில் உள்ளன.  சேலையில் வேண்டிய நீட்டமிருப்பதால் அதைக்கொண்டே உடலைப் போர்த்திக் கொண்டனர்.  ஆனால் இன்று இரவிக்கை அல்லது பளவுஸ் இல்லாமல் சிற்றூர்களில் கூடப் பெண்களைக் காணவியலாது.

இரவிக்கை சட்டை முதலியவை ஆங்கிலேயனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டவை ஆகும்.

 இரவிக்கை என்பது இருபக்கமும்  கையிருக்க அவிழ்த்து எடுக்கும் வசதியுள்ள பெண்ணின் சட்டையைக் குறிக்கிறது. இரு+ அவிழ் + கை என்பது இரவிழ்க்கை என்றாகி ழகர ஒற்றிழந்து இரவிக்கை ஆயிற்று.

ழகர ஒற்று (ழ்)  ஒழிவது பல சொற்களிலும் காட்டியிருக்கின்றோம்.

எடுத்துக்காட்டு:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் >  வாத்தியம்.

இரவிக்கை என்பது திரிசொல். இதில் மூன்று துண்டுச்சொற்கள் உள்ளன.  இரு ; அவிழ் (வினைச்சொல் ); கை ( உடலுறுப்பு குறிக்கும் சொல்).  இரு என்பதும் அவிழ் என்பதும் கையென்ற சொல்லுக்கு அடைகளாக வருவதால்  இச்சொல் ஓர் உறுப்பைக் குறிப்பதுபோல் உள்ளது. அது இரவிக்கையை (பெண்டிரின்மேல்சட்டையைக் ) குறிப்பது பொருள் திரிபு ஆகும்.  கையைக் குறித்தது கையுள்ள ஆடையைக் குறிப்பது ஆகுபெயரென்றும் சொல்லலாம். ழகர ஒற்றும் ஒழிந்ததால் அதுவும் திரிபே. பேச்சில் இகரமும் ஒழிந்தது. எத்துணைத் திரிபுகள்!!  முன்னாளில் இருந்த இரவிக்கைகள் எங்கும் பார்க்கக் கிட்டவில்லை. அவை கையிடத்து  ( தோள் ) அவிழ்க்கும் கயிறுகள் உடையனவாய் இருந்திருக்கக்கூடும்,  200 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தையல்காரர்கள் யாரும் எழுதிவைக்கவும் இல்லை; அவற்றைப்பற்றிய நூல்களும் கிட்டவும் இல்லை.  ஆகவே எப்படி அவிழ்த்தனர் என்பது இப்போது கூறமுடியவில்லை.  ஆனால் இரவிழ்க்கையே இரவிக்கை ரவிக்கை ஆயின.

இச்சொல்லில் விகுதிகள் இடைநிலைகள் எவையும்    இல.

இரு+ அகம் + சு + இயம்  என்பன இரு+ அக + சியம் ஆகி இரகசியம் ஆயிற்று.
அகத்திலிருந்து வெளியிடப்படாததே ரகசியம் ஆம். சு என்பதும் இயம் என்பதும் இடைநிலை-- விகுதிகள் ஆகின. இரு என்பது இருத்தல் என்னும் வினைச்சொல்.  இச்சொல்லில் விகுதிகள் வந்துள்ள படியால் இது  முறைமாற்றுடன் விகுதிகளும் வந்த சொல். முறை மாற்றாவது  அகம் இரு என்று வரற்குரியது  இரு அகம் என்று முறைமாறி அமைக்கப்பட்டுள்ளது.

சு -  பரிசு என்ற சொல்லில் விகுதியாய்க் காண்க.
இயம் - தொல்காப்பியம் என்பதில் இயம் விகுதி ( இ+ அம் ) காண்க.  ஓவியம் என்பதிலும் அது.

இலாகா என்பதில் விகுதி எதுவும் இல்லை.  செயலகம் அல்லது துறை என்பது இதன் பொருள்.   இல் - இல்லம்;   கா -  காப்பது;   ஆ - ஆவது.  காப்பதான இல்லம் என்பது முறைமாறி அமைந்து விகுதி எதுவும் இல்லாமல் திறமையாக வெளிப்பட்டுள்ளது. சில மொழிகளில் இப்படிச் சொற்கள் முறைமாறி நிற்பதே இயல்பு.  சோறு சாப்பிடு என்பது மலாய் மொழியில் மாக்கான் நாசி என்று அமையும்.  மாக்கான் -  சாப்பிடு;  நாசி - சோறு.    " சாப்பிடு சோறு "  என்பதே  மலாய் மொழிக்கு இயல்பு.  தமிழில் அல்லாவின் தூதர் என்பர் அரபியில் ரஸூல் அல்லா என்றே வரும், அம்மொழிக்கு அதுவே இயல்பு.  ஆனால் சமத்கிருதத்தில் தமிழின் இயல்பே வருகிறது:  கஜ வதனா;  யானை முகன்; வதனா கஜ என்பதில்லை. முகன் யானை என்பதாகாது.

தமிழ் மொழியின் மூலங்களை முறைமாற்றிச் சொல் அமைப்பது அயற்பாங்கு போல் இருக்கிறது.. இதுவும் பெரிதும் பயன்படுத்தப் படாத  தந்திரமே. எனினும் விகுதிகள் இல்லாமல் இச்சொல் அமைந்துள்ளது.  முறைமாற்றி இப்படிச் சொல்லமைப்பது தமிழில் தொல்காப்பியனாரால் கடைப்பிடிக்கப்பட்டதுமுண்டு:  இந்தச் சொல்லை அறிந்துகொள்ளுங்கள்;   "தபுதார நிலை"   முன் இடுகைகள் காண்க.

வினைத்தொகையில் சொற்கள் முறைமாறிச் சொல் அமையும்.  இத்தகு முறைமாற்றுச் சொற்களுக்கும் வினைத்தொகை உந்துமாற்றலாக இருந்திருத்தல் கூடும்.

சிலவிடத்துச் சொல் முறைமாறினால் பொருள் மாறிவிடும்; எ-டு:

கடிநாய் :  கடிக்கும் தன்மைகொண்ட நாய்.
நாய்கடி  என்பது வேறு. (  இது கொசுக்கடி அன்று, நாய் கடித்த புண் என்றபடி).

வேறுபாடு உண்டோ?  கெடுமதி;  மதிகேடு.

 லாவண்யம் லாவகம்   எப்படி அமைந்தன?

திருத்தம் பின் கவனிக்கப்படும்.

புதன், 15 ஆகஸ்ட், 2018

பிரசாதம் வழங்குதல்.(சுமங்கலிப் பூசை)








12,8.2018ல் துர்க்கையம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலிப் பூசையின் முடிவில்  பிரசாதம் (இறையுணா) வழங்கப்பட்டது.

அப்போது பிடிக்கப்பட்ட படங்கள்,

போத்தோங் பாசீர் சிவதுர்க்கா  ஆலயத்தில்

 




செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

பரிகாரத்துக்குத் தனித்தமிழ்

பரிகாரம் என்ற பதத்துக்கு நல்ல தனித்தமிழ்ச் சொல் ஓம்படை என்பதாகும்.

போக்கடி என்பதும் பயன்படும்:  இதற்கு ஒரு போக்கடி இல்லாமற் போய்விட்டது  என்பர்.

பிதிகாரம் என்று தேவாரத்தில் வரும் சொல்: பிரதிகாரம் என்பதன் திரிபு.  பிரதி> பிதி.  ரகரம் இடைக்குறை.

அரணம் எனலும் ஆகும்.   அரண்> அரணம்.

பரிதல் என்பது அறுத்தல் ஒடித்தல் வெட்டுதல் என இன்னும் பல பொருள் உள்ள சொல்.

பரி (வினைச்சொல்)+ கு (இடைநிலை ) + ஆர் + அம் (விகுதி).

ஆர்தல் என்பதும் பல்பொருள் ஒருசொல். நிறைதல் என்பதும் அவற்றுள் ஒன்று.

பரிகாரம் என்பது நிறைவாக வெட்டி நீக்குதல் என்று பொருள்தரும்.

அரித்தல் என்பது அரித்தெடுத்தல் என்று பொருள்தரும்.

பரி+கு+ அரித்தல் = பரிகரித்தல். நீங்குதற்குரியன நீக்குதல்.

பரி+காரம் என்று பிரித்துப் பொருள்சொல்வது பழைய வாத்தியார்களின் வழக்கம்.

பரிகாரத்தில் ஒருவகை:  மந்திரம் சொல்லி ஒன்றை எரித்துக்  கரியாக்கி எண்ணெய் விட்டுக் குழப்பிப் பொட்டாக வைத்துக்கொள்வர்.

இது பரி + கரித்தல்.  ( கரியாக்குதல்)

திருத்தம் பின்.


ஒழுகுதல் வடிதல் நக்குதல்> அமைந்த சொற்கள்.

இப்போது சில சொற்களை அறிந்து இன்புறுவோம்.

நக்கு > நாக்கு.
வடி > வாடிக்கை. (எப்போதும் வடிவது.  அதைப்போல் எப்போதும் நிகழக்கூடியது. )

ஓழுகுதல் நீரொழுகுதல் செயல்பாட்டையும் குறித்ததுபோல வடிதல் வாடிக்கையும் எப்போதும் வழக்கமாக நடைபெறுவதைக் குறித்தது.

சீரும் கூட ஒழுகக் கூடியதுதான். இதையெல்லாம் மறந்துவிட்டுப் படிப்பீரானால் குழம்புவீர்.  " சீரொழுகு சான்றோர் சினம்". இத்தொடர் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே.

என் முன் எந்தப் புத்தகமும் (பொத்தகமும்) இல்லை.

இவை இரண்டும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்.  தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லில் நின்று தோன்றுமொரு பெயர்ச்சொல். அந்த வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயர்.

வாத்தியார் பையனுக்கு ஓர் அறை கொடுத்தார் என்னும்போது  அறை என்ற ஒரு செயல்,  ஒரு கல்லையோ அல்லது மரத்தையோ போல் எண்ணிக்கைப் படுத்தப்படுவதை அறியலாம்.  ஒரு முட்டை, இரு முட்டை என்று எண்ணுவதைப் போலவே ஓர் அறை. ஈர் அறை என்று என்று எண்ணிக்கைப் படுத்துகிறோம். அறை என்ற வினையை ஒரு பொருள்போல் கொள்கின்றோம். எனவே அஃது வினைப்பெயராகிறது.  இதையே தொழிற்பெயர் என்றனர்.

நக்குதல் என்பது நாவால் ஒன்றைத் தடவுதல்.  இதில் முதலெழுத்து ஆகிய ந என்பது நா என்று நீள்கின்றது   நக்கு > நாக்கு.  இப்படித் திரிந்து ஓர் உறுப்பின் பெயராய் மாறிவிடுகிறது. உறுப்பின் பெயர என்பது  சினைப்பெயர் எனப்படும். உண்மையில் இது தொழிற்பெயர் ஆகி தொழிலுக்கே பெயராய் இல்லாமல் அத்தொழிலை இயற்றும் ஓர் உறுப்புக்குப் பெயராகின்றது. தொழிலின் பெயராய் அமைந்து பின் உறுப்பைக் குறித்ததால் ஆகுபெயராய் ஆகிப் பின் உறுப்பின் பெயராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கலாம். அது ஒரு சுற்றிவளைப்பு ஆகும். சுருக்கமாக அதைச் சினைப்பெயர் என்னலாம். இந்தத் தந்திரம் மொழியில் பலவிடத்துக் கையாளப்பட்டு வந்துள்ளது.

நக்கு என்பதில் அடிச்சொல் ந என்பதுதான்.  ந என்பது நீண்டு நா என்றாகி உறுப்பைக் குறிக்கிறது. ந என்பதே ஓர் ஆதி வினை என்று அறிந்துகொள்க. குகைமனிதன் ந என்றால் நக்கு என்று ஏவினான். மரக்கொம்பில் தேனெடுத்த வேளையில் அவன் இன்னொருவனிடம் ந,  ந என்றிருப்பான்.  அது அவனுக்குப் பொருளுணர்த்தப் போதுமானதாய் இருந்தது.  நாம் இன்று நுழைபுலம் மூலமே இதை அறியமுடிகிறது.

ந  -----   வினை: நாவினால் தடவு.

ந -----     நக்கு :  இதில் வந்த மேம்பாடு என்னவென்றால் கு என்ற வினைச்சொல்லாக்க விகுதி வந்து சொல் நீண்டுள்ளது.  பொருள் அதுவேதான்.

கு என்பது (விகுதி )  மூழ்கு,  தாங்கு,  தேங்கு, என்று பல சொற்களில் வினைகளை உருவாக்கித் தருகிறது.

ந என்பதும் நா (  = நாக்கு) என்பதும்   பேச்சுக்கு வசதியில்லைபோலும். அது பின் நாவு, நாக்கு என்று நீண்டு சொல்ல வசதி தந்தன.

பண்டை மனிதன் நாவினாலும் சிரிப்பொலியை எழுப்பினான்.  ந > நகு என்ற சொல்லும் உண்டானது. வாயைப் பிளந்துகொண்டு நாக்கைத் தூக்கி ஒலியை எழுப்ப அது நகுதல் ஆனது. பின் அது பொதுவாக எப்படிச் சிரிப்பதையும் குறிக்க விரிந்தது.

ந > நகு.  நகுதல். (சிரித்தல்).

துன்பம் வருங்கால் நகுக!

சந்திப்போம்.

உங்களுக்கு ஒரு கேள்வி:

வாடிக்கை -  இது இயற்சொல்லா திரிசொல்லா?

எழுத்துப்பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பதவேறுபாடுகள்.

சில சொற்களை நாம் சில வடிவங்களில் எழுதலாமே. ஒரு சொல்லை ஒரே மாதிரியே எழுதுபவரா நீங்கள். அப்படிக் கட்டப்பட்டு எழுதாமல் இட்டப்படி எழுதப் பழகிக்கொள்வது நல்லது.

மனத்தை எ ங்கு எதிலே ஈடுபடுத்துகிறீர்களோ , எதில் உங்கள் மனம் ஈடுபடுகிறதோ அதுவே உங்கள் இட்டம்.

இந்தச் சொல் வடிவங்களைக் கவனிக்கவும்:

இடு  > இடுதல் ( வினைச்சொல் - தொழிற்பெயர்).
இடு > ஈடு:  இது முதனிலை ( எனில் முதலெழுத்து) நெடிலாகித் திரிந்த தொழிற்பெயர்.
ஈடுபடு > ஈடுபாடு.
 இடு+அம் = இட்டம்.  ( இதில் டகரம்  ஒற்று இரட்டித்தது).

மெருகூட்ட:  இட்டம் > இஷ்டம்.

மற்ற பதங்கள் ஒப்பு நோக்க:

கடு >    கட்டம்  மற்றும் கட்டு> கட்டம்;   ( மெருகு:  கஷ்டம்)
குட்டை > குட்டம்.  அடிச்சொல் :  குடு ( குட்).   (குஷ்டம்).

இனிச் சில வடிவங்களை நாம் வழக்குக்குக் கொண்டுவரலாம்.

நல்லவர் என்ற சொல் இடைக்குறைத்து நலவர் என்றுமெழுதலாம்.  ஆனால் இத்தகைய வடிவங்கள் கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும்.

வல்லவர் > வலவர்
நல்லவர் > நலவர்.
சொல்லவர் > சொலவர்.

 நல்லவன் > நல்லன் > நல்லான் எல்லாம் பயன்படுத்தலாம்.

தமிழில் பல வசதிகள் உள்ளன.

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.



சுமங்கலிப்பூசைக்கு முன் கூடியிருந்த மக்கள் திரள் இங்குக் காணலாம்.
இந்த ஆண்டு இப்பூசையைக் கோவிலே ஏற்று நடத்திடினும், துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் ( இது பூசைக் குழுவினர் பெயர் )  நல்ல பொருட்செலவில் பூசைக்குரிய மலர்கள், மாலைகள், பழங்கள், இனிப்புப் பண்டங்கள்,  அம்மன் மற்ற தெய்வங்கட்கு அணிமணிகள் அலங்காரங்கள், கட்டுவதற்குப் பொன் தாலிகள், ஏனைத் துணைப்பொருட்கள், வரிசைப் பொருட்கள், பால்குடத்திற் பங்குபற்றுதல், சன்னிதிமுன் பங்கெடுத்தவர்கள் இருத்தற்கான தட்டுப்பொருட்கள் மஞ்சள் குங்குமம் முதலிய வழங்கிச் சிறப்பித்தனர். ஐயர்களுக்குத் தக்கிணைகளும் வழங்கப்பட்டன.

அம்மன் தாலிகட்டிக்கொண்டதைப் பலர் கண்டு மகிழ்ந்தனர்.

அன்னதான நேரத்திற்குக் கூட்டம் குவிந்துவிட்டதென்று மக்கள் பேசிக்கொண்டனர்.

"ரெடி" தயார் கோவில் ஓமம் 12.8.2018

சிங்க்ப்பூர் துர்க்காதேவியின் ஆலயம்: ஓமம் தயார்நிலையில் இருக்கிறது. அமரவேண்டியவர்கள் வந்த சற்று  நேரத்தில்  தொடங்க உள்ள நிலை.


இப்போதெல்லாம்  "நான் ரெடி  நீங்கள் ரெடியா "  என்று  கேட்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.  நான்  தயார் நீங்கள் தயாரா?"  என்று தமிழில் கேட்பதில்லை.

தயார் தமிழில்லை  என்பது ஒரு வாதம். அது உருது என்கிறார்கள்.  உருது என்பது பிற்காலத்து மொழி . முன்னிருந்த பல மொழிச் சொற்கள் அதனுள் புகுந்து  அதை ஒரு மொழி  ஆக்கின.  அரபி  தமிழ் சமஸ்கிருதம் எனப் பல மொழிகள் புகுந்துள்ளன .

தயார் என்பதன் அடிச்சொல் தய  என்பது.  இதிலிருந்து:

தய ---  தயக்கம்;
தய ---தயங்கு

என்ற சொற்கள் வந்துள்ளன.

ஓர் குற்றவாளியை உடனே கழுத்தை வெட்டிவிடாமல் மன்றாடி அரசு ஆணையை நிறுத்திவைத்தால் அங்கு அரசன்  தயை காட்டிவிட்டான் என்று பொருள். அது ஒருவிதமான தயக்கம். தயக்கம் என்பது தொடராமல் தானே நிறுத்துவது.  தயை என்பது உடனே தண்டித்து ( ஒறுத்து) விடாமல் நிறுத்துவது. தண்டனை என்பது தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போன்று இருந்து அது கழுத்தில் விழுந்தால் ஏற்படுவது,  விழாமல் நிறுத்தக் காரணமாயது  தய + ஐ = தயை. உலகில் எல்லாம் காலத்தின் அடிப்படையிலே நிகழ்கிறது.

எல்லா உயிர்களும் அழிவது என்றுமுள்ள நிலை. அழிவை அல்லது வலியை அல்லது வேறுபட்ட ஒரு நிலையை உடனே உண்டாக்காமல் தானே அழியுமாறு அல்லது வலி வரும் சூழ்நிலையில் வருமாறு  அல்லது எதுவும் நிகழுமாறு  விட்டுவிடுவது தயை. தயவு என்பதும் அது.

தயார் என்பது உடனே செயலில் புகுந்துவிடாமல் காரணத்தோடு தயங்கி நிற்பது. ஆர்தல் என்பது நிறைதல்.

தய >  தய+ ஆர் = தயார்.

பெரும்பாலும் படைகள் முதலியவை போருக்கு எல்லா ஆயுதங்களும் தோள்வலிமையும் இருந்தாலும் காலம் அல்லது வேறு எதிர்நிலைகள் தீரும்வரை தயங்கி நிற்கும்.  தய ஆர்.

சொற்களின் உண்மை நிலை உணராமல் மக்களிருப்பதால் அதை உணரவைக்க எழுதுகிறோம். ஒரு சொல் எந்த மொழியினுடையது என்பது முக்கியமன்று; அதை எப்படிப் பொருள் உணர்கிறீர் என்பதே முக்கியம்.

இப்போது படம்:  இது இன்று காலை  12/8/2018  --  துர்க்கையம்மன் கோவிலில் ஓமத்துக்கு பூசாரிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்ததைக் காட்டுகிறது,



சனி, 11 ஆகஸ்ட், 2018

உலகம் உலவி மகிழ்

பலகற்றும் பாவன்மை பெற்றால் --- உலகத்தில்
என்ன பயனாகும் என்`தங்காய் ---- இன்னமுமே
சுற்றி ஒருமுறையும் வந்திலாய் --- வெற்றியெனில்
சுற்றியே காணலின்றி வேறில்லை --- பற்றிக்கொள்
பற்பலவாம் இப்போது திட்டங்கள் --- சொற்பவிலை;
ஏறுவா னூர்தியில் யாதெனினும் --- சோராதே;
நூறிடமோ இன்னும் பல.

நிலவுலகில் கண்டங்கள் ஆறு --- உலவாமல்
ஓரிடத்து ஓய்ந்திருந்   தால்கூறு --- ஊறுவகை?
நேருமின்பம் காசுமே தீருமென்று ---வீறிழந்து
மெத்தை தலையணை சூடேறச் --- சொத்தையாய்
வீழ்ந்து கிடத்தலும் வீண்நெறியே---வாழ்பொழுதில்
பாருலகைச் சுற்றிப் பகுத்தறிவும் --- சீர்பெறவே
சோர்வில் பயணமேற் கொள்.

திருத்தம் பின்.

சுமங்கலிப் பூசை: சென்ற ஆண்டு உதவிய தம்பதிகள்

சுமங்கலிப் பூசை அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற போது உதவியோர் வரிசையில் இத்தம்பதியினரையும்
மறக்கவியலாது என்றனர்  நடத்திய பக்த குழுவினர்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சொல்: "சாகரம்" - குமரிக் கண்டத்திற்கு ஆதாரம்.

ஒரு காலத்தில் கடல் என்றால் பேரிடர்களின் பிறப்பிடம் என்று மக்கள் பயந்தனர். பெரும்பாலான புயல்களும் சூறைக்காற்றும் அங்கிருந்துதான் உருவாகிக் கரையைக் கடந்து  நிலத்தில் வாழ்ந்த மக்களைத் தாக்கி அழிவை உண்டாக்கின. கடலைத் தாண்டிப் போவதும் கடினமான காரியம் என்று மக்கள் நினைத்தனர்.

அவர்கள் கடல் என்ற சொல்லை உருவாக்கினர்.

கட+ அல் =  கடல்.

கடத்தற்கு அல்லாத நீர்ப்பரப்பு கடலென்பது.  இனி, அல் என்பது ஒரு வெறும் விகுதி என்று சொன்னாலும் அதையும் ஏற்றுக்கொள்வோம்.  ஏனென்றால் பொருள் எதையும் குறிக்காமல் வெறும்  சொல்லாக்க வேறுபாட்டினை உணர்த்தும் குறியீடாக மட்டும் இந்த விகுதிகள் பயன்பட்டன.  பிற்கால நிகழ்வை முற்காலச் சொல்லில் கண்டு சொன்னாலும் அதில் ஓர் பெரிய வேறுபாடு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

கட+ அல் என்பதில் பொருளாவது கடத்தலுக்கு அரியதென்பதா அல்லது கடத்தலுக்கு உரியதென்பதா என்று கடா எழலாம்.  கப்பல் தோணி படகு முதலிய மிதவூர்திகள் அமைக்கப்படுமுன் கடல் கடத்தற்கு அரியது என்று பொருள்படவும் இவ்வூர்திகள்  அமைவுற்றபின் கடத்தற்கு உரியது என்றும் பொருள்படவும் வசதியாக வரையறவு செய்துகொள்ளலாம்.  இதனால் நட்டம் ஒன்றுமில்லை.  அது நிற்க, கடல் என்றால் கடத்தற்கு அரியது என்பதனால் வந்த பெயர் என்பதை நாம் என்றும் ஏற்றுக்கொள்ளலாம்.

கடலென்ற சொல் அமைந்த தொல்பழங்காலத்து மனிதர்கள் நாம் அல்லோம் ஆதலின் நாம் இன்று சொல்லை மட்டும் முன்வைத்து  அலசிப் பொருளெடுக்கும் மொழியின் உட்கருவிகளின் துணைகொண்டு  அதனை அறிய முற்படுகிறோம்.

கடல் ஏன் கடத்தற்கு அரியது எனில் காரணங்களை மனித மூளையே தெரிவிக்கும்.  அக்காலத்தில் தோணி படகு முதலியன இல்லை. கடலுக்குள் போவதென்றால் நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். அதுவும் சில அடி தூரமே நீந்துதல் கூடும்.  சரியாகத் தெரியாதவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மடிந்துவிடுதலும் ஒரு முடிவு. கடலின்மேல் மனிதனின் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் கூட இன்னும் காப்பாற்றும் காவலர்கள் இல்லாத நிலையில் கடலுக்குள் கால் வைக்க இயலாதவர்களும் பலர் ஆவர்.

கடலுக்குள் போவோன் கரைக்குத் திரும்புதல் அரிது; இறந்துவிடுவான் என்று நம்பியவர்கள் பலர். இவற்றை வெற்றிகொண்ட முற்காலத் தைரியசாலிகள் என்போர் மீனவர்களே.  கொல்லும் திறம் வாய்ந்த கடலினைத் தெய்வமாக்கியது பண்டை நாகரிகங்கள்.  மனிதனின் இயலாமை அதிலிருந்து வெளிச்சமாகிறது.

இதனால் கடலுக்குச் சாகரம் என்ற பெயரும் ஏற்பட்டது.  அருகில் போனால் மனிதன் இறக்க நேரிடுமே!

சா+ கு + அரு + அம் என்ற  துண்டுகள் இதை நன் கு காட்டுகின்றன.  அருகில் போனால்   சாவுதான் என்று பொருள்.  சாவதற்கு அருகில் போ என்று பொருள். இதன் கெடு அறிவு மறக்கப்பட்ட பிற்காலத்தில் சாகரம் என்பது கடலுக்கு ஓர் அழகிய பெயராய் அமைந்தது.

மொழிவரலாற்றின் நெடுந்தொலைவைக் கடந்த நிலையில் "அமித சாகரர்"  மற்றும் "குணசாகரர்" என்ற பெயர்களை மக்கள் விரும்பினர்.  அப்போது கடலைப் பற்றிய அச்சங்களெல்லாம் ஓரளவு நீங்கி விட்டிருந்தன.

பிற்காலத்து மொழிப்பண்டிதனுக்கு இது  வெளிப்படையாகவில்லை. குமரிக் கண்டம் கடலில் சென்றதும் காவிரிப்பூம்பட்டினம் அமிழ்ந்ததும் ஆகிய அழிவுகளால் இத்தகைய மன நிலையினராய் இந்தியர்கள் ஆனது எமக்கொன்றும் வியப்பில்லை.  அவர்களின் மனநிலையைக் காட்டுவது அவர்களது மொழிகளே ஆம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ்(தல்) என்ற சொல்லினின்று திரிந்தது என்று முனைவர் அறவாணன் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் )  ஒரு நூலில் கூறியுள்ளார். சமுத்திரம் என்ற சொல்லையும் இப்படியே ஆராயவேண்டியுள்ளது.  சாகரம் முதலிய சொற்களுக்கு வேறு சொல்லமைப்பைக் காட்டுவது குமரியின் அமிழ்வை ஒருவாறு மறைக்கும் முயற்சியாகவோ அறியாமையாகவோ கருதவேண்டும்.

மனிதனின் பல முக்கியக் கொள்கைகளுக்கும் சாவுதான் காரணம். அதைக் கடக்க அவன் இன்னும் பலகாலம் போராடவேண்டி யுள்ளது. இதுவே பல வரலாறுகளும் போதிக்கும் உண்மையாம்.

இப்போது காலக் கழிவினால் பொருள் மறைந்து சொல் இனிதாயிற்று. இந்நிலை மெத்த நன்று.

பின் தோன்று பிழைகள் பின் திருத்தம் பெறும்

தன்-திருத்த மென்பொருள்கள் (சவால்கள்)

இது ஆட்டோகரக்ட் என்னும் தன்றிருத்த மென்பொருள் பற்றிய ஒரு குறிப்புரை.

தன்`திருத்த என்று ஒரு சொல்லாய் எழுதமுடியவில்லை.  அது  தந்திருத்த என்று தானே மாறிக்கொள்கிறது.  இப்படிப் பல மாற்றங்கள்.  தன்-திருத்த என்பது  வேறு. தந்திருத்த என்பது வேறு.  தந்திருத்த என்பது தந்து+இருத்த என்று பிரிந்து எழுதுவோர் எண்ணாத பொருளைத் தந்துவிடுகின்றது.

எழுதும்போது நாம் திருத்தி அமைத்தாலும் இடுகை வெளியிட்டபின்பு அது மாறிக்கொள்கிறது.  ஆகவே அப்புறம் தேடிப்பிடித்து இதுபோலும் பிழைகளைத் திருத்துவது  ஒரு சவாலாகிவிடுகிறது.

எம் மலாய் நண்பர்களுக்கு மலாய் மொழியில் எமது கைப்பேசி வழியாகக் குறுஞ்செய்தி அனுப்புவேன்.  அப்போது "ஸயா"  என்பது ஸேய்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லாக மாறிவிடுகிறது.  அது திருத்தப்பட்ட பின்னும் மாறிக்கொள்கிறது. சிலவேளைகளில் இரண்டுமூன்று முறை தட்டியபின் மாறாமல் உள்ளது.  அதேபோல் "டிய" என்ற மலாய்ச்சொல் "டயல்" என்ற ஆங்கிலச் சொல்லாக மாறிக்கொள்கிறது. இப்படியே பல்வேறு மாற்றங்கள்  நிகழ்ந்துவிடுகின்றன.  சரியான சவால்தான்.  "சவாலே சமாளி" என்று சொல்லி அழுதுகொண்டு எழுதவேண்டிய கட்டமாக இருக்கின்றது.

இதற்குப் பரிகாரம் உள்ளதுபோலும்.  எனக்குத் தெரியவில்லை.  அல்லது கிடையாதோ?

சிவமாலாவின் வலைபூவிற்குள் வருவதும் இப்போது கடினம்தான். இப்பெயரைத் தட்டியவுடன் வேறு வலைத்தளத்துக்குப் போய்விடும்.  உண்மையல்லாத நடிப்புத் தளங்களும் உள்ளன என்று அறிகிறோம்.  மேலும் வெளியிட்ட புதிய இடுகைகள் பலருக்குக் கிட்டவில்லை.

நாம் எழுதியவை சில நாடுகளில் ( பெரும்பாலும் ஐரோப்பா) கிட்டவில்லை.  குக்கீஸ் என்னும் அப்பகங்கள் காரணமாக என்று தெரிகிறது. மலேசியாவிலிருந்து எழுதினால் சிங்கப்பூருக்குப் போய்ச் சேரவில்லை. சிங்கையில் எழுதினாலும் அப்படி.  தேடெந்திரங்கள் தொல்லைக்கு உட்படுவதாகத் தெரிகிறது.

துர்க்கையம்மனுக்கு சுமங்கலிப் பூசை சிங்கப்பூர் போத்தோங் பாசீர்

வரும் ஞாயிற்றுக் கிழமை 12.8.2018  காலை சிங்கப்பூர் போத்தோங்  பாசீரில் அருள்பாலிக்கும் அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயத்தில் ( ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயம்  8, POTONG PASIR AVE 1,) சுமங்கலிப் பூசை நடைபெறும் என்ெரிவிக்கப்பட்டுள்ளு.. ண்பல் அன்னதானமும் நடைபெறும்.  

ந்த ஆண்டஆலத்ினந்தப் பையை நைபெறுவிக்க இருக்கின்றர்.  முன்னைய  உபயதாரர் ுர்க்கையம்மன் ுமங்கிப் பெண்கள் இந்ப் பையைக் கோவிலில் இவ்வாண்டஒப்பத்ுவிட்டர். என்றாலும் அருள்மிகுர்க்கையம்மாவிற்கும் அருள்மிகிவெருமானுக்கும் இன்னும் உள்ள ெய்வங்குக்கும் ுன்னாளில் இப்பக்ைகள் ெய்ுபோல ங்கள் ங்கள் ந்தச் ெலில் மர் மாலைகள் ற்றும் ம் மத்ிற்கியந்தைக்கும் உகந்த ைப்பொருட்கள் மியற்றகைக் ூடாக   வங்கிச் ிறப்பிப்பார்கள் என்றெரிகிறு, ற்காக இவர்கள் முயற்ி மேற்கொண்டு ப அலங்காரப் பொருட்கென்ற ிலாரங்காகத் ேர்ந்தத்ு வங்கியுள்ளர்.   இவ் ைபத்ில் ங்கும் ந்துகொண்டிறப்பித்அம்மன் அருள்பெறுக என 
வேண்டிக்கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.


வாடை என்ற இரண்டு சொற்கள்.

இன்று ஒரு சொல்லை ஆராய்வதன் மூலம் ஒரு கொள்கையை உருவாக்குவோம்.

இது எப்படி?  ஆளுக்கொரு கொள்கை ஏற்பட விடலாமா என்று நீங்கள் கடாவலாம்.  நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் ஆளுக்கொரு கொள்கை இருப்பதை உலகத்தில் போக்கிவிடுதல் இயலாததாகும். இது மிதிவண்டி ( சைக்கிள் ஓட்டுவது போல). என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் எந்த எந்த இடத்தில் எப்படி ஓட்டுவதென்பதை ஓட்டுகிறவன் தீர்மானிக்கிறான். ஓட்டுவதற்குமுன் எங்கே எங்கே மிதிக்கவேண்டும், எங்கே எங்கே எல்லாம் திருப்பவேண்டும்,  எங்கெங்கு முழுதும் திருப்பவேண்டும், எப்படி எப்படி வருமிடங்களில் பாதி திருப்பவேண்டும் , எப்படி மிதிக்காமலே மிதிவண்டியை உருட்டிக்கொண்டு ஓட்டவேண்டும் என்று  என்னென்ன எழுதிவைத்தாலும் இறுதியில் செயல்பாட்டில் ஓட்டுகிறவனே பலவற்றை வீதியில் தீர்மானிக்கிறான். அவனுடைய தீர்மானம் எழுதில் இல்லாததாக இருக்கலாம்; வரைவு இல்லாததாக இருக்கலாம்; கலந்தாய்வு இல்லாததாக இருக்கலாம்.  என்றாலும் அதுவும் தீர்மானமே.  அதுதான் அவனைக் கொண்டு சேர்க்கிறது. பல்லாயிரம் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் பலவற்றை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தத் தீர்மானச் செயல்வாய்ப்பினை அவர்களிடமிருந்து  யாரும் பறித்துவிடமுடியாது.  இப்படி ஓர் அமெரிக்கப்  பேராசிரியர் என்னிடம் சொன்னார்  . பகுத்தறிவுடன் பட்ட கருத்தன்றோ?  நான் ஒன்றைச் சொன்னால் நீ பத்தை உணர்ந்துகொள் என்று சப்பானியப் பேராசிரியர் வகுப்பில் கூறினார்.  ஆம் , உண்மைதான். மாணவ மாண்பினர்  அப்படித்தான் இருக்கவேண்டும். பிறர்கொள்கை அவர்களுக்கு.  நமக்கும் கொள்கை இருக்கலாம். அதுதான் உலக இயல்பு.

இப்போது விடயத்துக்கு வருவோம். எம்முன் இருப்பது வாடை என்னும் சொல்.

வாடை என்று இரு சொற்கள் உள்ளன.  ஒன்று வடக்கு என்று நாம் சொல்லும் திசைப்பெயரிலிருந்து வந்த சொல்.

இன்னொன்று வாடுதல் ( நீர்வற்றி உலர்தல் )  என்னும் வினையினின்று புறப்பட்ட சொல்.

வட > வடக்கு.
வட > வாடை.  (வடதிசையிலிருந்து வீசும் காற்று).
வட + ஐ = வாடை என்பதில் வகரம் வா என்று நீட்சி பெற்றுத் திரிகிறது.
இதில் டகரத்தில் உள்ள இறுதி அகரம் கெடுகிறது.  எனவே இருதிரிபுகளும் கூடி  வாட் என்று ஆகிறது,  வாட் என்பது ஒரு சொல் என்று சேர்க்கமாட்டார்கள். புணர்ச்சியில் தோன்றும் இடையுருவம் இதுவாகும்.
கருவில் உள்ள உருவம்போலும் பிறவாமுன் உள்ளதோர் உருவம்.  கருவுரு
என்னலும் ஆகும்.

வாட் + ஐ என்று விகுதியை இணைத்தவுடன் வாடை என்ற சொல் கிடைக்கிறது.

இப்படி அலச,  வடக்கிலிருந்து வீசும் காற்று என்னும் விளக்கத்திற்கு இயைந்து நிற்கின்றது.

இனி, மரம் செடி கொடிகள் உள்ள இடத்தில் இலைகள் தழைகள் வாடுவதால் ஒரு வீச்சம் உண்டாகிறது. இது கரியமில வாயு அல்லது வளி என்பர்.  இது வாடுதலால் அல்லது உலர்தலால் உண்டாகிறது.  வாடு + ஐ = வாடை.

இப்போது இதுபற்றிய நம் கொள்கைக்கு வருவோம்.  வட (வடக்கு) என்ற திசையைக் குறிக்கும் சொல்லில் நின்று உருவாகிய   வாடை என்பது ஒரு சொல்.

வாடுதல் என்ற வினையடியாய்ப் பிறந்த  தொழிற்பெயரான வாடை என்பது இன்னொரு சொல்.

இவை ஓரொலியனவாகிய இருவேறு அடிகளில் தோன்றிய சொற்கள்.

இனி வடத்தல் என்றொரு வினைச்சொல் இல்லை.  ஆனால் வட என்பது பெயர்ச்சொல்லுக்கு அடையாய் நிற்கிறது.  எடுத்துக்காட்டு  : வட > வட நாடு; வட கலை முதலியன.  இவ்வாறு உரிமை பூண்டு நிற்பதால் உரிச்சொல் ஆகும்.

முடிவு: வட என்ற உரிச்சொல்லிலிருந்து உண்டான வாடை என்பது வேறு. வாடுதல் என்ற வினையடிப் பிறந்த தொழிற்பெயரான வாடை என்பது வேறு.

அறிந்து மகிழ்வீர்.

திருத்தம் பின்பு.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

சென்ற ஆண்டு சுமங்கலிப் பூசை: comments

சென்ற ஆண்டு சுமங்கலிப் பூசை: உழைத்தோர் சிலர்

படம் பற்றிய குறிப்புரை :

இவர்கள் சென்ற ஆண்டு  பூச்சைக்காக பாடுபட்டவர்கள். ஆனால் விளம்பரம் வேண்டாமையின் பெயர்கள் தரவில்லை. அம்மனை வழிபடுவதே நோக்கம். விளம்பரம் அன்று.

இந்தக் குறிப்பு படத்துக்கு கீழே எழுத முடியவில்லை. மென்பொருள் கோளாறு காரணமாகின்றது. சரி செய்ய இயலவில்லை.