வெள்ளி, 25 மே, 2018

மோசம் - சொல் மோசமன்று.


இந்நாள்  மோசமென்னும் வழக்குச் சொல்லினை அறிந்து இன்புறுவோம். ஒன்றை மோசமெனின் அது ஏற்றுக்கொள்ளத் தக்க நிலையினின்றும் மிகத் தாழ்ந்துவிட்டதென்று பொருள்.  இச்சொல் மதிமோசம், பொருள்மோசம், மோசம் போனான்மோசடி என்ற பல நிலைகளில் வரும்.

உணவுப் பொருளில் ஈ மொய்ப்பதுதான் மோசம்.  இப்படி மொய்க்கப்பட்டது விரைவில் கெட்டுவிடுவதையும் அதை உண்டவன் நோய்வாய்ப்படுவதையும் கண்டனர்.  எனவே மொய்க்கப்பட்டது  ஏற்புடைத்தன்று என்று முடிவுகட்டினர்.

இக்கருத்தினின்று மோசமென்பது சொல்லாகத் தோன்றியது.


மொய்+ அம் =  மோயம்.   இது முதனிலை திரிந்து நீண்ட தொழிற்பெயர்.
தொழிற்பெயர் என்றால் வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.

யகரம் சகரமாக மாறுமாதலின் இது பின் திரிந்தது:

(மோயம்) > மோசம்.   >ச திரிபு.  தரம் தாழ்ந்தது என்பது பொருள்.

மோயமெனற்பாலது வழக்கொழிந்தது.

மோயன் என்பது சிப்பந்தியைக் குறிக்கும்.( தாழ்நிலையன் .) இவர்கள் கூட்டமாய் நின்று வேலையில் ஈடுபடுவதால் இப்பெயர் பெற்றனர் ..  படித்தரக் காரர் என்றும் பொருளாகும்.  மோயனென்பது ஒரு குடும்பப் பட்டப்பெயர் என்றும் அறியப்படுகிறது.

மூசுதல் -  கெட்டது என்றும் மொய்த்தல் என்றும் இருபொருளுடைய சொல்.

இனிமூசு+ அம் = மோசம் எனினும் அதுவாம்.  மொய்த்தது என்றும் கெட்டது  என்றும் இருபொருளுமுடையதாகும்.

மூசு > மூஞ்சு > மூஞ்சல்:  இதுவும் கெட்டதெனப் பொருள் படும்,

முனிவரும் மோனமும் என்னும் இடுகையில் கூறப்பட்ட திரிபுகளை
நினைவு கூர்க.  உகரம் ஓகாரமாகவும் வருக்கங்கள் ஏற்பவும் திரிதலுடையன.

மறப்பின் சொடுக்கிக் காண்க:

மொய் என்ற சொல்லும் மோ  என்பதனுடன் தொடர்புள்ளதாகும்.  ஈக்கள்
மொய்த்து மோப்பமிட்டு உண்கின்றன. இது கீழ்த்தர நடவடிக்கை என்று அறிக.

http://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html

=========================================================================

அடிக்குறிப்பு.

இந்நாள் என்பது முன்னர் இன்னாள் என்று மேலே கொடுக்கப்பட்டிருந்தது.  இது
தவறு,  இந்த எழுத்துரு மென்பொருள் நகர எழுத்தை வருவிக்க இயலவில்லை.
இப்போது சரிசெய்யப்பட்டிருப்பதால் திருத்தப்பட்டுள்ளது.  இதுபோலும் தவறுகள் 
தோன்றினால் பின்னூட்டம் இடுங்கள்.   கண்டுபிடித்துத் திருத்திவிடுகிறோம்.

இ+ நாள்=  இந்நாள்.     இன்னாள்  அன்று.

சில வேளைகளில் மென்பொருள் ஒத்துழையாமை வருத்தமளிக்கிறது.

கைப்பேசிகளிலும் தொந்தரவு ஏற்படுகிறது.  என்செய்வது.  பொறுமை  
கடைப்பிடித்தால் கணினி நன்மை நல்கும் பின்பு.

பிரிட்டீஷ் இந்தியாவில் அடிமைகள்.



இந்தியா என்பது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு   ஒரு வளமான களமாக இருந்ததென்றே தெரிகிறது.  இங்கு சாதியிற் குறைந்தவர்கள் இருந்தார்கள் என்பது அந்த வளத்திற்கு ஒரு பலம் சேர்த்தது.  பலர் அடிமைகளாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  இஃது ஆராய்ச்சிக்குரிய ஓர் விடயமென்பதில் ஐயமில்லை.   நீங்கள் வரலாற்றாராய்ச்சி செய்பவராக இருந்தால் இதை நன் கு ஆராய்ந்து  முனைவர் பட்டம் பெறலாம்,

 உங்களுக்குச் சில குறிப்புகள்:


Between 1772 and 1833, the British parliament debates, as recorded in Hansard confirm the existence of extensive slavery in India, primarily for Arabian and European colonial markets under the East India Company

Hansard Parliamentary Papers 125 (1828), 128 (1834), 697 (1837), 238 (1841), 525 (1843), 14 (1844), London, House of Commons

---------------------------------

In fact, eighteenth century Europeans, including some Britons, were involved in buying, selling and exporting Indian slaves, transferring them around the subcontinent or to European slave colonies across the globe. Moreover, many eighteenth century European households in India included domestic slaves, with the owners' right of property over them being upheld in law. Thus, although both colonial observers and subsequent historians usually represent South Asian slavery as an indigenous institution, with which the British were only concerned as colonial reforms, until the end of the eighteenth century Europeans were deeply implicated in both slave-holding and slave-trading in the region.

 Slavery, Abolitionism and Empire in India, 1772-1843

சீனாவிலிருந்து தென் கிழக்காசியாவிற்குக் கொண்டுவரப்பட்டோர்  ஈயமண் எடுத்தல் மற்றும் பொருளியலை அமைத்தல் முதலிய செய்ல்களுக்காகக் கொண்டுவரப்பட்டனர்  என்று தெரிகிறது.   ரப்பர்பால்   (தேய்வைப் பால் அல்லது மரச்சாறு  )   எடுப்பதற்கு இந்தியர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று அறிகிறோம்.


பிரீட்டீஷ் அரசு அடிமைப்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்குச் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் பலரும் இந்தியார்களாலே அடிமைப் படுத்தப்பட்டுக் கிடந்தவர்கள்.  பழைய அடிமைகளை இடம் மாற்றியது அடிமைப் படுத்தியதாகாது என்பதுதான் அந்த வாதம்.   இந்த வாதமும் திறமையான வாதமே ஆகும்.

அனுபவப் பட்ட  (பட்டறிவுடையஅடிமைகளை வாங்கிச் சென்றார்கள்.  அதற்கென்ன  என்பர்.

Slavery was endemic in India when Europeans arrived. They could only be enslaved through warfare according to Muslim rules, but were widespread in Hindu territories.   European Slave Trading in the Indian Ocean, 1500–1850 Table 1 gives the numbers of slaves traded by Europeans in and out of India.

ஒரு பதில் இப்படி இருந்தது.
 

தொந்தரவு என்ற சொல்.

தொல்லை என்ற சொல்லை நன்`கு கவனித்தால்,  அது "தொல்" என்னும்  அடியினின்று தோன்றியது என்பதை உணரலாம்.

தொல் > தொல்லை.    இதில் வந்த விகுதி:  ஐ என்பது.

முன்செய்த செயலெதுவும் ஒரு பின்விளைவை ஏற்படுத்தி இடர்விளைக்குமாயின் அதுவே தொல்லை ஆகும்.

கடந்த காலத்தைக் குறிப்பது "தொல்"   என்னும் சொல்.

தொல்லை என்பது பல்பொருளுடைய சொல்லாகும்.  அவற்றின் பொருள்களில் பழமை என்பதுமொன்றாகும்.பழமை என்றே பொருள்தரும் ஒரு சொல்,  அப்பழமையினின்று போதரும் ஓர் இடரையும் குறிக்குமாயின் அஃது  ஆகுபெயர் ஆனது.

தொல், தொல்லை என்பன காலப்பெயர்கள். அதாவது காலத்தைக் காட்டும் பெயர்ச்சொல்.  அது காலத்தினின்று வரும் இடரைக் குறித்தமையின்,  காலவாகு பெயர் எனப்படும். பொருள், இடம், காலம்,  சினை, பண்பு, தொழில் என்னும் ஆறு நிலைகளிலிருந்தும்  பிறவற்றுக்குப் பெயராகிவருவது ஆகுபெயர்.

இன்றுள்ள மொழி நிலைமையில்  தொல்லை என்று சொன்னால் அது இடரையே குறிக்கும்.  பழமையைக் குறிக்கவில்லை.  அதன் பழமைப்பொருள் எங்காவது பழைய நூல்களிலே காணலாமேயன்றி வழக்கில் இருப்பதாக யாம் அறியவில்லை.  ஆகவே தொல்லை= பழமை  என்பது ஒரு வரலாற்றுப்பொருள் ஆகிவிட்டது.

ஆகவே தொல்லை என்பது ஒரு பண்பு  என்று கருதி அதைப் பண்புப்பெயர் என்று சில ஆசிரியர் துணிவர்.    ஆகுபெயர் அன்று என்று கருதுவர்.

எதுவாயினும்  தொந்தரவு என்பது அமைந்த விதம் காணுவோம்.

தொல் >  தொன்.   இது லகர   0னகரத் திரிபு.

தொன் + தரவு =  தொந்தரவு ஆகும்.

தரவு என்பது தருதல் விளைதல் என்று பொருள்படும்.

முன்+தி =  முந்தி என்று புணர்ந்தது போன்றது இது.

இதனால் தொல்லை என்பதும் தொந்தரவு என்பதும் பொருள் ஒன்றான சொற்கள் என்று அறிக.

சிலர் தொந்தரு என்பார்கள்.

வியாழன், 24 மே, 2018

USE OF COOKIES

IF you are a  visitor to this blog,  we do not know whether the software of this blog uses any cookies on your computer to allow you to go through the material herein.

If you consent to such cookies  if any, please enter our blog and read the materials offered.

If you do not consent please do not enter our blog.

If you enter, you are deemed to have agreed to   the use of such cookies.

-----------------------------------------------------------
HACKERS PL DO NOT CORRUPT THE TEXT.
-----------------------------------------------------------

சொல்லமைப்புத் தந்திரங்கள்.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை, சாரியை என்பன பதங்களைப் பகுத்தறிந்து கண்டுபிடித்தவை.  குகைமாந்தனும் காட்டுமனிதனும் பேசித் தொடங்கிய  எந்தமொழியிலும் அவன் செயல்பட்ட காலத்தில் இவற்றைக் கவனிக்காமலே சொற்களைப் புனைந்துகொண்டான் என்பதுதான் உண்மை.  ஆலமரத்தைப் பார்த்தான். மேலிருந்து நேராகக் கீழிறங்கும்  மரப்பகுதிகளை விழுது என்று குறித்தான். மேலிந்து அது கீழிறங்குவது "விழு"வது போலிருந்த படியால் அப்படிப் பெயரிடுவதே பொருத்தமாக அவனுக்குத் தெரிந்தது.  பிற்காலத்தில் மொழி பண்பட்டுச் செம்மை நிலை கண்டபோது வந்த இலக்கணப்புலவன் "து" என்று இச்சொல் முடிகிறதே,  இது பெரும்பாலும் அஃறிணையில் வருவதாயிற்றே, இப்படியும் அமைக்கலாம், விழு -  பகுதி;  து என்பதுதான் விகுதி என்று அறிந்துகொண்டான்.  அறிந்ததைப் பிறர்க்கும் உரைத்தான்.

பண்டை மனிதன் அறிந்தோ அறியாமலோ அமைத்த சொல்லை  ஆய்வுசெய்து அதன் உள்ளுறுப்பு ஒன்றை அறிந்து உரைத்தது  மொழிக்கும் ஒரு முன்னேற்றம் ஆனது. மிகமிகப் பிற்காலத்தல்  "கையில் " அகப்பட்டுக்கொண்ட குற்றவாளியைப் பிடிப்பதைக் "கைது" என்றும் அவனைக் கைதி  என்றும் மொழிச்சொற்களை மிகுத்துக்கொள்ளவும் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளவும் தந்திரம் மேவினான். கைது பொழுது  முதலிய சொற்களில் து விகுதி சொல்லமைப்புக்கு உதவியது மட்டுமின்றி  அழகும் சேர்த்தது . கொழு  >  கொழுந்து.   உள்  >  உளு >  உளுந்து. (  நாற்காலி  என்பதில் போல இஃது காரண இடுகுறிப் பெயர் ).  மரு >  மருந்து.

விகுதி என்பது உண்மையில் மிகுதியே  ஆகும்.   மி என்ற எழுத்து வி என்று திரியும்.  மாந்தன் தன் பேச்சில் மி என்று ஒலிக்காமல் அதை வி என்று திரித்து ஒலித்த காரணத்தால் இத்திரிபு ஏற்பட்டது.  இதை எப்படி உறுதிசெய்வது?  மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிவது முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.  அதனால் மிகுதி என்பது விகுதி என்று திரிந்தது என்று உறுதிகாண்கிறோம்.  இங்ஙனம் பொருள் மாறாமல் சொல்லானது இன்னோர் உருவெடுப்பது தமிழ் இலக்கணியர் கண்டுபிடித்துப் "போலி"  என்று பெயரிட்டனர்.  போல இருப்பதால் போலி ஆனது. இப்படிக் கண்டுபிடிததுக் கூறி நம் அறிவை அவர்கள் பெருக்கியுள்ளனர்.

பரம்பரை என்பது மனிதன் குழந்தைகள் உடையவனாகி அவன் குடி தொடர் கொண்டதைக் குறிக்கிறது. இதற்கு இன்னொரு சொல் வம்மிசம்.   வம்மிசம் மிசைமிசை வருதல்.  அதாவது மிசை - மேலும் மேலும் வருதல். வருமிசை என்பது வம்மிசை ஆகி,  அம் விகுதி பெற்று வம்மிசம் என்று மாறி அழகுற்றது.
சங்ககாலத் தமிழன் ஒருவன் உங்களைப் பார்த்து : "வம்மினோ., வம்மினோ" என்று கூவினான் என்றால்  வாருங்களேன்,  வாருங்களேன்"  என்று பொருள் தரும் நல்ல தமிழ் அது.  இத்தகைய சுற்றுச்சார்பில் எழுந்த சிற்றூராரின் சொல்லாகும் வம்மிசம் என்பது.   அது பின் வம்சம் என்று குறுகியது.  அப்புறம் வம்ஸ  ஆனது.  சில குழுவினரிடத்தில் அது  வன்ஸ  ஆனது.   மலாய் மொழியில் அது "வங்ஸ"  ஆகி,  "பங்க்ஸ"  வும்  ஆயிற்று.  இப்போது ஐக்கிய நாட்டு அவைக்கு   "பங்க்ஸ பங்க்ஸ  பெர்சத்து"  என்று பெயர். இவைகளெல்லாம் தாவல்திரிபுகள்.  இவை வாழ்க..இவை நம்மொழிக்குப் பெருமை சேர்ப்பவை.

சரி,  இனி ஒரு சொல்லை மட்டும் அறிந்து  இவ்விடுகையை முடித்துக்கொள்வோம்.

பாதி இரவுக்கு  நள்ளிரவு என்று சொல்வோம்.  நள் என்றால் நடு.  நள் என்பதே நடு என்று திரிந்தது.  நடு என்பதைத் தனியாய் நோக்கினால் அது இயற்சொல். ஆனால் நள் என்ற சொல்லையும் அறிந்து அதிலிருந்து நடு என்பது வந்தது நாம் அறிந்திருப்பதால்  நடு என்பது திரிசொல்.    ஆனால் இலக்கண நூல்கள் இவற்றுக்குக் கூறும் வரையறைக்கு இது சற்று வேறுபட்ட புரிதல் ஆகும். திருநள்ளாறு என்ற ஊர்ப்பெயரை நோக்குங்கால்   அது ஆற்று நடுவில் இருக்கும் ஒரு பெருந்திட்டில் அமைந்த இடம் என்று உணரமுடிகிறது. பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.  நள்ளாறு -  நடு ஆறு.  (சீர் அரங்கம் போல).

நள்ளிரவு என்ற சொல்லில் சலிப்பு ஏற்பட்டதோ என்னவோ,  அதேபொருள் உள்ள இன்னொரு சொல்லைப் படைக்க எண்ணினர்.  எண்ணி,  பாதிரம் என்ற சொல்லைப் படைத்தனர்.  அது எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.

நள்ளிரவு என்றால் பாதி இரவு.
பாதி + இரவு + அம்.
பாதி என்பது இகரத்தில் முடிகிறது.  இரவு என்பதும் இகரத்தில் தொடங்க, இரண்டு இகரங்கள் தேவையில்லை. ~வு விகுதியும் தேவையற்றதே.
பாதி+ ர + அம்.
இந்த ரகரம் அகரத்தில் முடிகிறது.  அம் என்ற விகுதியும் அகரத்தில் தொடங்குகிறது.  இரண்டு அகரம் எதற்கு?  ஆகவே:
பாதி + ர + ம்.   = பாதிரம்.

எனவே நள்ளிரவுக்குப் புதிய சொல்:  பாதிரம்.

பழைய சொல்தான் இதுவும். இப்போது வழக்கில் இல்லை.

எந்தச் செயலாலும் ஒரு பகுதி தாக்கம் ஏற்பட்டு இன்னொரு பகுதி தாக்கம் இல்லாதிருக்குமானால் அதைப் பாதிப்பு எனலாம்.

பாதி > பாதித்தல். பகுதி கெட்டது என்று பொருள்.

கள்ளப் பணத்தினால் நம் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கியத்தில் பாதித்தல் என்பது காண்க.

பாதி + அகம் = பாதகம்.  (கெடுதல்).

இப்போது இச்சொற்களில் பாதி என்ற பொருள் தொலைந்தது. முழுதும் கெட்டாலும் பாதித்தல் என்றே சொல்லலாம். 


8.4.2020 மறுபார்வை. சில தட்டச்சுப்
பிழைகள் திருத்தம் பெற்றன.







புதன், 23 மே, 2018

நித்தியம் என்ற சொல்.

தமிழறிஞர் சிலர் நித்தியம் என்ற சொல்லினமைப்பை  ஆய்ந்து வெளியிட்டுள்ளனர்.

இது நில் என்ற் அடிச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாய்க் கருதப்படுவது ஆகும்.

நில் > நிற்று >  நிற்றியம் >  நித்தியம்.

இது சிற்றம்பலம் >  சிதம்பரம் என்றானது போல.  (  பேராசிரியர் முனைவர் சேதுப்பிள்ளை அவர்களும் இது கூறியுள்ளார் )

நில்+ து =  நிற்று.
நிற்று + இ + அம் =  நிற்றியம்.
நிற்றியம் நித்தியம் என்பது பேச்சு வழக்கைப் பின்பற்றிய திரிபு.


இதை இன்னொரு வகையிலும் அறியலாம்:

நிறுத்துதலாவது ஒன்று நிலைநிறுத்தப்படுவது.

நில் > நிறுத்து.

நிறுத்து+  இ + அம் =   நிறுத்தியம்,

இடைக்குறைந்து  று என்ற எழுத்து மறைந்தால்:

நித்தியம்.

எல்லா உறுப்புகளும் உள்ளடங்கிய கூடு அங்கம் எனப்பட்டது.

அடங்கம் >  அங்கம்  ஆனது போல.  இதற்கான இடுகை காண்க.

பிழைகள் திருத்தம் பின்.

ராகுல் காந்தியும் சோமநாத ஆலயமும்

இராவுல்  வின்சி என்னும் இயற்பெயர் உடைய ராகுல் கான்தி குச்ராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்துக்கு வருகைபுரிந்த போது  நிகழ்ந்தவற்றை கீழ்க்கண்ட செய்தித்துணுக்கு  தெரிவிக்கின்றது.

https://timesofindia.indiatimes.com/india/somnath-temple-visit-rahul-gandhi-listed-as-non-hindu/articleshow/61849303.cms

செய்தியைப் படித்து மகிழுங்கள்.

முனிவரும் மௌனமும்.

மௌனம் என்பது  ஓர் அழகிய சொல்.  இது எப்படி அமைந்தது என்பதற்குப் பேச்சு வழக்கையும் பிற பயன்பாடுகளையும் ஆராய்தல் வேண்டும்.

தமிழ்ப் பேச்சுவழக்குச் சொற்கள் பலதிரிந்து அழகான சொற்களாகக் காணப்படுகின்றன.

முனிவன் என்பது   தமிழ்ச்சொல்.  முன்+ இவன் என்பதைப் புணர்த்தினால் முனிவன் ஆகும்.    முன்னிவன் என்று இரட்டித்தாலும் ஓர் ஒற்றுக் குறைந்து முனிவனென்றே வரும்.அப்போது அது இடைக்குறை என்பர் இலக்கணியர்.

 முனிதல் என்றால் கோபம் கொள்ளுதல் என்றும் பொருள்.  தாம் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் யாரேனும் போய்த் தொந்தரவு பண்ணினால் கோபம் அடைவர்.  அதனாலும் அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  முன்னுதல் என்றால் எண்ணுதல் என்றும் பொருள் உண்டு.  எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் முனிவர்கள்.  உணவுதேடி உண்ண நேர்ந்த நேரம் போக மற்ற நேரங்களில் அவர்கள் வேலை சிந்திப்பதே.

சிந்தித்துக்கொண்டிருப்பதால் இவர்களுக்குச் சித்தர்  என்றும் பெயர்.  சிந்தி > சிந்தித்தல்:  சித்து  > சித்தர்..  சிந்தித்தபின்  எங்கும் சிந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.  சித்தர் பாடல்களைப் பாருங்கள். எவ்வளவோ கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ,  அதாவது சிந்திச் சென்றிருக்கிறார்கள்.

முனிவர்கள் பெரும்பாலும் பேசாமை மேற்கொள்கிறார்கள்.  அதுவே இயற்கை நிலை ஆகும்.   ஐம்பூதங்களும்  பேசுவதில்லை.  அவற்றில் வாழும் செடிகொடிகள் பெரும்பாலும் ஒலிசெய்வதில்லை.  ஒலியின்மையே பெரும்பான்மை ஆதலால்  சித்தர்களும்   அதாவது முனிவர்களும் பேசாமல் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார்கள்.   அப்படிச் செயவதன்மூலம் அவர்களின் வாழ்வு இயற்கையுடன் மிக நெருங்கிய வாழ்வாகிவிடுகிறது.

முனிவர் என்ற சொல்லினின்றே மோனம் என்ற சொல் உருவாகிற்று.

முனி > முனிவர்'
முனி >  > மோனம்  ஆகிறது.   எப்படி?

முனி > மோனி > மோனம்.

முனி என்பது  உகரத்தின்முன்  மகர ஒற்று நின்ற சொல்.   ம்+ உ= மு.

மோனம் என்ற சொல்லிலும்  மகர ஒற்று உள்ளது.  திரிந்தது உகரமே ஆகும்,

உகரமானது  ஒகரமாகவும் ஓகாரமாகவும் திரியவல்லது,

1  வேற்றுமை உருபுகளில் உடன் என்பதை நோக்குக.  உடு + அன் = உடன்.
அன் விலகினால் மீதம் உடு.  இந்த உடு என்பது ஒடு,  ஓடு என்று திரிகிறது.

கந்தனுடன் ஓடினான்;  கந்தனோடு  ஓடினான்;   கந்தனொடு  ஓடினான்,

2 ஊங்கு என்பது  ஓங்கு என்பது இரண்டும் நெருங்கியவை,
" அறத்தினூங்கு  ஆக்கமும் இல்லை"  என்னும் போது  " அறத்தின் ஓங்கிய ஆக்கம் ஒன்றில்லை"  என்று சொல்வதே ஆகும்.

3.பேச்சு வழக்கில் உன்னுடைய என்பது  ஒன்ட, ஒன்னோட என்று திரிகிறது.

4 உதை என்பது ஒத என்று திரிகிறது,

5  கூகூ என்று கூவும் குயில் கூகிலம் எனப்படாமல் கோகிலம் என்று பெயர் பெறுகின்றது.   ஊகாரம்  ஓகாரமாகக் கொள்ளப்படுகிறது.

6  முகனை என்ற பேச்சுச் சொல்லிலிருந்துதான் மோனை என்ற யாப்பிலக்கணச் சொல் உருவானது என்று ஆய்வறிஞ்ர்  கருதியுள்ளனர்.

இவற்றால்   முனி > மோனி > மோனம் என்பது அமைந்த  விதம் விளங்குகிறது.

மோனம் என்றானவுடன் மவுனம் மௌனம் என்று திரிவதற்குத் தடையேதுமில்லை.

மோனம் என்பது இயற்கையின் முடிவற்ற நிலை.  ஆனால் சொல்லோவெனில் முனிவனிடமிருந்து வருகின்றது.  இதை நமக்கு உணர்த்திய பெருமை முனிவர்தமையே ஐயமின்றிச் சார்கிறது,

சிவமோ மோனகுரு எனப்படுவான்.  இயற்கை நிலை மோனமே.

முடிவற்ற அழிவற்ற மோனத்தில் கலந்துவிட்டால்.......

திருத்தம் பின்பு
==================================



செவ்வாய், 22 மே, 2018

பிற்புனைவுக் கூட்டணி - coalition after elections.


இன்னிசை வெண்பா

பிற்புனைவுக் கூட்டணி  ஆனாலும் பேதமற்று
நெற்பிளந்து  நேர்ந்தநொய் நேர  இணைந்தனரே
வற்புடன் சேர்ந்தாலும் வம்புபிற கொள்ளாமல்
அற்புத்தளை வாய்ந்தால்  அது. 


பிற்புனைவுக் கூட்டணி - coalition after elections.
பேதம் -  வேறுபாடு.    பெயர்+து +அம் = பேதம்.(திரிபு).
நொய் -  குறுநொய்.
வற்பு  -  வலிமையினால் 
நேர -  போல
அற்புத்தளை:   அன்பென்னும் கட்டு.
(சீவக.  28850)  காண்க.

மகாத்தீர் அதிகாரிகள் திறமை


திறத்தினொரு  மலைச்சுனையாய்  தேர்ந்தமகாத் தீரை
தேசமக்கள் கொணர்ந்தமர்த்த தீரபுத்தி  கொண்டார்;

மறைத்துவைத்த பணமனைத்தும் விளைத்தபயிர்  போல
மகாத்தீரும்  வெளிக்கொணர்வார்  குடிகளிது  சொன்னார்.

நிறைத்துயர்ந்த நேர்மையுள்ள அரசினதி  காரி
நிமிரறிஞர்  பலரதனில் குமிந்துழைப்ப தாலே

தரத்துயர்ந்த நடவடிக்கை இனி நலமே  செல்லும்
தரணியிலே  தொலைந்தபணம் உடன்பெறவே  கிட்டும்.

திங்கள், 21 மே, 2018

ஆத்மா ஒரு நுட்ப விளக்கம்.

எல்லாவற்றிலும் ஓர் ஆன்மா இருக்கின்றது என்பது மிகப் பழைய இறைக்கொள்கை ஆகும்.  அக்கொள்கை சரியானதா, தவறானதா என்பதன்று நாம் அறிந்துகொள்ளவேண்டியது.  அப்படி ஒரு கொள்கை பண்டைக் காலத்தில் இருந்தது என்பதுதான். ஒரு நதியிலும் ஆன்மா இருந்தது.  ஒரு கடலிலும் ஆன்மா இருந்தது. விண்ணிலும் ஓர் ஆத்மா இருந்தது. ஒளியிலும் ஆன்மா இருந்தது. அது இருந்திருந்தால் அதற்கு என்ன முடியும் என்ன முடியாது என்பதன்று நாம் அறிதற்குரியது. வெளியில் போன கழுதை வீடுதிரும்பும்வரை கத்திக்கொண்டிருந்தாலும் ஒரு காலத்துக்கொள்கை அந்தக் காலத்துக்கு உரியது; அப்போது அது சரியாகத் தெரிந்தது; நாம் அதை ஒன்றும் செய்யமுடியாது; இப்போது வேண்டுமானால் வேறு விதமாக நீங்கள் நம்புவதை யாரும் தடுக்கவும் இயலாது.

This belief system as you know is called ANIMISM, in anthropology.

ஆனால் பழைய கொள்கைகளின் அடிப்படையில் சொற்கள் அமைந்துவிடுகின்றன.  அவை அமைந்த பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாம் செய்தக்கவை யாவுமில்லை.

ஒரு பொருளின், ஆளின் அல்லது விலங்கின் அகத்து இருப்பதே ஆன்மா.  யாரும் ஆன்மாவைப் பார்க்க இயலாது.  உயிராய் இருப்பவனில் தேடினாலும் கிடைப்பதில்லை; செத்துப்போனவனில்  தேடினாலும் கிடைப்பதில்லை.  ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் ஆன்மா அறியப்படுகிறது.

அகத்து இருப்பதே ஆத்மா.

அகத்து  மா.

அகத்து  என்றால் உள்ளிருப்பது.

உம் என்பது உம்மைச் சொல்.

அது  - ஆன்மா-   அகத்தும் இருக்கும்.  சாகும்போது போய்விடவும் செய்யும்.  வெளியில் சென்றுவிட்டால் எங்கோ வெளியில் இருக்கும்.

அகத்தும்  ஆ.

ஆ என்பது ஆங்கு.  அங்கே.  இது சுட்டடிச் சொல்.

ஆ   ஈ  ஊ என்ற முச்சுட்டுக்களும் முதலில் அவ்வாறு நீட்சியுடன் இருந்து பின் அ, இ, உ என்று குறுக்கம் பெற்றன.  மொழிவரலாற்றில் நீட்சியுடைய ஓரெழுத்து ஒரு சொற்களே பலுக்குதற்கு எளியவையும் முந்தியல் மாந்தனுக்கு பயன்பாட்டு எளிமை உடையவையுமாய் இருந்தன என்று உணர்க.

இது அகத்து உம் ஆ என்று தோற்றம் காணாமல் அகத்து மா என்றும் தோன்றியிருத்தல் கூடும்.  முந்தியல் மாந்தன் இதை நமக்கு எழுதிவைக்கவில்லை ஆதலால்,  எந்தக் கொம்பனும் பகுத்தறிவின் துணைகொண்டே ஆய்தல் கூடும்.   அகத்தில் இருக்கும் பெரியது என்று இது பொருள்தரும்.  அப்படியாயின், உடலினும் பெரியது ஆன்மா என்பதை இக்காலக் கட்டத்தில் மனிதன் உணர்ந்துகொண்டான் என்று பொருள். நிகழ்வு அதுவாயின் அகத்து மா என்பது இசைந்து ஏற்கத்தக்கதொன்றாய் ஆகும்.

சொல்லிறுதி எதுவாயினும் அது அகத்து இருப்பதாய் உணரப்பட்டதேயாம்.1

அகத்துமா என்பது பின் ஆத்துமா என்றானது.  அதிலிருந்து ஆத்மா என்று பிறமொழித் திரிபு அமைந்தது.

அகத்து இருக்கும் காற்றுப்போனற அதற்கு அகவி >  ஆவி என்று பெயர் அமைந்ததும் மிகப்பொருத்தமே.  அகம்+ இ =  அக+இ  > ஆவி.

அகம் என்பது அ+கு+அம் என்ற சிறுசொற்கள் கொண்டுஅமைந்ததால், உண்மையில் இதை அ+கு+ இ =  அகு+இ  =  அகவி > ஆவி என்று கண்டு  கொள்ளலாம்.

அவி என்பது அவித்தல்.  வினைச்சொல். அது முதனிலை நீண்டு  ஆவி என்ற தொழிற்பெயராகும் என்பது எளிமையாகத் தரும் விளக்கம்.

அவி (வினை) >  ஆவி. (தொழிற்பெயர்).

ஒரு சட்டியில் வைத்து நீரைச் சூடேற்றுகையில் அங்கிருந்து இங்கு வெளியாவது ஆவி.

அ + இ  (சுட்டடிகள் ) >  அவி.  இப்படித்தான் அவித்தல் சொல் அமைந்தது.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்தால் தமிழ் தானே உருவாகித் தோன்றி வளர்ந்த மொழி என்பது தெற்றெனப் புலப்படும். அறிந்தோன் அறிவான். பிறன் அறியான்.

அகத்திலிருந்து உயிர்போலும்  வாழ்ந்து வெளிப்பட்டுச் சாவினை உண்டாக்கும் ஆவி    :  அகவி >  ஆவி.

அவிக்கையில் வெளிப்படுவது:   அவி >  ஆவி.

அகத்திலிருக்கும் மனம்  " அகம்".  நாம் அங்கு போய் அதை அறியலாகும்,  அது வெளியில் இல்லை.  ஆகவே  அ( அங்கு) + கு( சென்று சேர்வது  )+ அம் (விகுதி)  =  அகம்.

இந்த நுண்மை உணர்க.

முடிவு:  அகத்திருப்பது  அகத்துமா >  ஆத்துமா >  ஆத்மா.

இவற்றை விளக்கும் இறைநூல்கள் இருந்திருக்கலாம்.  அவை அழிந்தன,
சமஸ்கிருத நூல்களும் பல அழிந்தன.

அடிக்குறிப்பு .

1.  அகத்துமன்  >  ஆத்துமன் >  ஆத்மன்  என்றும்  வரும்.    மன்னுதலாவது  நிலை நிற்றல்.    மன்னும்  இமயமலை  எங்கள் மலையே  என்ற பாரதி பாட்டைப் பாருங்கள்.   அகத்து  நிற்பது  அகத்துமன் .


திருத்தம் பின்




ஞாயிறு, 20 மே, 2018

தென்றல், வாடை.

தென் திசையிலிருந்து வீசும் காற்று  தென்றல் எனப்படுகிறது.  இது இந்தியத் துணைக்கண்டத்திலுள்ளோர்க்கு மிகுந்த இன்பம் விளைவிப்பது என்பது பல பாடல்கள் உரைகளிலிருந்து நாம் தெரிந்துகொண்டது ஆகும். தென்றல் என்பதற்கு நேரான சொல் ஆங்கிலத்திலோ மலாய்மொழியிலோ இல்லை.  ஆனால் இனிய காற்றின் வீசுதலைக் குறிக்கும் வேறு சொற்கள் பிறமொழிகளில் இருக்கும்.  தட்பவெப்ப்ப நிலையும் காற்று போம் திசையும் புவியின் எல்லா இடங்களிலும் வேறுபடுகின்றன. இதேபோல்  சீனாவில் வீசும் காற்று வகைகளுக்கு உள்ள பெயர் தமிழில் இல்லை.

தென்றல் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதானால்  த சதர்ன் ப்ரீஸ் ஃபரம் த சௌத் வெஸ்ட் மன்சூன் இன் ஜூன் -  செப்டம்பர் பீரியட் (   the southern breeze from the south west monsoon in June -  September period  )என்று சொன்னால்தான் பொருந்துவதாகத் தெரிகிறது.

இதேபோல வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை எனப்படுகிறது. இச்சொல் அமைந்தது எப்படி?

வட > வடக்கு.
வட >  வட+ ஐ = வாடை.

இந்த வாடை என்னும் சொல்லானது  முதனிலை திரிந்து  -  அதாவது பல சொற்களில்போல நீண்டு -  ஐ என்னும் விகுதி பெற்று "வாடை" என்றாகி இருக்கிறது.  இறுதி அகரம் கெட்டது.   இறுதியில் நிற்கும் எந்த உயிரெழுத்தும் கெடும் அல்லது மறையும். ( எ - டு  : படி + அம்  = பாடம் ,  அறு + அம்  =  அறம் )( இங்கு இ உ முதலிய உயிர்கள் மறைந்தன ) .  அப்படிக் கெடாமல் இருக்குமாயின் வடவை, வடயை, வாடவை, வாடயை என்று எதாவது பொருத்தமான ஒன்று வந்திருக்க் வேண்டும்.  அவை எதுவும் பொருந்தாமையினால் வாடை என்ற அகரம் ஒழிந்தமைந்த சொல்லே மொழியில் வழங்குவதாயிற்று. உடம்படு மெய்கள்   ( யகர வகரங்கள்  )  எவையுமின்றி நீண்டமைந்து நன் `கு உருவெடுத்துள்ளது.

ஆனால் வாடை என்பது வடக்குக் காற்றை மட்டும் குறிப்பதாக இல்லை.  அது ஒரு கெட்ட வீச்சத்தையும் வழக்கில் குறிக்கிறது.  அது வடக்கு என்னும் சொல்லிலிருந்து வந்த சொல் அன்று.  அது அமைந்தது பின்வருமாறு.

வாடிப்போன இலை தழைகள்  நீரில் நனைந்து அழுகத் தொடங்கிவிட்டால் அது ஒருவித  வீச்சத்தை உண்டுபண்ணுகிறது.

வாடுதல்.  ( சற்றே நீர் வற்றிப் போவது ).
 வாடு :   கருவாடு:   மீன் காய்ந்து வாடி உப்பிட்ட உணவு. சிலர் உண்பர்.
(  இது முதற்குறைச் சொல்).
வாடு + ஐ =  வாடை.
நீர் வற்றிய -  காய்ந்த மரம் செடி கொடி விலங்குடல்கள் எழுப்பும் வீச்சம்.

வாடை என்ற வடக்குக் காற்று வேறு.
வாடை என்ற வீச்சம் வேறு.
இருவேறு தோற்றத்தின ஆகும்.


ஊழல் வேண்டுமோ? தூய்மை வேண்டுமோ?


(கலிவெண்பா )

ஊழலை முன்வைத்து  வாழ்வ  தெலியது
பாழுடை வீடெனில் கொள்வது துள்ளலே!

ஓட்டைகள்  போட்டுமே  மாட்டுவ தின்றியோர்
கோட்டையில்  போல குதூகலம் கூட்டுதல்..

நாட்டிலும் ஆதிறம் நாடிடு  மாந்தர்கை
யூட்டி னில்  ஓங்குதல் எங்கும்கண்  கூடு்ணர்!

 சட்டப்  படிவழிக்  கிட்டா  உரிமமே
கொட்டிக் கொடுத்தால் வசதியே கிட்டுதல்.

ஊழல்  வளாகத்தும் நன்மை உளதெனில்
வாழும் நலம்பெற வாய்ப்புறா  ஊழல்.

திறமொன் றிலாதார் பெறுவர்  முனைவர்
திறமுடை யோர்கீழ் இருப்பவர் காண்கவே..

ஊட்டினைப் பெற்றோரும் ஓட்டுவர் காலமே
காட்டில்  விலங்கென நாட்டிடும்  ஆட்சியே.

ஊழலைப் போற்றுவோர் பாதி உலகினில்
வாழ்முறை போற்றுவோர் பாதி உளரிவண்,

ஊழலும் ஆங்காங்கு வெல்லுமே ஓங்கிட
யாழிசை மீட்டுவர்  மூளை இலாதவர்.

ஈற்றினில் வீழ்ச்சியோ காற்றில் நெருப்புபோல்
கூற்றினை  ஆக்கும் குறிதவ றாதே.

கறுப்ப்புப் பணத்தை வெறுப்பவர் உண்டு;
கறுப்புப் பணத்தொடு  வாழ்பவர் உண்டுகாண்

ஊழல் இலாமை  உயர்பவர்  ஆயினோ
ஆழ்ந்தநற் சிந்தையர் போற்றுக  அஃதினை;

வெற்றி  கருப்புப்  பணத்தவர் பெற்றிடில்
சற்றும் அதனை   ஒழிகவே  .ஒற்றுதல்

உண்மை உலகினில் வெல்க  அதுகொண்டு
வண்மை பெறுமே உலகு.


Will edit and make some changes later.You may
enjoy this poem for now and you may
give your critical appraisal.




 
 



சனி, 19 மே, 2018

ளகர லகர ஒற்றுக்கள் விடுபடல்.

ஆள் என்ற சொல்லை நாம் இங்கு சிலமுறை ஆய்வு செய்துள்ளோம்.  இன்று அதை வேறு கோணத்தில் ஆய்கிறோம்.

கண்டாள். வந்தாள்,  சென்றாள் என்று வருவன அனைத்தையும் வாழ்மொழியாய் உதிர்க்கும்போது  கண்டா.  வந்தா,  சென்றா என்று பலர் பேசுகின்றனர். அவ  ஆடுவா,   ஆனா நல்லா இல்ல என்கின்றனர்.

இதில் நாம் காண்பது யாதெனில்  இறுதியில் வரும் ளகர ஒற்றினைப் பலரும் உச்சரிப்பதில்லை. இப்படிப் பேசுதல் தமிழருக்கு இயல்பாகும்,  வேறு மொழிகளைப் பேசும்போது இறுதியில் வரும் ரகர ஒற்றினை விட்டுப் பேசுதல் என்பது சீனர்களிடையே இயல்பாக உள்ளது.

இப்படி இறுதி ஒற்றினை விட்டுப் பேசினாலும்  (   எ-டு:  அவள்  - அவ),  ஆள் என்ற சொல்லைத் தனியாக உச்சரிக்கும்போது  ஆள் என்பதை ஓர் உகரம் சேர்த்து ஆளு என்று நீட்டிக்கொள்வது பழக்கம். ஆக ளு என்பதில் இறுதி உகரம் சாரியையாக நிற்கிறது.

ஆள் என்பது பெண்பால் விகுதியாய் வருவது ஒருகாலத்தில் பெண்கள் குடும்பங்களில் மேலாண்மை செலுத்தியதைக் காட்டுவது என்பதை யாம் முன்பே கூறியுள்ளோம்.

அவாள் இவாள் என்பது  அவ்  ஆள்  இவ் ஆள் என்பதன் குறுக்கம்.  சிலர் இங்கும் ளகர ஒற்றினை விட்டுவிடுவது இயல்பு.

முட்டாள் என்ற சொல்லிலும் ளகரத்தை விட்டுப் பேசுதல் இயல்பு.

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவ ராயா காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவராயா

என்று பாடலில் வரும்.

முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே

என்ற கண்ணதாசனின் வரியிலும் ளகர ஒற்று விடப்பட்டுள்ளது.

லகர ஒற்றும் இவ்வாறே விடுபட்டுப்  போவதைக் காணலாம்.

அத விட்டா வேறே  வழி என்று பேசும்போது  விட்டால் என்பது
விட்டா என்று வருகிறது.

போனால் போகட்டுமென்பது போனாப் போகட்டும் என்று வரும்,

ஆள், முட்டாள்.

முதலில் முட்டாள் என்ற சொல்லிலிருது தொடங்குவோம்.
 இரண்டு நபர்கள் 1  வாய்ச்சண்டையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர், அப்போது ஒருவர் இன்னொருவரைப்
 பார்த்து  "முட்டாள்" என்றார். அதற்கு இன்னொருவர்:
"முட்டாள் என்றாலென்ன தெரியுமா.நான்  முட்டு
முடுக்குகளையாவது  ஆள்பவன்; நீ   ஒன்று
மில்லாதவன் " என்றார்.   அப்போது யாம் இவர்
சொல்வதைக் கேட்டு  வியப்பிலாழ்ந்தோம்.
சொல்லாராய்ச்சி  என்பது மக்களிடம் இயற்கையாகவே
அமைந்து   கிடக்கிறது என்பதை உணர்ந்தேம்.

இவர்கள் பேசிக்கொண்டபடி  முட்டாள்
என்ற சொல்லில் இறுதியில் நிற்பது  "ஆள்"  என்ற
சொல்தான்.  அது  சரியானால்  இந்தக்  கூட்டுச்
சொல்லில்  முன்னிருப்பது  "மூடு"   அல்லது
"முட்டு"  அல்லது  "முடு"  ஆக இருக்கவேண்டும்.

இன்னொரு சொல் இருக்கின்ற தே:   "மூடன்"   என்பது..  
 அது    கூட்டுச்சொல் அன்று. இறுதியில் இருப்பது  அன்
என்ற  ஆண்பால் விகுதி.   எனவே  முன்னிருப்பது
 "மூடு"  என்பதுதான்.

இப்போது முட்டுதல் என்பதன்  அர்த்தங்களைக்
கவனிப்போம்.

எதிர்த்தல்
குத்துதல்
குறைதல்
மோதுதல்
தடைப்படுதல்
போரிடுதல்
வழுவுதல்.

முட்டு என்பதும்  பொருந்திய பொருள் உடையதாய்
உள்ளது.  குறைதல் என்பது  அதுலுமுள்ளது.

மூடம்  என்பது     அறிவின்மை என்று பொருள்
படுவதால்  மூடன் என்பது மூடமுடையவனைக்
 குறிக்கிறது.

முடு >   முடை:   பணத்தட்டுப்பாடு குறிப்பது.
இது  குறைவுப்பொருள். முடு >    முடம்:
உடற்குறை ஆகையால்  இதுவும்  குறைவுப்
பொருள்.

முடு,   முட்டு,   மூடு யாவும்  குறைவுப் பொருள்
உள்ள அடிச்சொற்கள் ஆதலால்   மனிதனுக்குள்ள
 ஏதேனும்   ஒரு குறையை உணர்த்தும்.

ஆனால்  முட்டாள் என்பதில்  உள்ள  ஆள் என்பது
ஆட்சிசெய்வோன்  என்று
பொருள்படாமல் நபர்   என்றே பொருள்படும்.

அடிச்சொல்:

முடு.

திரிபுகள்:

முடு > முட்டு>   முட்டாள்.
முடு > மூடு>  மூடம்>  மூடன்.





---------------------------------------------------
அடிக்குறிப்புகள்:

1.  நபர்:  ந(ண்)பர்.  இடைக்குறை     .தமிழிலிருந்து
உருது  இதை மேற்கொண்டது.

வெள்ளி, 18 மே, 2018

PARTY CROSS OVERS OR POACHING AN MLA



There is a lot of news about one party poaching { } an MLA from another party.  It appears in a country one political party has a quarrel with another over this matter,  according to news reaching us and in fact has gone to the Supreme Court.

But according our past readings on this subject, law is not a solution to this problem.

Historically, parliament took shape at an age before the development of party politics.  Even now in most countries, a party wishing to form the government to rule a country or a state  is only required to prove that it has the support of the majority of the members of the assembly, council, parliament or whatever.  There is no rule that all must belong to a certain party.

Since law upholds individual rights of persons and members,  a person or member can belong to any party. It would not be entirely possible to prevent cross- overs.  If you are party boss, you can have your own agreement with individual members.  In some legislatures, it appears that there are some enactments to prevent such cross-overs but the efficacy of these laws are another matter.  It appears also that a party may be able to secure the resignation of such members either by such laws or private agreements in certain jurisdictions.

These will make an interesting study.

If you are interested in doing  a PhD in law, this may be good topic for you to make your research.  There may be sufficient cases and materials for you.  After you are successful, we would be interested in reading your dissertation upon publication  just for fun. 

மக்கள் பதிலாளர் தம்மை அடைத்துவைத்தது

மக்கள்பதி லாளர்தமைப் பேழையகத் திருத்திவெளிச் செல்லீரெனக்
காத்துவைத்தார்,
ஒக்கவிருந் தூட்டியவர் ஓடும்வழி பூட்டினதோர் கூத்தினையே
ஏற்றிவிட்டார்;
தக்கதெது நாட்டினுக்கே தாமறிந்தார் அன்னவர்க்கே  இக்கதியோ
தரணிதன்னில்
நக்கதிதே ; நல்லதினிச்  செய்துயர நாடிடவே நாமகள்காப்
பாற்றுவாளே.

பதிலாளர் :  பிரதிநிதிகள்.
நக்கது இதே :  சிரிப்பது இதே.
நானிலமேல்:  உலகமீதில்
 

வியாழன், 17 மே, 2018

முச்சலிக்கை

இச்சொல் சிற்றூர்களில் தமிழ்நாட்டில் வழங்கப்படுவது. இக்காலத்தில் தமக்குள் ஒப்பந்தத்தில் ஈடுபடுவோர் வழக்கறிஞரிடம் சென்று வேண்டியதை எழுதிக்கொள்வர்.  முற்காலங்களில் சிற்றூராரே தமக்குள் இத்தகைய ஒப்பந்தகளை வரைந்து வைத்துக்கொள்வார்கள். இவை முச்சலிக்கை எனப்பட்டன.   அரசர்காலத்து அதிகாரிகள் அவற்றை ஏற்றுக்கொண்டனர்.

ஒரு காரியத்தைப் பேசி முடித்துக்கொண்டு செய்யப்படும் ஒப்பந்தம் எதிர்காலத்தில் அதை நோக்குவார்க்கு ஓர் அறிக்கை போன்றதே.  அது முன் முற்றுப்பெற்ற ஓர் ஒப்புதலைத் தெரிவிக்கிறது.

இப்போது சொல்லைப் பார்ப்போம்.

முடிச்சு  -   இது முடித்து என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.

அலிக்கை - இது அறிக்கை என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.


முடித்து அறிக்கை > முடிச்சு அலிக்கை > முடிச்சலிக்கை >  முச்சலிக்கை.

இது நீண்ட நாட்கள் வழக்கிலிருந்து வந்த காரணத்தால்  அறிக்கை என்பது அலிக்கை என்று மாறி டி என்ற எழுத்தும் சொல்லில் மறைந்தது.

டகரம் போலும் கடின ஒலிகளும் சிலவேளைகளில் பிற ஒலிகளும் இடைக்குறைதல் இயல்பு ஆகும்.  எடுத்துக்காட்டு:

பீடுமன் > பீமன் > வீமன்.  ( டுகரம் மறைந்தது).  பொருள்: பீடுடைய மன்னன்.
இராமாயணத் திரிபு.

தருமம் >  தம்மம்  ( பாலி மொழித் திரிபு).  

பெருமான் > பெம்மான்  (தமிழ்மொழித் திரிபு).

சான்று, கருத்து, வல்லுநர், அத்தாட்சி, சாட்சியம்.

சில ஆய்வாளர்கள் நன் கு ஆய்வு மேற்கொள்ளாமல் சொற்கள் சிலவற்றை இழிஞர் வழக்கு என்று ஒதுக்கிவிடுகின்றனர்.  அப்படி அவர்கள் ஒதுக்கம் செய்ததற்கு எந்த ஆதாரமும் அவர்கள் காட்டவில்லை. இறுதியில், தாம் மக்களிடம் புகழ்ப்பெற்று விளங்கின நிலையையும் தமது கல்விச் சான்றிதழையும் தவிர அவர்களிடம் வேறு ஆதாரங்கள் எவற்றையும் நாம் அறிந்துகொள்ளமுடியவில்லை.

இப்படி முடிவுகள் செய்வது அவர்களின் கருத்தின் அடிப்படையில்தானே அன்றி வேறில்லை.  சட்டத்துறையில் கருத்து அல்லது அபிப்பிராயம் என்பதற்கும்  சான்று அல்லது அத்தாட்சி என்பதற்கு  உள்ள வேறுபாடு, அத்துறையில் நின்ற முன்னணி அறிஞர்களால் நன் கு விளக்கப்பட்டுள்ளது.  சொந்தக் கருத்து என்பது ஒரு சான்று ஆகாது.  அதற்கும் மதிப்பு அளிக்கவேண்டும் என்றாலும் சான்றுக்கு அளிக்கப்படும் மதிப்பைவிடக் குறைவான தகுதியையே அதற்கு அளிக்கமுடியும்.  இத்தகைய கருத்துரைகளால் ஒரு முடிபை எட்டிவிடுதல் இயலாது.

ஒருவர் அமைச்சராகவோ அல்லது அரசுமுறை அலுவலர்களில் பெரியவராகவோ இருந்திருக்கலாம். அந்த வேலைமூலம் அவர் பெரும்புகழ் அடைந்தவராகவும் இருக்கலாம். இருப்பினும் ஒரு சொல்லைப் பற்றிய அவர் கருத்துரையானது சான்றுகளின் அடிப்படையில் அமைவுறாமல் தம் சொந்தக் கருத்தினடிப்படையிலும் தம் இயக்கத்தின் கருத்தடிப்படையிலும் இருக்குமாயின் அதை ஒரு மேலான தகுதிக்குரிய சான்று என்று கொள்வதற்கில்லை.  இதை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.

நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஒரு வல்லுநர் சாட்சியம் அளித்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கைதேர்ந்த பொறியியலாளர் என்று கருதப்பட்டவர். வேறு பல வழக்குகளிலும் இயந்திரங்கள் பற்றிய அவருடைய சாட்சியங்கள் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.  அன்று நடந்த வழக்கில் அவருடைய சாட்சியம் ஓர் இயந்திரம் பற்றியது. அவருடைய மூலச் சான்றுரை முற்றுப்பெற்றபின் குறுக்கு விசாரணை தொடங்கியது.

இன்று நீர் விளக்கிய இயந்திரத்தைப் போல் முன் எத்தனை இயந்திரங்களைப் பயின்று சாட்சியம் அளித்துள்ளீர் .....  என்பது அவரிடம் கேட்கப்பட்டது.  அவர் பல இயந்திரங்கள் பயின்று சாட்சியம் அளித்துள்ளேன் என்றார்.   "ஆனால் இது புதிய இயந்திரம். இதைப்போன்றது முன் வெளிவரவில்லை,  எனவே நீர் விளக்கிய இயந்திரங்கள் வேறுமாதிரியானவை; இது நம் முன் உள்ளது முற்றிலும் வேறுபட்டது. இதில் நீர் எப்போது வல்லுநர் ஆனீர்?" என்று அவரை நோக்கிக் கேள்வி பறந்தது.  "ஆமாம். இது புதியதுதான்.  இதைப்போல் பிறிது முன்னர் இருந்ததில்லை"  என்று அவர் ஒப்புக்கொண்டார்.  அதன்பின் அவருடைய சாட்சியத்தை நீதிமன்றம் "வல்லுநர் சாட்சியமாக"  ஏற்கமறுத்துவிட்டது.

இப்படி வல்லுநராகத் தெரிகின்ற ஒருவர் வல்லுநரும் அல்லர்.
அப்படிக் கருதப்படாத ஒருவர் வல்லுநராகவும் இருக்கலாம்.
ஒருவர் வல்லுநரா அல்லரா என்பது ஆய்ந்து முடிவுசெய்யவேண்டிய ஒன்றாகுமென்பதை அறியவேண்டும்.

பத்திரிகைகளில் பலதரப்பட்ட கருத்துகள் வருகின்றன.  பல தலைவர்கள் கூறியனவாகச் செய்திகளும் வெளியிடப்படுகின்றன.  ஆனால் இவையெல்லாம் வெறும் வெளியீடுகள்தாம்.  மெய்ப்பிக்கப்பட்டவை அல்ல.

பலவேளைகளில் பத்திரிகைச் செய்தி ஒரு சான்றாகமாட்டாது.  எதிர்க்கட்சி தேர்தலில் வென்றுவிட்டது என்று பத்திரிகை சொல்லலாம். அதைவைத்து வென்ற தலைவருக்கு பதவி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள ஒரு நாட்டு அதிபர் இசைவுகொள்ள இயலாது.   தேர்தல் அதிகாரிகளுள் தலைமையானவர் வந்து எழுத்துமூலமாகச் சமர்ப்பித்தாலே அதை அந்த அதிபர் ஏற்றுக்கொள்ள முடியும்.  அதுவரை அதிபர் காத்திருக்கத்தான் வேண்டியுள்ளது,  இப்படி  ஓர்
அரசியல் நிகழ்வும் அண்மையில் நடந்தேறியது.

சரி. இப்போது அத்தாட்சி என்ற சொல்லைப் பார்ப்போம்.  இது சான்று என்ற சொல்லுக்கு இணையாக வழங்கப்படுவதுண்டு.

அத்து :     இது அற்று என்பதன் திரிபு.   முன் இருந்த நிலையை மாற்றியமைப்பது சான்றுகள் தாம்.  எனவே சான்றுகள் புகுந்தபின் முன்னைய நிலை அற்றுப்போகிறது.

ஆட்சி:   இது மேலாண்மை செலுத்துவதைக் குறிக்கிறது.  புதிதாக வந்துள்ள சான்றுகள் பழைய நிலையை மாற்றி ஆள்கின்றன அல்லது நிலைப்படுத்துகின்றன.  ஆள்+சி = ஆட்சி ஆகும்.

அத்து + ஆட்சி =   அத்தாட்சி.

இதில் கிருதம் எதுவும் இல்லை.

சான்று:  இதன் அடிச்சொல்:  சாலுதல்.  அதாவது நிறைவு தருவது.  சால்+து = சான்று ஆகும்.
சாட்சியம் :  இது சாட்டுதல் என்ற சொல்லினின்று திரிந்தது.   சாள்> சாடு;
சாள்> சாட்டு.  இங்கு சாள் என்பதே அடிச்சொல். இதனைப் பின்னர் விளக்குவோம்.  குற்றம் சாட்டுதல் என்ற வழக்கையும் நோக்கவும்.  இப்படிச் சாட்டுதற்கு ஆதாரமானது சாட்சியம்.  இங்கு அம் என்பது விகுதி.  இதில் சி அம் இரண்டும் விகுதிகள்.
அத்தாட்சி:  அழகாய் அமைந்த திரிபுச்சொல்.

அறிந்து மகிழ்வீர்.

கர்நாடகத் தேர்தல் : கட்சி என்பதன் பொருள்.

நல்ல கூத்தாக இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில்
இப்போதுதான் மக்கள் தேர்ந்தெடுத்தோருள்
இருவர் காணாமற் போய்விட்டார்களாம்.
கட்சி மாறிவிட்டார்கள் என்பது
ஊடகங்கள் எழுப்பும் ஐயப்பாடு.

எது எப்படி ஆனாலும்
எடியூரப்பா  (ப ஜ க )  முதல்வராகப் பதவி உறுதிமொழி
எடுத்துக்கொண்டுவிட்டார்.
அதைத் தடுக்க எதிர்க்கட்சி மேற்கொண்ட
உச்சநீதி மன்ற வழக்கு
தள்ளுபடியாகிவிட்டதாம்!

இனி நடப்பன கவனித்துக்கொண்டிருங்கள்.


இப்போது கட்சி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கள் என்பது அடிச்சொல்.

கள்+து:     கட்டு,  கட்டுதல்.  வினைச்சொல் ஆக்கம்.
கட்டுவது என்றால் தனித்தனியானவற்றைச் சேர்த்து இணைத்தல்.

புல்லைக் கட்டுதல்.  புல்லுக் கட்டு.
மாடு கட்டுதல்.
கலியாணம் கட்டுதல்.
இப்படிக் கட்டுதல் பல.

கள்+தி = கட்டி.    கட்டு+ இ = கட்டி எனினுமாம்.
இருவழியிலும் சொல் அமையும்.

சீனிக் கட்டி.  சக்கரைக் கட்டி முதலிய கட்டிப் பொருள்கள்.
கட்டி புறப்பாடு.

கள்+து+ஐ =  கட்டை.   கட்டு+ஐ = கட்டை எனினுமாம்.
குட்டை > கட்டை என்றும் அமையும்.
குள் ( நீட்டமில்லாதது) என்றும் பொருள். கட்டப்பட்டது
என்றும் பொருள்.

கள் என்ற அடிக்குப் பல பொருள் உண்டு.  கருப்பு என்பதும்
ஒன்று.  கள் குடிவகை இன்னொன்று.

கள் > கழ   ஒ.நோ:  அள் > அழ.   கொள் > கொழு.  (முன் இடுகை)

கழ > கழலை:  கட்டி.  புறப்பாடு.

கழ> கழகம்.

கள > களம்:  பலர் ஒன்றாக நிற்குமிடம்.  அல்லது பலரும்
பொருள்களும் சேர்ந்திருக்குமிடம்.   எ-டு: போர்க்களம்.

கள்+சி :  கட்சி.
பலர் இணைந்திருக்கும் நிலைமை.
சி:   தொழிற்பெயர் விகுதி.   அழல்> அழற்சி;  மலர் > மலர்ச்சி எனக்
கண்டுகொள்க.

கட்சிகள் இரண்டு மூன்று தொகுதிகளானால்  >
மூன்று கட்சிகள் என்பர்.
 
கள் என்னும் அடி பல சொற்களைப் பல பொருள்பட
விளைத்துள்ளது.

புதன், 16 மே, 2018

வேலைக்காரன் என்பதில் காரன் பின்னொட்டு.

இக்காலத்தில் காரன் காரர் காரி என்று முடியும் பல மெல்ல வழக்கிழந்து வருகின்றன. மாட்டுவண்டிகள் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் "வண்டிக்காரன் வந்துவிட்டானா? இல்லையா?"  என்று கேட்கும் ஒலி காதில்விழலாம்.  இன்று இல்லை.   ஆட்டோக்காரன் என்ற சொல் பேச்சிலும்  திரைப்பாட்டிலும் வழக்குப் பெற்றுள்ளது.  மலேசியா சிங்கப்பூர் முதலிய தெங்கிழக்காசிய நாடுகளிலும் அமெரிக்கா ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் ஆட்டோ என்று இந்தியாவில் வழங்கப்படும் தானி இல்லையாதலால்,  இச்சொற்கள் எம் காதுகளை எட்டக் காரணமில்லை.

ஆனால் காரன் என்ற தமிழ்ப்பின்னொட்டு இந்தியாவெங்கிலும் பரவியுள்ளது.  கர் என்று முடியும் இயற்பெயர்களிலும் சாதிப்பெயர்களிலும் அது  இந்தியாவில் பெரிதும் பயின்று வழங்குகின்றது.  இதுமட்டுமின்றி ~ஆர், ~அர் என்பனவும் பயின்று வழங்குகின்றன.  கர் என்பதற்கு வேறு பொருளும் காணப்பட்டு, மக்கள் மகிழ்ச்சியாய் உள்ளனர்.

காரன், கார், கர் என்பவெல்லாம் பரவியுள்ளமையைச் சில ஆண்டுகளில் ஆய்ந்து அறிந்துகொள்ளலாம்.  இல்லாவிட்டால் ஆய்வுசெய்த அறிஞர்பால் சென்று ஓரிரு நாட்களில் உணர்ந்துகொள்ளலாம்.

ஐலேகர், ரபானிகர் என்றும் இன்னும் பல பெயர்களிலும் வரும்.

வண்டிக்காரன் என்ற சொல் வண்டி என்ற சொல்லுடன் ~காரன் என்ற பின்னொட்டு இணைந்து அமைந்ததாகக் கொள்ளலாம்.  அப்படியே பிள்ளைகட்கும் கற்பிப்பதிலும் தவறொன்றுமில்லை.

ஆனால் உண்மையை அறிந்துகொள்வதும் இன்றியமையாதது ஆகும்.

வேலைக்கு  ஆர்  அன்.

ஆர்தல்:  பொருந்துதல்.  அடைதல்  (வந்து சேர்தல்),  ஒத்தல்,  தங்குதல்,
இவைதவிர இன்னும் பல பொருள் உள. அப் பலவற்றுள்ளும் இங்குக் குறித்தவை ஏற்றவை.

அன் என்பது அவன் என்னும் பொருளில் வரும் ஆண்பால் விகுதி.

எனவே:

வேலைக்கு + ஆர் + அன்

=  வேலைக்காரன் என்றால்,  வேலைக்குப் பொருந்தியவன் என்பதே பொருள்.

இப்படிப் பல சொற்களிலும் வந்துள்ளதால் ~காரன் என்பதைத் தனியாகப் பிரித்து எடுத்து ஒரு முன்னொட்டாகக் கொண்டு விரைவாகச் சொல்லுடன் ஒட்டிக்கொள்ளலாம். மோசம்  ஒன்றுமில்லை.

ஆர் என்பதைப் பன்மை விகுதியாகக் கொண்டு  வேலைக்கு ஆர்  > வேலைக்கார் ஆக்கி, பின் அதில் அன் என்றும் ஆண்பால் ஒருமை சேர்த்து வழுவமைதி என்றும் இலக்கணம் கூறலாம்.  மரியாதைப் பன்மை விகுதி புகுத்தி இறுதியில் அன் ஒருமை சேர்க்க, அது பணிவு இழிபு காட்டுவதாய் வரும்.   இது ஆர் என்ற சொல்லின் பொருள் மறக்கப்பட்டமையால் தோன்றுவதாய்க் கொள்ளவேண்டும்.

வள்ளுவனார் :  இதில் அன் விகுதி புணர்த்துப் பின் ஆர் என்னும் பணிவுப் பன்மை சேர்க்கப்பட்டது.  இது முன் கூறிய பணிவு>இழிபுக்கு எதிர்மாறானது ஆகும்.  ஒருமையிலிருந்து பணிவுப் பன்மையிற் சென்றது காண்க.

எப்படிப் பார்த்தாலும் விளக்கத்தில் குறைவில்லை.