ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பணம் பந்தியிலே



பந்தி என்னும் சொல்

பந்தி என்னும் சொல் எப்படி அமைந்தது? 

 பணம் பந்தியிலோ குலம் குப்பையிலேஎன்பது ஒரு தமிழ்ப் பழமொழி.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன்று தொடங்கும்      ஒரு திரைப்பாடலை எழுதிய கவி, அமரர் கா.மு. ஷெரீப் என்று தெரிகிறது. குலத்தினும் பணமே ஆற்றல் மிக்கது என்கிறது பழமொழி. “ இந்தப் பழமொழியை அறியாதவன் மனிதன் இல்லேஎன்`கிறார் கவிஞர்.

ஆனால் பந்தி என்ற சொல்லின் தோற்றம் அறிந்துகொள்ள இந்தப் பழமொழியின் உதவி தேவை இல்லை.   பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் வரிசை அல்லது பல வரிசைகள். அங்கனம் வரிசையாக அமர்ந்துண்ணும் உணவுக் கொடை அல்லது விருந்து. 1[

பல்: அடிச்சொல்.   பொருள்:  பொருந்தி அல்லது கூடி யிருத்தல்.


இதனடிப் பிறந்த சொற்கள் சிலவற்றையாவது  அறிந்துகொள்வோம்.

பல்   -.  மேவாய் கீழ்வாய் எலும்புகளுடன் பொருந்தி நிற்பது.

பல் > பல்+து >  பற்று.    (௳னம் பொருந்தியுள்ள நிலை).

பல் > பல்+ தி > பன்றி.   ( நீண்ட பற்களை யுடைய விலங்கு).

பல் >  பன் > பன்+து > பந்து.
.நோ:  சில் >  சின் > சிந்து .

( சிந்து என்பது சிறியது என்று பொருள்படும் சொல். அளவடிக்குக் குறைந்த நிலையினது யாப்பியலில் சிந்து எனப்படும்.  சிந்து  என்பது சிறு நூலையும் குறிக்கும் என்றார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எனும் வரலாற்றறிஞர்.  இது சிந்து நதி அளாவிய நிலப்பகுதிகளில் விற்கப்பட்டதனால், நதியும் அப்பெயர் பெற்றது. இச்சொல் பின் ஈரான் சென்று ஆங்கு இந்து ஆனது.  பின் இத்திரிபு மீண்டும் இந்தியாவிற்கு வந்தேறி இறுதியில் ஒரு மதத்திற்கும் பெயரானது என்பதை முன் எடுத்து எழுதியுள்ளோம்.)
எங்கெங்கு உலவினும் சில், சின் என்ற அடிகள் இன்னும் நம்மிடை நின்று நிலவுதல் நம்  பாக்கியமே ஆகும். இது நிற்க:
பந்து என்பது கயிற்றாலோ துணியாலோ சுருட்டிப் பிடிக்கப்பட்ட உருண்டை.  இப்போது செய்பொருள்கள் மாறிவிட்டன.

பல் > பன்  > பந்தி.  (பன்+தி).
.நோ:   முன்+தி > முந்தி.

பலர் பொருந்தி அல்லது சேர்ந்து உண்பதே பந்தியாகும்.  

திரட்சி என்பதன் முதலெழுத்தாகிய தி,  ஈண்டு விகுதியாய் நிற்றலும் பொருத்தமே ஆகும்.

பல் பல:  ஒன்றுக்கு மேற்பட்டவை..   (   இரண்டும் அதற்கு மேற்பட்டவையும் எனினுமது.)

பந்தியிலும் உண்டு மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  (விருந்து என்னும் சொற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு.)

விருந்து + அம் = விருத்தம்: வலித்தல் விகாரம்.  பொருள்: புதுவகைப் பா.




[1][1]

கருத்துகள் இல்லை: