நினைவில் நிறுத்தத் தக்க திரிபுகள்
சிலவற்றை இங்குப் பதிவு செய்வோம்.
தாவணி > தாமணி
வகரத்துக்கு மகரம் பதிலாக நிற்கும்
திரிபுவகை.
குறில் நெடிலாகியும் பொருள் மாறாமை.
தலம் > தாலம்
தரணி > தாரணி.
சில தமிழ்ச் சொற்கள் குறில் நெடில்
விதந்து தோன்றாத பிற மொழிகட்குச் சென்றால் நீண்டொலிக்கும். வந்துழிக் காண்க. இங்கு யாம் பட்டியலிடுதலைத் தவிர்ப்பேம்.
சில சொற்களில் ழகர ஒற்று வீழும்.
தாழ்மதித்தல் > தாமதித்தல்.
இது நேரமதிப்பீட்டினோடு தொடர்புபட்ட
செயல்பாட்டினை குறிப்பது. இப்போது செய்வதைப்
பின் செய்வதுபோலும்.
சில சொற்களில் ழகரத்துக்கு டகரம் ஈடாதல்:
பாழை : பாடை.
தாழ்ச்சி : தாட்சி.
தாழ்ச்சணியம் : தாட்சணியம்.
மீறிப்போகாமல் தாழ்ந்து அணிசெய்தல்
எனினுமாம்.
இதில் வல்லவன் அருளன்பு காரணமாக மேட்டிலிருந்து
இறங்குதல்போல் கீழ் தாழ்ந்து நிகழ்வை அழகு
படுத்துகிறான். இஃதோர் அரிய செயல்பாடாகும்.
இரங்குவோனே மாந்தன்;
அறிந்து மகிழ்வீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக