இன்று
சினை என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.
சினை
என்பது தொன்றுதொட்டு தமிழ்ச்சொல் என்று கருதப்பட்டு வருகின்ற சொல் ஆகும். இதனுடன் ஒலி ஒற்றுமை உடைய சொல் உலகில் பிறமொழிகளிலும்
கிடைக்கலாம்.
மலேசியாவில்
சீனாய் என்று ஒரு தேய்வைத் தோட்டம் உள்ளது.
ஆனால் தமிழ்ச்சொல் சினை என்பது இந்தச் சீனாய் என்பதினும் வேறுபட்ட சொல் என்று
தோன்றுகிறது. இஸ்ரேலில் சீனாய்க் குன்று உள்ளது.
ஏதும் தொடர்பு உள்ளதாகத் தெரியவில்லை. சினை
என்பதை ஆங்கில எழுத்துக்களால் எழுதினால் Sinai என்றுதான் பெரும்பாலும் எழுதவேண்டியுள்ளது. குழப்பம் நேரலாம். Si என்பதும்
nai
என்பதும் சீன மொழியிலும் உள்ளது. இவற்றின்
தொடர்பை ஈண்டு ஆராயவில்லை. உங்களுக்குத் தேவையானால் நீங்கள் ஆராய்ந்து முடியுமானால் எமக்கும் தெரிவியுங்கள்.
இவை நிற்க:
சினை
என்பது தமிழில் உறுப்பு என்று பொருள்படும் சொல். பேச்சில் பெரும்பாலும் இது விலங்கு
வயிற்றில் குட்டி உடையதாய் ( கருவுற்றிருப்பதாய்) உள்ள நிலையைக் குறிக்கிறது. இலக்கணத்தில் சினைப்பெயர் என்று ஒரு வகையும் உள்ளது. கை, கால், தலை என்பவை சினைப்பெயர்கள். இவை உறுப்புகளின்
பெயர்கள்.
இனிச்
சொல்லை ஆய்வு செய்வோம்.
சின்
- சிறியது.
ஐ = அய்
= அ. இது சுட்டுச் சொல். அங்கிருக்கிறது என்று
பொருள்படும்.
சுருங்கச்
சொன்னால், இந்தத் தமிழ்ச்சொல், சிறியது அங்கு (
உள்ளில் ) இருக்கிறது என்று பொருள்படும் அழகிய சொல்.
சின்
என்பது இன்னும் வழக்கில் உள்ளது. சின்னையா
என்ற பெயரில் அது உள்ளது. சின்னப்பையன் என்பது
இன்னும் காதில் விழும் தொடர். ஒன்றைப் போல
சிற்றளவினதாக வரையப்பட்டதை இன்றும் சின்னம் என்`கிறோம். மின்னல் சின்னம்; இலைச் சின்னம் எல்லாம் தேர்தலில்
பயன்படுவன. இப்படிச் சிற்றளவு என்று தொடக்கத்தில்
குறித்த சொல் பிற்காலத்தில் பெரிய அளவினதையும் குறிக்க வழங்கி நாளடைவில் பொருள் விரிவு
அடைந்தது என்று அறிக.
சின்
என்ற சொல் அடி, சில் என்பதிலிருந்து வருவது. சொல் வரலாற்றில் லகரம் முன்னது. னகரம் பின்னது என்று அறிக. எடுத்துக்காட்டாக வள்ளல், இளவல், அண்ணல் தோன்றல்
என்பன காண்க. அல் என்பது அது என்று பொருள்படுவது. செயல் : செய்யும் அது. இது பிற செமித்திய மொழிகளிலும்
உளது. அல் கைதா தீவிரவாதிகள் என்`கிறோம் அல்லோமோ? இது பின் அன் என்று திரிந்துவிட்டது. சுழியன்; சூடன். இது பின் அம் என்று திரிந்தது: அறம் திறம். செமித்தியத்தில் அல் முன்னும் தமிழில் பின்னும் இணையும்.
சில சொற்களில்
இம்மூன்றும் உள்ளது, திறல் திறன் திறம்.
இனிமைத்
தமிழைப் படித்தும் பேசியும் இன்புறுங்கள். இன்னும் பல கூறலாம் எனினும் இனி வரு நாட்களுக்கும்
வைத்திருப்போம் கொஞ்சம்.
பிழைகளையும் கூடுதலாகக் கள்ள மென்பொருள்கள்
புகுத்தும் தொல்லைதரு புள்ளிகளையும் மீண்டும் வந்து கவனிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக