தொடக்கத்தில் அமெரிக்க அரசினர், இந்தியா என்ற ஒரு நாடு உருவானதை
அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைக் குறிப்பிடவில்லை.
இந்தியர் என்று சொல்லப்படும் மக்களின் குமுகச் செயல்பாடுகளும் பிற அணுகுமுறைகளும் அவர்களுக்கு
ஒத்துவரவில்லை. இப்படிச் சொல்வதில் பிழையிருந்தால்,
பாகிஸ்தானுக்கு அளித்ததுபோன்ற உதவித்தொகைகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவிடமிருந்து
கிடைத்திருக்கவேண்டுமே! உதவிக்குரியோர் பாகிஸ்தான் என்னும் அரசினர்தாம் என்று முடிவு
மேற்கொண்டனர். அதை முறையென்று காட்ட காரணங்களையும் கண்டுபிடித்துக்கொண்டனர்.
இருநாட்டின் பெருமதங்களிலும் ஒற்றுமைகள் காணப்படுவதால், பாகிஸ்தானுடன்
ஒத்துப்போவது எளிது என்று ஹென்றி கிஸிஞ்சர் போன்ற
கொள்கை உருவாக்கச் செம்மல்கள் வெளிப்படையாகத் தெரிவித்ததுண்டு.
அமெரிக்கத் தலைவர்கள் டைமாக்கள் 1 என்று நினைத்த பாகிஸ்தான் உதவியைப்
பெற்றுக்கொண்டு அந்தத் தொகைகளை இந்தியாவிற்கெதிராகப் போர் செய்யவும் பயங்கரவாதிகளை
உருவாக்கவும் நன்`கு பயன்படுத்திக்கொண்டது. எல்லாம் அறிந்த அதிகப் பிரசங்கிகளாக அமெரிகாவால்
கருதப்பட்ட அப்போதையத் தலைவர்கள் நேருவிற்கும் கிருஷ்ண மேன்னுக்கும் இதனால் ஒருவகையில் தோல்வியே.
இவ்வளவு காலமும் அறியாமைக் குளத்தின் ஆழத்தில் கிடந்த அமெரிக்காவிற்கு
இப்போதுதான் விவரம் புரிந்துள்ளது. அமெரிக்கக்
குடிமக்களின் பணத்தைக் கொண்டுபோய்ப் பாகிஸ்தானுக்குத் தாரை வார்ப்பதில் ஒரு நன்மையும்
இல்லை என்பதை உணர ஒரு டிரம்ப் வரவேண்டியிருந்ததை இப்போது உலகமும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு முளைத்துள்ளது.
பெரிய பெரிய கூரியபுத்திச் சூரியன்`களுக்கும் பின்னால்தானே மண்டைத்
தெளிவென்பது உண்டாகுகின்றது? ஆனால் அது உண்டாகாமலே பலர் சென்றுவிட்டனர்.
1. daima - தொடர்ந்து அப்படித்தான் என்பது அரபிப் பொருள்.
ம - டை என்பதைத் திருப்பிப் போட்டால் டை-ம ( மா ) தமிழில். fools.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக