இன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் சமைத்து வயிறார உண்டு சற்று
உறங்கி எழுந்திருந்தால்,
நீங்கள் வாழ்க வாழ்க.
பல சொற்களின் அமைப்பையும் அறிந்துகொண்டு, வயிறு என்பதன் அமைப்பைக் கண்டறியாமல்
இருத்தலானது, அஃது எதையும் அறிந்துகொள்ளாமைக்குச் சம்மானதாகும்.
இதயத்தினும் வயிறு முன்மை பெறுகிறது. ( முன்மை என்றால்
முன்னிருக்கும் தன்மை. முதன்மை என்றால் எண்ணிக்கையில் ஒன்றாவதாக இருக்கும் தன்மை.
அதற்கப்புறம்தான் இரண்டு மூன்று நான்`கு என்பனவெல்லாம். )
வாயிலிருந்துதான் உணவுக்கான வழி தொடங்குகிறது. இந்த நீண்ட
வழி பின் சென்று முடிந்தாலும், உணவு குடலில் தங்கிப்
பிறகுதான் கழிநிலையை அடைகிறது. அது தங்குமிடமாகிய குடலே உணவின் இறுதியிடம் என்று கொள்ளவேண்டும். பலமணிநேரம் தங்கிப் பின்
இறங்கும் பயணத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆகாது. காரணம் இனித் தேவையில்லாமையினால்
மேற்கொள்ளும் பயணமதாம்.
வாய்
- தொடங்குமிடம்.
இறு -
முதற்பயணம் நின்று, செரிமானம் ஆகும்
வேலைகள் நடைபெறும் முடிவிடம். இறு > இறுதி. என்றால் இறுதியிடம்.
மலக்குடல் இக்கணக்கில் விலக்கு என்று முன்னரே விளக்கப்பட்டது.
வாய் + இறு > வாயிறு > வயிறு. ( உணவு சென்று தங்கும் உடலின்
பகுதி)
வா என்ற எழுத்து வ என்று குறுகிற்று. இப்படிப்
பல சொற்கள் குறுகி அமையும். இதை எம் பழைய இடுகைகளைப் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுங்கள். மறந்திருந்தால் ஒன்றிரண்டு குறிப்போம்:
சாவு + அம் = (சாவம்) > சவம்.
கூம்பு + அம் = (கூம்பம்) > கும்பம்.
தாள் +
அம் = தளம் (> தளபதி
). தாளம்
என்பது இன்னொரு சொல்.
சாவம்
கூம்பம் என்பவை அகரவரிசைகளில் இரா. ஏனென்றால் அவை
கருவிலிருப்பவை; இன்னும் பிறக்காதவை. சவம், கும்பம் என்பவை நிறைமாதமானவை. முன்னவற்றை இடைநிலை வடிவங்கள் என்று குறிப்போம்.
இனி அப்பொருள் மேற்கொள்ளும் பயணம், கழிவுச்செலவு ஆகும். அதன் இறுதி குதத்தில் முடியும். அது தரையில் குந்தும் பகுதியில் உள்ளது.
குந்து > குந்துதல்
( அமர்தல் ).
குந்து
> குது
( இடைக்குறை ) > குது + அம் = குதம்.
சொல் அமைப்புப் பொருள் : தரையில் குந்தும் உடலின் பின்பகுதி.
வாய் என்ற தமிழ்ச்சொல், உலக சேவையில் உள்ள சொல். வய via என்று இலத்தீன் அதைப்
பெற்றுக்கொண்டது. இறுதியாக அது “வே” way என மாறி, ஆங்கிலம் அதை
ஏந்திக்கொண்டது. இது
இந்தோ ஐரோப்பியத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
தமிழிலும் பல சொற்களில் முன் துண்டாகவும் பின் துண்டாகவும்
பயிலுமாறு காண்பீர்.
உணவை வைக்குமிடமே வாய். வை> வாய். எதையும் தொடங்குமிடம்
வைப்பிடமாகும்.
அறிந்து களிப்புறுக.
திருத்தம் பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக