வெள்ளி, 28 மார்ச், 2014

சின்னஞ் சிறு...

சின்னஞ் சிறு வீ   டாக்கி
சேர்ந்தங்கு  மணலில் ஆடி
கன்னங்கள் நகையே பூத்த
கனிவான சிறுவர் தம்மை
இன்னாத சாவில் சேர்த்தாய்
இதில்பிழைத் தாலோ தாங்க
ஒண்ணாத துன்பம் தன்னில்
ஓவாதே அலற வைத்தாய்.

மணலிலே ஆடும் போது
மகிழ்ந்திட்ட சிறுவர் என்றும்
கணமேனும் கருதினாரோ
கடலம்மை கொல்வாள் என்று?
குணமனம் பிணைந்த காதல்
கோலத்துச் சோடி எங்கும்
நினைத்தது முண்டோ ஏக
நேர்ந்திடும் அலையில் என்று!

இது  "கண்ணீரில்  விளைத்த வாழ்வில்"  என்ற தலைப்பிட்ட கவிதையின் தொடர்ச்சியாகும். இவை சுனாமி  சமயத்தில் எழுதப்பட்டவை. அறுசீர் விருத்தங்கள் .

sday, March 27, 2014

27.htmlகண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


http://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_27.htmlhttp://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_27.html





  

கருத்துகள் இல்லை: