ஞாயிறு, 9 மார்ச், 2014

"நானும் ஓர் ஆட்டக்காரி தான் "

குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து ஓர்  இனிய பாட்டு. பாடிய புலவர்  மன்னன் கரிகாலனின் மகளாரான ஆதிமந்தியார். உண்மையில் இஃது  ஒரு துயரப் பாடலாகும்.  (ஆதிமன் + தி =  ஆதிமந்தி,  தி பெண்பால் விகுதி.   ன்+தி = ன்றி  என்று வரவில்லை).  ஆதி = ஆக்க காலம் ;  மன் = மன்னன், அரசு.  மன்  என்ற சொல்லில் அன் என்னும் ஆண்பால் விகுதி இல்லாமையால், அஃது  பால் தெளியப்படாத சொல் என்க . பொதுச்சொல். **

இனிப் பாடல் காண்போம்:

மள்ளர் தழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
 யாண்டும் காணேன் மாண் தக்கோனை;
யானுமோர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர்  இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.  (31)

மள்ளர் = மறவர்.  soldiers. தழீ இய (அளபெடை )= தழுவிய.  இங்கு கூடிய (கூட்டமாய்ப் பொருந்தி யுள்ள  என்று பொருள்  )    விழவினானும் =   களித்து ஆடுமிடத்திலும்.  துணங்கை =  பெண்கள் ஆடும் "துணங்கை" என்னும் ஒரு நடனம் .   ~யானும் :  அஃது  ஆடுமிடத்திலும் ;    யாண்டும் =  எவ்விடத்திலும் ;   மாண் தக்கோன் = மாண்பு  பொருந்தியவன்.  என் தலைவன்.

யானுமோர் ஆடுகள மகளே   =  நானும் ஓர் நடனமாடு கூட்டத்தில் ஒருத்தியே;
கோடு ஈர்  =  அறுத்துச் செய்யப்பட்ட; இலங்கு -  ஒளி வீசும்;  வளை = வளையல்கள் .  நெகிழ்த்த =  (துயரம் விளைத்து அவை )  கழன்றிடும்படி செய்த .;  பீடுகெழு  =  பெருமைக்குரிய; குரிசில் =  தலைவன் .  ஆடுகள மகனே. =  நடனக்காரன் தான்.

ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள். மணமுடித்த சின்னாளில் காவிரியில் நீராடச் சென்றவிடத்து, அவர்தம் கணவனை ஆற்றுவெள்ளம் கொண்டுசென்றதாம்.  காவிரிக் கரையோரத்திலும் மற்ற இடங்களிலும் அவனை அவர் தேடினார். ஆடுகளங்களிலும் தேடினார்.  பயனொன்றுமில்லை.
கண்ணீரில் தோய்ந்துவிட்டார்.

தேடிக்கொண்டிருந்த வேளையில் யாரும், "நீவிர் ஆடுகள மகளா ?"  (ஆட்டக்காரியா?) என்று கேட்டனரோ என்னவோ அறியோம்.  அழகிய இளம்பெண், அண்மையில் மணமுடித்த அரசிளங்குமரி என்று கேட்டவர் அறிந்திலர் போலும். " ஆமாம், நானும் ஓர் ஆட்டக்காரிதான்,  என் தலைவரும் ஓர்  ஆட்டக்காரர்  தாம் .  நான் அணிந்த வளையல்கள் தாமே கழன்று விழச் செய்துவிட்டார்  ! " என்கிறார் அரசிளங்க்குமரியாகிய இப்புலவர்.

நல்ல  கவித் திறன் படைத்தவர். தம் கணவனைப் புனலில் போகக் கண்டு தேடிய ஞான்று,    தவித்த காலை எழுந்த பாடல் .  பெயர் ஒன்றும் குறிப்பிடாமற் பாடியதால், அகப்பொருள் பாடலாயிற்று.  படித்து நாமும் அவர் வருத்தத்தில் பங்குகொள்கிறோம்.

மகளுக்கு நேர்ந்த இத்துயர் அறிந்து மாவீரன் கரிகாலனும்  மிகுந்த துயரில் மூழ்கி எங்ஙனம்  மகட்கு ஆறுதல் கூறுவேனென்று தலை சுழன்றிருப்பன்.

ஆதிமந்தியார் earns our esteem and admiration by identifying herself with common dancers soldiers  etc., during such a period of trial and tribulation in her youthful life. She could have said: " no, I am a princess." But she did not.
At the base of her lines is her deep understanding of life itself......Whether princess or ordinary person, everyone is subject to the rigours and calamities in life....!  The soldiers go from place to place to do their battles as ordered.  The dancing girls go from place to place performing their art. She is going from place to place looking for her husband carried away by the waters.......hoping to find him.  soldiers....hoping for victory!  dancers, hoping for more fans and money..! No hope no life!

~   means you have to import the preceding word.

will edit later if necessary. In the meantime, you may enjoy the poem.




குறிப்புகள் :

** தன் + திறம் >  தன் + திரம் >  தந்திரம்;
மன் + திரம்  = மந்திரம் . முன்னுதல் >  மன்னுதல் .  எண்ணுதல்   திறம் > திரமாகி ஒரு  பின்னொட்டாகப் பயன்பட்டுள்ளது.  இதுபோன்ற சொல்லாக்கப் புணர்ச்சிதான் ஆதிமன்+தி என்பதும்.  ஆதிமன்றி எனின்  இன்னா ஓசை பயக்கும்.  எனவே இலக்கணியர் சொல்லும் வழக்கமான  புணர்ச்சி விதிக்கு சொல்லாக்கத்தில் வேலையில்லை .  In the construction of words special rules would apply as necessary.

பீடு+மன் = பீடுமன் >  பீஷ்மன் >  பீஷ்ம .  ( பீமன் > வீமன் ) பெருமைக்குரிய மன்னன் என்பது பொருள்.  இது ஒரு காரணப் பெயர்.  Just for your knowledge,  note the corruption of the word "man".மன்  Note there are instances where da (ta) is replaceable with sha:  பாஷை .-  பாடை ;   ரிஷபம்  -  இடபம்     

கருத்துகள் இல்லை: