ஞாயிறு, 16 மார்ச், 2014

ஆனந்தம்

வீட்டுக்கு ஒரு ஆ(பசு)வாவது இருக்கவேண்டும். இருந்துவிட்டால், பால், வெண்ணெய், தயிர்,மோர் என்றிவற்றுக்கெல்லாம் ஒரு குறைவுமிருக்காது. ஆம்!  அதுவும் தம் சொந்த ஆவாக இருந்தால் அதுவே எல்லையில்லாத மகிழ்ச்சி ஆகும்.

ஆவைக் கண்டால் மகிழ்ச்சி. அதன் பாலை உண்டால் மகிழ்ச்சி. தயிர்ச்சாதம் அன்னை தந்தால் மகிழ்ச்சி. தண்ணீர் தவிக்கும்போது மோர் கிடைத்தால் மகிழ்ச்சி. தம் ஆ எனில் அழகு!  அழகு!

அந்த அழகே மகிழ்வு!

தம் ஆன்  அம்.  தம்= சொந்த ; ஆன் = ஆ; பசு;  அம் ‍=  அழகு.

இதை,    ஆன்+ அம்   +  தம்  எனில் ஆனந்தம் ஆகிறது.

ஒரு வாக்கியமே  வார்த்தையானது.  ஒரு  சொற்றொடரே சொல்லானது.

இப்படி அமைந்தவை பிற மொழிகளிலும் உள்ளன.  எல்லாமே பகுதியும் விகுதியும் இடைச்சாரியையுமாய் அமைதல் இல்லை.

அம்  அழகு என்று பொருள் கொள்ளாமல்  அம்  - தாய்  என்றாலும் பொருந்துவதே . .....  என்றால்,  ஆவைத்  தாயெனப் போற்றி மகிழ்ந்து,  அம்மகிழ்வு  "ஆனந்த ' மாயிற்று  என்று கூறுதற்கும் இடமுண்டு.  மேலும் இதனின் முந்திய இடுகையில் "அம் "  விளக்கம்பட்டுள்ளதும் காண்க

"தம்" என்ற்பாலது "தமது" எனப் பொருள் தருதல் மட்டுமின்றி, ஒரு விகுதி போலவும் இச்சொல்லில் புனைவு பெற்றுள்ளது. A dual function for "tham"..தம்  என்பது முன்னொட்டாகவும் பின்னோட்டாகவும் பெற்ற சொற்கள் பலவாம்.

கோகுலத்துள்  எழுந்த சொற்களில் இதுவுமொன்று.

இந்தியாவெங்கும் தமிழர் வாழ்ந்தனர்.(1) அவர்களின் சொல் யாண்டும் பரவியது.
=======================================================================
Notes:
(1)  நாராயண  ஐயங்கார் இன்னும்  பிறரும்.

 (2) வட இந்தியாவிலிருந்து  திராவிடர் தென்னாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்  என்று இன்னும் பலர் நம்புவதால், அவர்கள் மொழி எங்கும் பரவியிருந்தது என்பது தெளிவாகும்.
திராவிடர் என்பதே  "விரட்டியடிக்கப்பட்டவர்கள்"  என்று பொருள்படும் என்கிறார்கள்.


கருத்துகள் இல்லை: