"நிலை பெறச் செய்தல்" என்பது, உண்மையில் கீழே விழுந்துவிட்டதை நிமிர்த்தி நிற்கச் செய்தல் என்ற செயலினின்று எழுந்த சொல்லாக்கமாகும்." அடுத்து, ஒருவர் நிற்கச் செய்த ஒன்றை இன்னொருவர் வந்து பிடுங்கி எறிந்துவிடுதல் கூடுமாதலால், அங்ஙனம் நிகழாமல் காத்தலையும் ""நிலைபெறச் செய்தல்" என்னும் தொடர் தழுவிக் குறித்தது என்பது சொல்லாமலே புரியும். கருத்துகள் விரிந்து சென்றாலும், ஒரு முதல்தொடரே நின்று அவ்விரிவுகளையும் உள்ளடக்கிக் குறித்தல் எல்லா மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு நிகழ்வாகும். இங்ஙனம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் ஒரு சொல்லுக்குப் பலகாலும் வந்தணைவதை ஆய்ந்து அறிந்துகொள்ளலாம் . இதுவேயன்றிக் , கண்ணாற் காணப்படாத, பருப்பொருள் அல்லாதவற்றையும் சொற்கள் அல்லது தொடர்கள் பொருள் விரிந்து குறிக்கலாம். "காதலை நிலைபெறச் செய்தல் " என்ற தொடரில் கண் காணாத மனவுணர்வு சுட்டப்படுகிறது. விழப் போகும் மரம்போல. அல்லது சுவர் போல பருப்பொருள்கள் யாதும் ஈண்டு தென்படவில்லை. Meaning has been extended to cover the abstract.
இனிச் சாதித்தல் என்பது காண்போம். இந்தச் சொல் "சாய்த்தல் " என்ற கருத்தின் அடிப்படையில் எழுந்த சொல். " நீங்கள் கேட்டதை நாங்கள் செய்து முடித்துவிட்டோம் " என்பவனைப் பார்த்து: " என்ன அப்படிச் சாய்த்து விட்டாய்?" என்று கேட்பதில்லையா? ஒன்றை நிலைபெறுவித்தல் ஒரு வெற்றிச்செயல். சாய்ப்பதும் அப்படியே.
சாய்க்க முடியாத மரத்தைச் சாய்ப்பதுவும் ஒரு பெருவெற்றிதான். இதைச் சாய்க்க இயலாது என்று பார்த்துக்கொண்டிருந்தவன் தான் அந்நிகழ்வுக்கு உரிய நீதிபதி. சாய்த்தல் என்பது நிலைபெறுவித்தலுக்கு எதிர்மாறான செயல் திறன் ஆகும்.
சாய்த்தல் > சாய்தித்தல் > சாதித்தல்
எனவே மரம் வெட்டுத் தொழிலினின்றும் நாம் ஒரு சொல்லைப் பெற்றோம் என்று மகிழ்வோம். தொழிலாளர் வாழ்க.
ஒப்பீடு :
சாய் > சாதித்தல்
வாய் > வாதித்தல்
அதிகம் வாதம் செய்வோனை சில வேளைகளில் நிரம்ப வாயுள்ளவன் என்பர்.
("ரொம்ப வாயி ") வாதித்தல் - வாயடியாக வந்த சொல்லே ஆகும்
வல்லினத்திற்கு முந்திய யகர ஒற்றுக்கள் மறைதல் பேச்சுமொழி இயல்பே.
ஒப்பீடு:
உய் > உய்த்தல்.
உய்(த்தல் ) > உய்த்தி > உத்தி (உய்த்துணர்வு பற்றிய கொள்கை). யகர ஒற்று மறைந்தது.
இடைக்குறை இதுவாகும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக