மேல் என்பதினின்று மேனன் வரை என்பதில் சொல்லாக்கங்கள் சிலவற்றைக் கண்டோம். மேனோன் என்பதுமதே!
கேரளம் (<சேரலம் ) சற்று விரிந்த கடலெல்லை கொண்ட நாடு (இப்போது மாநிலம்). அரபு தேயத்திலிருந்து வந்த வணிகர் குழுக்களிடத்து வேலைக்கமர்ந்த உள் நாட்டினரைக் கண்காணிக்க . மேல்பார்க்க மற்றும் கணக்கெழுத எழுதப் படிக்கத் தெரிந்த உள் நாட்டினரே நேமிக்கப் பட்டனர். இவர்கள் (ஒவ்வொருவரும் ) மேலோன் என்றழைக்கப் பட்டனர். இச்சொல்லே மேனோன் என்று முறைப்படி திரிந்தது.
லகர னகரத் திரிபுகள் இயல்பானவை. (என் பல இடுகைகளையும் படித்து இன்புறுங் காலை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பட்டியலிட்டுக் கொண்டால் பின் ஐயம் எழாது.)
மேனன் என்பது மேலன் என்பதன் திரிபே.
மேனன் என்பது பின் ஒரு சாதியாய் முகிழ்த்து எழுந்தது. ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்ட குழுவினரும் ஒரு சாதியினராய் மாறியது இந்தியாவெங்கும் காணலாகும் ஒன்று. பஞ்சாபு மானிலத்தில் தண்ணீர் தூக்கி வீடு வீடாகக் கொண்டு கொடுத்தவர்கள் தண்ணீர் தூக்கிச் சாதி யானது போல. (water carriers)
மெனா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது பெண், பெண்விலங்கு மற்றும் பேச்சு என்றெல்லாம் பொருள் தரக்கூடியது. இதிலிருந்து சொல் அமைய வாய்ப்பில்லை . இதை விவரிக்க (விரித்து வரிகள் செய்ய) முற்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக