[இது எண்சீர் ஆசிரிய விருத்தம்,]
வடதிசையும் தென் திசையும் வந்திருந்த பத்திசெய்வோர்
வயப்பட்டுத் தொழுதிடவே வழியே செய்ய,
குடதிசையும் குணதிசையும் கூடிநின்ற ஆர்வலர்கள்
கோலமுனீ சுவரனையே வணங்கி உய்ய,
தடையொன்றும் இலதாகித் தகைபெருகித் தமிழ்முரசார்
தானமொன்றும் அன்னத்தால் தரவே மக்கள்,
விடைபெற்றுச் சென்றார்கள் வீடுகளில் பக்திமணம்
விஞ்சியதே பற்றுமிக விளங்க வாழ்வீர்.
காணொளிக்குக் கருஜி அவர்கட்கும் தமிழ்முரசுக்கும் நன்றி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக