வெள்ளி, 19 ஜூலை, 2024

ஷியாம் என்ற சொல்லின் தமிழ் இணைவடிவம்

 நீங்கள் இந்த ஷியாம் என்ற சொல்லின் அழகிய வாயொலிப்பைப் பலமுறை கேட்டிருப்பீர்கள். என்ன அழகான சொல்.  ஷி என்றால் அவள். யாம் என்பது நாம் என்பதுபோல் தந்நிலைக் குறிப்புச் சொல். அப்படியானால் பொருள் அவளும் நாமும் எனல் உண்மையன்று. இது (ஶியாம்) ஒரு சங்கதச் சொல். அது நம் பூசை மொழியினின்று வருகிறது,  ஆகவே ஆங்கிலத்துக்கு இதில் வேலையில்லை,

ஒரு சொல்லின் ஆக்கம் முழு வினைச்சொல்லிலிருந்து வரலாம்,  ஒரு பெயரிலிருந்து வரலாம், எச்ச வினையிலிருந்து வரலாம்  -  சுருங்கச் சொல்வதானால் எதிலிருந்து எதுவும் வரலாம்.  அப்படித்தான் உலகின் மற்ற மொழியறிஞர்கள் சொல்கிறார்கள். வினை எச்சத்திலிருந்து வந்த சொல்லும் அழகாய்த் தான் உள்ளது.  இதைச் சிற்றூரார் அழகாக, சட்டி ஓட்டை என்றாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்பார்கள்.  இது  இப்படித்தான் அமையவேண்டும் என்று ஏன் தாமே தடங்கல்களை இலக்கணம் என்ற பெயரில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனற்பாலது அறிவுள்ள கேள்விதான். தமிழில் நாம் ஒரு மரபைப் பின்பற்றுகிறோம். ஓர் ஏவல்வினையிலிருந்தோ ஒரு பெயரிலிருந்தோ இன்னொரு சொல்லை அமைத்து ஆனந்தப் படுகிறோம். காக்கும் இல்லம் ஆவது என்பதைத் திருப்பிப் போட்டு,  இல்லம் ஆகும் காப்பதற்கு என்று வைத்துக்கொண்டு  இல்+ ஆ+  கா =  இலாகா , அதாவது பணிமனை என்று பொருள்கொண்டு மேற்கொள்வது மிகக் குறைவே ஆகும். முறைமாற்றுச் சொற்கள் தமிழிற் குறைவு. நமக்கு வேண்டியது செந்தமிழ் அன்றோ?  திருப்பி அடித்துப் போடுவன செந்தமிழாகுமோ?

இவ்வாறெலாம் சிந்திப்பான் தமிழ்ப்புலவன்,  அது சரிதான். முறையான சொற்களைப் படைக்க முடியாமல் திணறும் போது எளிதான வழியில் சில முறைமாற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் நம் முன்னோர்.

முறைமாற்றையும் கூரான சிந்தனைப் பேராசிரியர்களும் கண்டுபிடிக்கத் திணறிப்போகிறார்கள்.

ஆனால் பாலி மொழியிலோ சமஸ்கிருதத்திலோ இந்த நடைமுறைகள் எளித்தாக்கம் பெற்றுள்ளன,  ஓர் எச்சத்திலிருந்தும் சொல்லைப் படைத்துக்கொள்ளலாம்.

இப்போது சாயும் காலம் > சாய்ங்காலம், என்பதைப் பார்த்தால் ஒரு சொற்றொடரைக் குறுக்கி  மாலை என்பதற்கு ஈடாக ஒரு சொல் படைக்கப்பட்டுள்ளது. அதையும் மக்கள் பயன்படுத்தவே செய்கின்றனர்.

ஒரு சொல்லுக்கு எல்லாப் பொருண்மைகளும் உள்ளடக்கமாக வேண்டியதில்லை.  சொல்லுக்கு அது அமைந்தபின் மனிதனே பொருளை ஊட்டுகிறான். அதாவது அருத்துகிறான். (  அருந்தும்படி செய்கிறான்).  Meaning is fed into the word.  It is the feeding of meaning in use that is important.  அர் என்பது ஒலி என்றும் பொருள்படும்.  அர்> அரட்டு. அர்> அர்ச்சனை. r = roar! அர் > அறைதல். ர-ற பேதம் கெட்ட வெளிப்பாடு.

மனிதனே பொருளூட்டுவதால், எப்படித் தொடக்கத்தில் சொல் வந்தது என்பது முக்கியமன்று என்று புலவர் சிலர் நினைக்கின்றனர்.

சாய்ந்துவிட்டால் இரவு வந்துவிடுகிறது.  சூரியன் சாய்ந்துவிட்டால் இருள் என்பது தெரியாதோ? எந்த மனிதனும் அத்துணை கூமுட்டை இல்லை!

 ஷியாம் என்பது.

சாயும் > ஷியாம் >    ( இருள்.)

சாயும் என்பது தமிழில் பெயரெச்சம்.

சாயும் அழகு = ஷியாம் சுந்தர்.

இருளழகன்.

ஷியாமளா.  கண்ணன்.

நீலமேக ஷியாமளா

நேரிழையாளைக் கண்டு

மாலாகினேன் நான் மாதவா.....(பாட்டு)

கடவுளோ எங்கும் இருக்கிறார்

இருள் வானில் இல்லையோ?  அங்கும் கடவுள்.

இருள் வானம்  அது இயற்கைக் கடவுள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: