வாழ்வெல்லாம் சொற்பனமே என்னும் போது
சார்திகளும் பிரிவுகளும் கனவு தானே?
வாழ்விலிதே உண்மைஎன்ப திந்துப் போக்கு
சார்திஎன்ப தொன்றுமட்டும் உண்மை அன்று
சூழ்வதுவும் சுற்றியுள்ள எல்லாம் காணின்
சொந்தமாகும் வீட்டுக்கு என்னும் சிந்தை
வாழ்சமயம் ஒன்றனுக்குப் பொருத்த மில்லை
வளம்சாரும் இந்துவிலே சார்தி இல்லை.
பண்டைநாளில் நூல்கள்துறை பிரித்துப் போட்டுக்
கொண்ட இதில் இதுவடங்கும் என்பார் இல்லை.
ஒன்றுதுறை அதிற்கலவாப் பொருளும் இல்லை;
சென்றதிலே கலந்திருக்கும் குறைகள் இல்லை;
வென்றபோர்க் கதைகளிலெ குடும்பம் உண்டு;
வீழ்வு சாவு மேற் செலவென் றெல்லாம் உண்டு!
இன்றையநூல் போலாமை பழமை நூல்கள்
இனிதவற்றைக் குழப்பாமல் உணர்ந்து காண்பீர்.
பொருள்:
சொற்பனம்: சொப்பனம், ஸ்வப்பனம்
சார்தி = சாதி, ஜாதி, சார்பு என்ற சொல்லுடன் தொடர்புடையது
சாதி.
போக்கு - கொள்கை
வாழ்சமயம் - புதிய நிலைகள் தோன்றிக்கொண்டிருக்கும் வளரும் சமயம்.
பண்டை நூல்கள் ஒரு துறைக்குள் அடங்குவன அல்ல. ஆகவே சமயத்தில் வாழ்க்கையில் உள்ளவையும் கலந்திருக்கும். எனினும் அவை சமயத்தின் பகுதி அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக