பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்து தெவ்வோர்
எழுபது கோடி யுறும்
என்பது திருக்குறள். பழுது பண்ணும் மந்திரியை அருகில் வைத்திருப்பதற்கு, எழுபது கோடி பகைவர்கள வைத்திருக்கலாம் என்கின்றார் தெய்வப் புலவர் நாயனார். பகைவர்கள் தொலைவில் இருப்பவர்கள். அவர்கள் படை எடுத்து வருவராயின் அதை அறிவதற்கு அரசு இயந்திரத்தில் பல உள்ளமைப்புகளும் ஒற்றர்களும் இருப்பார்கள். எளிதில் அறிந்துகொள்ளலாம். பல போர்களில் எதிரியும் ஆத்திரத்தைக் காட்டுவான். போர்ப் புறக்கடவுதல் செய்வான் ( பிரகடனம்). இத்தகைய வசதிகள் மந்திரி செய்யும் சூழ்ச்சிச் சூழலில் கிடைப்பதில்லை. இன்னும் விரித்து ஒரு கட்டுரையாகக் கூட எழுதலாம். எழுத எழுத ஆனந்தமே.
தெறுதல் எனின் அழித்தல் என்பதும் பொருள். போர் நடத்தி எதிரியின் ஒரு கட்டிடமும் இல்லாமல் அழித்துவிடுவதுதான் பண்டைத் தென்னிந்தியப் போர்களில் வழக்கம். சிங்கப்பூரை யப்பானியர் எடுத்துக்கொண்ட இரண்டாம் உலகப் போரில்கூட முதன்மைவாய்ந்த கட்டிடங்களின் தொடர்பில் இப்படி நடந்துகொள்ளவில்லை. அறிவோம் இதிலிருந்து பல ஆயின் இவற்றினை இங்கு விரியோம்.
தெறுதல் என்பது பகைத்து அழித்தல்.
தெவ்வோர் என்றால் பகைவர் ஆதலின் இதிலிருந்துதான் தெவ்வோர்> தேவோர்>தேவர் : படைமறவர் என்று வந்திருக்குமோ என்று நீங்கள் ஓர் ஆய்வு செய்யலாம். அவ்வாறாயின் தேவர் என்பது படைஞர் என்றும் பொருள்தரும். செய்து ஆய்வில் ஈடுபடுக.
தெறுநர் என்ற சொல்லும் பகைவர் என்றே பொருள்தரும். இது தென்னர் என்று மாறிற்று. "றுந" என்பது "ன்ன" என்று திரிந்தது.
தெறுவோர் என்பது பகைப்பவர்கள் என்று பொருள்படும். தெறுகிறவர்கள். பகைப்பவர்கள்.
இது நாளடைவில் தெறுவோர்> தெ(வ்)வோர் என்று திரிந்துவிட்டது . இந்தச் சொல்தான் குறளில் வந்துள்ளது,
று வல்லெழுத்து. கெடும்.
வகர ஒற்று இரட்டித்தது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக