ஒரு மந்திரவாதி தன் மந்திரத்தினால் தன்னுடன் அருகில் இல்லாத ஒருவனுடன் சென்று பொருந்துகிறான். இதையவன் மந்திர ஆற்றலினால் செய்கிறான். இது ஒருவகைப் பொருந்துதல் ஆகும். பொருந்து என்றால் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தன் கட்டுக்குள் கொண்டுவருதல். இதற்குத் தமிழ் "புல்லுதல்" என்ற அடிச்சொல்லிலிருந்து ஒரு சொல்லைத் தருகிறது.
புல்(லுதல்).
புல்> புல்லு> புல்லி > பில்லி.
புல்லுதல் என்றால் பொருந்தியிருப்பது.
அலலா வாயினும் புல்லுவ உளவே என்ற தொல்காப்பியத் தொடரில் 'இல்லாவிட்டாலும்' பொருந்தக்கூடியனவும் உள்ளன என்பது பொருள்.
இது புல்லி > பில்லி என்றானது. புல்லு என்பதை ( புல் முளைத்திருப்பதை )ப் பில்லு என்று பலுக்குதல் காண்க. பிடுங்கு என்பது மாறி புகர முதலாய் வரும். இவற்றின் ஒலிநூல் இசைவை இதனின்று அறிக.
இதனை " தொலைவிற் புல்லுதல்" எனல் தக்கது..
பிறர் எண்ணிச் செயவது என்ற பொருளில் சூனியம் எனப்படும். சூழ் உன்னுதல் > சூழ்ந்து உன்னுவது, சூழுன்னியம் சுருங்கிச் சூனியம் ஆகும்..
உன்னுதல் - இழுத்தல், உந்தல், கிளர்த ல், நினைத்தல், பாய்தல்,விரைந்தெ ழுப்பல்.
பிறர் பாய்விப்பது அல்லது உன்னுவிப்பது.
ஒரு பெண்ணுக்குக் கலியாணம் நடக்கப் போகிறது. விரைந்தெழுந்து அவளைக் கொண்டு ஓடிவிடுதல். இதைச் செய்விக்கும் ஒரு மந்திரம் : சூனியம்,
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக