ஞாயிறு, 30 ஜூன், 2024

விடியல் குறிக்கும் சொற்கள்.

 வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன்பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று. யகர சகரப் போலியும்  பின் ச >ஶ என்று மெருகும்.  உஷா என்பது தொடர்புடைய பெண்பெயர்.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன். யகர உடம்படு மெய். உது + ஐ + ய + ம் எனினுமாம்.  உதை என்ற சொல்லும் இவ்வாறு எழுந்த சொல்.  ஒருவாறு எழுந்த சொற்கள் ஒரு பொருளே குறிக்க என்னும் விதி இலது.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாகப் பெரும்பாலும் மாறும். 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சனி, 29 ஜூன், 2024

பராமரித்தல் சொல்லாக்கம் பொருண்மை

 பராமரித்தல் என்பதென்ன என்று இன்று அறிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லில் "மரித்தல்" என்று ஓர் இறுதி உள்ளது.

மரித்தல் என்பது இறத்தல் என்பதைக் குறிக்கிறது என்றாலும், இந்தப் பொருள் அது தனிச்சொல்லாக வரும்போது கொள்ளத்தக்க அர்த்தம் தான். இதன் பொருளாவன: இறத்தல், சுமந்து போதல், வாய் பிளத்தல்,  இதில் இறுதியிலிருப்பது வாய்மொழியில் மட்டும் வரும் பொருள் எனப்பட்டாலும் இப்போது யாரும் இப்பொருளில் பேசிக் கேட்டதில்லை. இறத்தல் என்னும் பொருள் மட்டுமே இன்றும் வழக்கில் உள்ளதாகும்.

மருவுதல்> மரு + இ > மரி.  இங்கு இறத்தல். ஆனால் பராமரித்தல் என்பது மரு+ இ > மரித்தல். ஒரு நிலையினின்று இன்னொரு நிலைக்கு மாறுதல் என்பதே இதன் பொருளாகும். இந்தப் பொருள் பராமரித்தல் என்ற சொல்லில் வருவது ஆகும்.

பரா என்பது பர(த்தல்) + ஆ (தல்). இது விரிந்து ஆக்கம் கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது. பரத்தல் - விரிதல். ஆ- ஆக்கம் ஆகும்.

எனவே பரந்து ஆக்கம் கொண்டு மாற்றங்களை உள்ளிருத்துதல் என்பதே பராமரித்தல் என்பதன் சொல்லாக்கப் பொருண்மை ஆகும்.  ஒரு குழந்தையைப் பராமரித்தல் என்று சொன்னால் அதை ஒரே நாளில் கொஞ்சுவது மட்டுமன்று, நெடுநாட்களுக்குக் கொஞ்சி, அழும்போதெல்லாம் பால் கொடுத்து, குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து வளர்த்தல் என்று பொருளாகிறது. ஓர் உந்து வண்டியைப் பராமரிப்பது என்றால்,  தினமும் கழுவி, குப்பை ஏதுமிருந்தால் அகற்றி,  பளபளப்பாக வைத்துக்கொண்டு, இயந்திரங்களை வேண்டிய காலை பழுதுபார்த்து எப்போதும் சேவைக்கு ஏற்ற நிலையில் வைத்திருப்பது என்பது பொருளாகிறது. பரவற் கருத்து,  ஆக்கக் கருத்து, வேண்டிய மாறுதல்களைச் செய்வித்தற் கருத்து --  அத்தனையும் உள்ளடங்கி வருகிறது.

இப்போது பராமரித்தல் என்பது ஆங்கிலத்தில் உள்ள maintain என்பதனுடன் ஒத்துப்போகிறது எனற்பாலது கருதத்தக்கது.

இது ஒரு மிகச்சிறந்த தமிழ்ச்சொல்லாகும்.  தற்கால நிலைமைக்கு மிக்கத் தேவையான ஒரு சொல். எல்லா மூலங்களும் தமிழாக உள்ளன..

இன்னொரு வகையில்:  பர + ஆகும் + அரு+ இ > பரா(கு)ம் அரு இ >  பராமரி, பரவலான முறையிலும்  ஆகும் வழிகளிலும் ஒன்றை அருகில் இட்டுக்கொள்வது என்று அதே பொருளைத் தருகிறது என்பதறிக.  ஆகவே இது இரு பிறப்பிச்சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 27 ஜூன், 2024

இலத்தீன் இலக்கணமும் தமிழும்.

 இலத்தீன் மொழி, சமஸ்கிருதம், தமிழ்  ஆகியவற்றிடை ஒற்றுமை ஒன்றுள்ளது. இத்தகைய ஒற்றுமை உள்ள மொழிகளில் இன்னும் இளமையுடன் எழில்காட்டும் மொழிகளில் தமிழ் சிறப்பினைப் பெறுகின்றது.தமிழில் வினை முற்றுக்களுக்கும் வினையெச்சங்களுக்கும் பொருள் தெரிவிக்கின்றன. வந்தான் என்பது வேறு,  வந்து  உண்டான் என்பது வேறு. வந்த பையன் என்றால் இங்கு வந்த என்பது வேறுபொருள் தருகிறது.  முற்று, எச்சம் என்றெல்லாம் வேறுவேறு பொருளைக் காட்டாத புத்துலக மொழிகளில்  பேசிப் பழகியோர் தமிழைப் பேசுகையில் இவற்றில் (பயன்பாட்டில்) தடுமாறுவர். உமது மொழி மிகவும் கடினம் என்று கவலை கொள்வர். சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்கவந்தவர்,  "தம்பீ!  நீ சாப்பிடு போச்சி?" என்று கேட்கிறார். நம் மொழி அவர்களுக்கு எளிதாய் இருப்பதில்லை. இலத்தீனும் சமஸ்கிருதமும்  தமிழைப் போன்று வாக்கியங்களை அமைக்கின்றன.

பெயர்ச்சொற்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு  வேற்றுமை என்பர். இவற்றுக்கு உருபுகளும் உள்ளன.

ஆங்கிலத்தில் இது declensions of the noun எனப்படும். இது பழைய ஃபிரஞ்சு மொழியிலிருந்து வந்தது என்பர். அதற்குரிய சொல்: clinaison  என்பதாகும்.  கிளத்தல் என்ற தமிழ் வினைச்சொல்லுடன் ஒப்பீடு செய்யத்தக்கது இது ஆகும்.  கிள என்பதை cli என்பதுடன் ஒப்பிட்டு நோக்குக.  de என்பது முன்னொட்டு.

இலத்தீனில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்பதறிக.

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 29062024 0354

செவ்வாய், 25 ஜூன், 2024

செருப்பு, பாதரட்சை, மற்றும் "சக்கிலியன்" முதலியவை

 முன் செய்த ஆய்வுகளின் பட்டியல்:

சக்கிலியன்  https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_15.html  

சக்கிலியன் 2  https://sivamaalaa.blogspot.com/2015/11/ii.html

சக்கிலியன் 3  https://sivamaalaa.blogspot.com/2015/11/v-iiienpathaka.html 

சக்கிலியன் 4  https://sivamaalaa.blogspot.com/2015/11/iv.html 

சக்கிலியன் கூட்டுச்சொல் https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_26.html 

செவிலி, சக்கிலி இன்னும்... https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_18.html

அடிவைப்பதற்குச் செருப்பு தந்து, இடமளிப்போன் என்ற பொருளில்:

அடிக்கு  - காலடிக்கு,

இல் -  இடம், செருப்பு செய்துதருவதன் மூலம்.

இ -  இங்கு, மனிதருக்கு  என்பதாகும்.

அன் -  ஆண்பால் விகுதி.

மறுபார்வை:

அடிக்கு + இல் + இ + அன் >  அ(டி)க்கிலியன்> சக்கிலியன்.

இங்கு இல் என்பது இடம்,  எ-டு:  கண்ணில், மூக்கில், மதுரையில்.

இல் > இலை.  ( கொடி முதலியவற்றுடன் ஒப்பிடுகையில், இலை விரிக்கத்தக்க தாகவும்  இடமுடையதாகவும் உள்ளது. )

அகர வருக்கம் சகர வருக்கமாகவும் மாறும். எ-டு: அமணர்> சமணர்.

வல்லொலியாக டி என்பது ஒழிவது, சொல்லியலில் இயல்பாகும். எ-டு: பீ(டு)மன்> பீமன். தவறுதல் > தவல்  (வல்லொலி று -வுடன் இடையின ஒலியும் சேர்ந்து மறைந்த சொல்.)  பழைய இடுகைகளில் பல உள்ளன. 

இது (சக்கிலியன்)  ஒரு பல்பிறப்பிச் சொல்.  இது தமிழ்த் தொழிலாளிக்கு உண்டான பெயர் என்று மலையாள அகரவரிசைகள் சில கூறுகின்றன.  அதனால் இது தமிழ் மூலங்கள் உடைய அடிச்சொற்களிலிருந்து அமைந்திருத்தல் தெளிவு.. சாக்கியமுனியைப் பின்பற்றியோர் பல சாதியினர். அதனால் இப்பெயர் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவாகும். ஆனால் சாக்கிய என்பதற்கும் இது பொருந்திவருகிறது.

செருப்பு>(   செருப்பல்)> செப்பல்.  ருகரம் குன்றி அல் விகுதி பெறுதல். இடைக்குறையும் விகுதிபெறுதலும்.

பாதம் + இரட்டு+ சை: பாதரட்சை,  இரட்டு- இரண்டு,  சை - விகுதி. புனைவுச்சொல். இங்கு டு என்ற வல்லொலி ஒழிக்கப்பட்டது காண்க.  பாத + அருட்செய் > பாதரட்சை எனினும் ஏற்றற் குரியதாகலாம். பா த அரண் செய் என்ற தொடரும் மருவி வரல் கூடும்

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின். 

ஞாயிறு, 23 ஜூன், 2024

முகரை என்ற சொல். எவ்வாறு உண்டானது?

 இந்தக்கதையை விரிவாக இல்லாமல் சுருங்க அறிவோம்.

மு  -  முன்பக்கம்.

கு  -  சேர்ந்திருப்பது.   சென்னைக்கு, மதுரைக்கு என்பவற்றில் வரும் கு என்னும் மரம்வாழ் மாமுன் காலத்துச் சொல். இன்று உருபாகவும் சேவை செய்கிறது.

அரு -  பக்கத்தில்.   இது அருகு என்பதன் அடிச்சொல்.

ஐ   -  என்பது மேல் என்று பொருள்தரும் சிவனின் முன் காலச் சொல்.

மு+ கு+ அரு+ ஐ >   முகரை.

முகம் எனின்  மு கு அம்.

அம் என்பது அமைந்துள்ள உறுப்பு என்பது.

இதன் காலத்தை பரஞ்சோதி முனிவர் நிட்டையில் அமர்ந்து யோகமுத்திரை இட்டுச் சிந்தித்து அறிந்துகொண்டார்.

நிட்டை என்பது நீடு(தல்) என்ற வினை, ஐ விகுதி பெற்றுக் குறுகிய சொல்.

நீடு > நிட்டை  (நீடு+ ஐ)

தோண்டு+ ஐ > தொண்டை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


சகிப்பு என்ற சொல்லின் தோற்றம்

 சகிப்பு, சகித்தல் என்பன பலவாறு இவற்றின் தோற்றம்பற்றி விளக்கப்படலாம்.  இவை பலவாறு காட்டப்பெறும் தன்மை கொண்டு இலங்குதற்கு நாம் மகிழவேண்டும். அவற்றுளொன்றை இப்போது நாம் காணலாம்.

சகித்தல் என்பதாவது அகம் இயைந்து செல்லுதல். இந்தப் பொருள் செந்தமிழின் வழியிலே அறியக்கிடக்கின்றது.

அக இயைப்பு>  

அகரத் தொடக்கத்தன சகரத் தொடக்கத்தனவாய்த் திரியும். திரியவே:

சக இயைப்பு>  ச(க+இ)யைப்பு>  சகி[யை]ப்பு> சகிப்பு.

ககரம் இகரத்துடனிணைந்து கிகரம் ஆதலும் யை என்னும் கூடுதல் ஒலி ஒழிதலும் ஆன திரிபுகள் சகிப்பு என்ற சொல்லைத் தோன்றச்செய்கிறது.

சகிப்பு என்பது ஒரு திரிபுச்சொல்.

திரிபுகள் இல்லாத மொழி உலகில் இல்லை என்னலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கல்யாணம் என்ற சொல் மற்றும் அதன் வரலாறு

 கலியாணம் என்ற சொல் பற்றி நம் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு சொற்பமே.  அவர்கள் அறிந்துகொண்டது அது மற்ற வட இந்திய மொழிகளிலும் வழங்குகிற சொல் என்பதுதான். அது இன்னொரு மொழியில் வழங்கினால் அங்கிருந்து வந்திருக்கலாம் என்பது படித்தவன் படிக்காதவன் எல்லோருக்கும் ஒப்ப வந்துசேரும் எண்ணம்தான்.  இதில் ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. இதைக் கற்றோனின் கருத்து என்று சொல்லலாம். கல்லான் கருத்து என்றும் கூறலாம்.  ஆய்வதற்குரியது  சொல் ஒன்றுமட்டும்  அன்று.  கல்யாணம்,  கலியாணம்,  கல்யாண் எனப் பலவடிவங்கள்.  இவற்றுள் யாண் என்பதென்ன.  ஆண்டு> யாண்டு என்பதுபோலும் திரிபே  ஆண்> யாண் என்பது.

கலியாணம் என்பது கலயாணம் என்று வழங்கியிருத்தலும் உண்மை.  பெண் வழி பற்றிய பண்டைக் காலத்தில் ஆண்மகன் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு அவன் கலந்தமையின் கலயாணம்> கலியாணம்  என்ற திரிபு இருந்தமை சால உணரப்படும்.  கல> கலி> கல்.  தமிழர் இந்தியாவெங்கும் இருந்தமையின் இச்சொல்லும் பரவித் திரிந்து வழங்குவதாயிற்று.

இவ்வாறு அறிய, இச்சொல் கல யாண் > (கல ஆண்)   என்பதே.  கல இ ஆண் என்பது இந்த ஆணுடன் மணந்து வாழ்வாய் என்பதாகும்.  அது கலியாண் என்றே திரியும். இத்தொடர் வாக்கியப் பொருத்தம் உடையது.

பூசை மொழி என்பது வீட்டு மொழியின் திரிபே.  அது வெளிநாட்டு மொழியன்று. அதற்கெனச் சொற்கள் அமைந்திருக்கலாம்.  அப்படி அமைவதே இயல்பு ஆகும். வால்மிகி முனிவரும் உள்நாட்டவரே. அவரே முதல் பூசைமொழிப் பாவலர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 21 ஜூன், 2024

மங்கலம் மங்களம்

 இன்று மங்கலம் மங்களம்  என்ற  சொற்களைச்   சிந்திப்போம்.

மங்கலம் மங்களம் என்பவை இரண்டும் ஒரே பொருளைத் தருதலால்,  இவை ஒரே அடியினின்று தோன்றிய சொற்கள் என்பது இன்று நிலவும் கருத்தாகும்.  மேலும் இவை தமிழன்று என்ற கருத்தும் சமஸ்கிருதம் ( பூசை மொழி அல்லது சங்கதம் ) என்ற கருத்துகளும் உள்ளன. மங்கலம் என்பது தமிழ்ச்சொல் என்ற கருத்தும் உள்ளது. மங்களம் என்றெழுதுவது வழுவென்று எண்ணுவோரும் உளர் என்று தெரிகிறது.

ஆரியா என்றால் அறிவாளிகள் என்பது பொருளாகும் என்று கூறியுள்ளனர். இதற்கான வேர்ச்சொல் என்னவென்பதில் ஐயப்பாடு முன்னர் எழுதினவர்களிடையே நிலவுகிறது.   

இதற்கான வேர்  ஆர்(தல்) அல்லது அறிதல்.  ஆர்யா என்றால் அறிந்தோர்.  இந்த வேர்கள் தமிழிலே தான் இருக்கின்றன.

ஆரியர் படை எடுத்து வந்தனர் என்ற தெரிவியல் இப்போது மெய்ப்பிக்கப்படவில்லை என்பதை மேலையர் ஒப்புக்கொண்டுள்ளனர்.  ஆனால் படை எடுத்துவராமல் மாடு ஓட்டிக்கொண்டபடி வந்த நாடோடிகள் என்ற கருத்தை இன்னும் வைத்துள்ளனர்.  இதை ஒப்பாதவர்களும் உள்ளனர்.

ஆரியா என்பது ஓர் இனப்பெயர் என்பதை இணங்குவோர் ஆய்வாளர்களில்   இல்லை.  அதை ஒரு மொழிப்பெயராக இன்னும் கருதுவோர் உள்ளனர். இந்தத் தெரிவியல்களைக் கருதிக் குழம்பாமல் இங்கு மங்களம், மங்கலம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம்.  இந்தியாவுக்குள் பலர் முன்காலத்தில் வந்துள்ளனர் என்றாலும் ஆரியன் என்ற பெயர் அவர்களைக் குறிக்கவில்லை என்பதே எமது கருத்தாகும்.

மங்களம் என்பது மங்கல் நிறத்தின் அடிப்படையில் வந்த பெயர் என்று ஆய்வறிஞர் சிலர் கருதுகின்றனர்.

மங்கலம் என்பதும் மங்களம் என்பதும் ஒருபொருளன என்று கருதப்படுகிறது.

இனி,  மனை,  மனைவி, என்ற சொற்கள்,  மன் என்ற அடியிலிருந்தே வருகின்றன.  திருவள்ளுவரும் தம் குறளில்:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

என்கின்றார்.

நன் என்பதற்கு மன் என்பதே நேர் எதுகை.  ஆகவே மன் நன் என்பதன் எதுகைத் தன்மையை மனைமாட்சி என்ற தொடரின்மூலம் அவர் தெளிவாக்கியுள்ளது தெரிகிறது.  எனினும் அவர் காலத்திலே அங்கு மன் கலம் என்ற வடிவிலிருந்து மங்கலம் என்று திரிந்துவிட்டது. எனவே அந்தத் திரிபையும் ஏற்றுக்கொண்டு மங்கலம் என்று வழங்குகிறார்.

இது தெளிவாகுவதால்:

மங்கலம்  என்பது மன்+ கலமே ஆகும்.  மன்னுதல் என்பது நிலைபெறுதல். மனிதர் நிலைபெறுவதும் பெண் அல்லது மனைவியினால்தான்.  மனைவிக்கும் அதுவே அடிச்சொல் என்பது முன் கூறினோம்.

மன் கலமே மங்கலம் என்று திரிந்துவிட்டது.  இதுபோல் திரிந்தவை முன்னர் நம் இடுகைகளில் கூறப்பட்டுள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



புதன், 19 ஜூன், 2024

கிருபை

 கிருபை என்னும் சொல்லின் மூலங்களைக் காண்போம்.

கிடைப்பவற்றில் மிக்க உயர்வானது, பெரியது என்றால் பற்றனுக்கு இறையருள்தான்.

தமிழில் இரு என்றால் பெரியது.

இரு + பு + ஐ > இருபை>  கு+ இரு+ பு+ ஐ >  கிருபை  ஆகும்.

கு - வந்து சேரும்  , இரு  -  மிகப் பெரிய,  பு -  புவியில் . ஐ - உயர்வானது,. விகுதியுமாகும்.

கி  - கிடைத்து,  இரு-  இருப்பனவில்,  பு -  புவியில்,  ஐ - உயர்வானது  ,  ஆகவே கிருபை என்றும் ஆகும்.

எழுத்துக்கள் கூடிப் புணர்ந்தமையும் திரிபுகளும் இங்கு விளக்கப்படவில்லை.  பழைய இடுகைகளில் கூறப்பட்ட முறையே இதற்குமாகும்.

இருமுறைகளிலும் வரலாம். இன்னும் உள்ளன. அவை இருக்க. இது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்


செவ்வாய், 18 ஜூன், 2024

மனிதனும் மனுசனும்

 தனித்தமிழ்ச் சொல்லாகக் கருதப்படுவது மாந்தன் என்பது.  இதன் அடிச்சொல் அல்லது சொற்பகுதியாகக் கூறுவது மான் என்ற சொல்தான்.  இந்த மான் என்பது விலங்காகிய மானைக் குறிக்கவில்லை.

மனுசன் என்பது சிற்றூர் வழக்குச் சொல் வடிவம்.  இது மனிதன் என்ற சொல்லின் திரிபு என்பர்.

இந்த வடிவங்களை இங்கு விளக்கவில்லை. இவ்விடுகையில் மனுசன் என்பதை மட்டும் இன்னொரு கோணத்திலிருந்து  விரித்துரைப்போம்.

மன்  அடிச்சொல். நிலைபெற்றது என்று பொருள் படுவது. மனிதப் பிறவி என்பது நிலைபெற்றதுதான்.  இறத்தல் உண்டாயினும் மனிதன் புவியில் நிலைபெற்றவன் என்று கருதலாம்.

அவனுக்கு ஏனை விலங்குகள் இணையாகமாட்டா.

மன் + உசன்.

உய்> உய்+ அன் > உயன்>  உசன்.

இது யகர சகரப் போலி.  வாயில் > வாசல் என்பது போல.  இகரம் (யி) என்பது ச  ஆனது. ( அ).  இது இகர அகரத் திரிபுக்கும் எடுத்துக்காட்டு.

எனவே உயன், உசன் என்பவை உயர்வு அல்லது உய்வு உடையவன் என்று பொருள் தரத்தக்கது.

இந்தப் பொருண்மையை எடுத்துக்காட்டியுள்ளனரா என்று தெரியவில்லை.

மனிதன் நிலையான உய்வுகளை உடையவன் என்பது வரலாற்று உண்மை. சிற்றூர்ச் சொல்லில் இது அமைந்துள்ளது ஓர் அரிய உண்மை.

உசன் > உஷன் ஒலிமாற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

அறிக மகிழ்க.

 

திங்கள், 17 ஜூன், 2024

பலபெயர்கள் உள்ள அசுரர்கள் அவற்றுள் தயித்தியர்.

 இன்று இதுபற்றிச் சில அறிந்துகொள்வோம்.

அசுரர்களுக்குப் பண்டைக்காலத்தில் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்கின. அதில் தயித்தியர் என்பதும் ஒன்று.

தைத்தல் என்பது நீங்கள் அறிந்த சொல்தான். ஒன்றைத் தைத்தல் என்றால் இரு துண்டுகளை இணைத்து ஒன்றாக்குதல்.  வினைச்சொல் தைத்தல் தான்.

தை+ இற்று + இ + அர்

> தையிற்றியர்

> தயித்தியர்  ஆகும்.

ற்று என்று ஈரெழுத்துக்கள் இரட்டிவரும் சொற்கள், த்து என்று திரியும்  எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.

றகர இரட்டிப்பு  த்த என்றானதும்

லகரம் ரகரம் ஆனதும் காண்க.

தை இற்றவர்கள் தை இத்தவர்கள்  தயித்தவர்.  இறு> இற்று > இற்ற> இத்த. எச்சவினைத் திரிபு,

அசுரர்கள் என்போர் சுரர்கள் என்போருடன் இணையாது பிரிந்திருந்தவர்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 15 ஜூன், 2024

இலச்சை, தலக்கு என்ற சொற்கள். ( லஜ்ஜை)

 பெண்ணுக்கு முன்னெப்போதும் அடுத்துவராத ஆண்மகன் ஒருவன் அடுத்துவர நேர்ந்தால் .  நாணம் அல்லது வெட்கம் ஏற்படுகிறது.  இது அடுத்தவருதல் முன் நடவாமையினால்தான்.

அடுத்து வருதல் என்பதைக் காட்டுவது  அடுச்சை  என்ற சொல் அடுச்சை என்றால் அடுத்தலின் காரணமாக எழுகின்ற எதிர்நிகழ்வு.

அடுச்சை என்ற சொல் இடைக்குறைந்து  அச்சை என்றாகும்.  சில இடைக்குறைகள்  இப்போது முழுச்சொற்கள்போல் மொழியில் உலவுகின்றன. இதற்குக் காரணம்,  இடைக்குறை வல்லொலி இழந்து சொல்ல எளிதாக அமைந்தமைதான். இவ்வாறு வந்த சொற்களை அவ்வப்போது நம் இடுகைகளில் காட்டியுள்ளோம்.

இலச்சை என்பது இல் அச்சை.  இல் என்பது இடம்.  அச்சை என்பது அதை அடுத்துத் தொடுவதால் ஏற்படும் மறுப்புச்செயலும் அதற்குரிய மனவுணர்வும்.

இல்+ அச்சை > இலச்சை.

முதல்முறை என்பது தலை என்ற சொல்லாலும் குறிக்கப்பெறும்.  அ என்றால் அங்கு,  கு வந்து சேர்தல்.  முதல்முறையாக வந்து சேர்ந்தவன் இவ்வாறு எதிர்நிகழ்வைப் பெண்ணிடம் ஏற்படுத்துவான்.  அதனால்  தலை+ அ + கு>  தலையக்கு> தலக்கு என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது.

தலக்கு என்பது தலக்கம் என்றும் வரும்.

இலச்சை, தலக்கு என்பனவின் அமைப்பு அறிக.

மெய்ப்பு பின்னர்

ஹாங்காங் கடற்கரை ஓரம்

 ஆங்காங்  கடற்கரை  ஓரம் ---- அங்கே

அமர்ந்து நலம்பல  பேசிடலாம்

ஓங்கும் இயற்கையின் சூழல் ----மலை

உச்சிக்  குளிர்ச்சியைப்  பழித்திடுமே


சில்லெனும் மெல்லிய தென்றல் --- இது

சீன மாநிலத்  தேன் தடவல்

வல்லென வந்தவை  எல்லாம்  ---- இங்கு

வழிந்து தொலைந்திட வான்மகிழும்.


உடுக்கள் சிமிட்டிடும்  கண்கள் ---- கடற்

குரிய அன்பகம் உய்த்தனவே,

படுக்கை தலையணை வைத்து ---  இராப்

பண்ணொடு தூங்கிடப்   பயன்தருமோ?

 படத்தில் :  அம்மாவும் மகளும்.

சூழல்  -  சுற்றுச்சார்பு.

வல்லென -  சற்றுக் கடினமாக

அன்பகம்  --  பாச உள்ளம்

இராப் பண் - இரவு நேரப் பாடல்

தூற்றல், கடுகி வீசும் காற்று முதலியன இல்லாமையினால் வானும் மகிழ்ந்தது என்பதறிக.

ஹாங்காங்க் என்பதை ஆங்காங்கு என்றே மாற்றுருவாக்கி யுள்ளோம்.  இது ஆங்கு+ ஆங்கு என்று வந்து பிற இடங்களையும் குறிக்கும் இரட்டுறலாகவும் வரும்.

இறுதிவினா:  கொஞ்சம் தூங்கிக்கொள்ள இடம் கிடைக்குமோ என்ற எண்ணம்.


வெள்ளி, 14 ஜூன், 2024

கோவிட் அழிவுகள் இன்னும் நெளிகின்றன. நன்றாகும்.

 ஆகன்று   பிரிந்தது போல்--- பலர் 

அழகிய வீடுகள் பார்க் காமலே      

போகாது  வீழ்ந்தனரே --- அதனால் 

புகுந்திட்ட துன்பங்கள்  பற்பலவே   


எலிகளும் பூச்சிகளும் --- இன்னும்  

இருந்திட்ட பாம்புபூ ரான் களுமே    

மலிகரை யான் களொடு --- வந்து   

மண்டின நுழைந்ததும் நோய்கண்டதே.   


முன்வாசல் கதவிரும்பு ----  துரு     

மூண்டுதுண் டாகின  மீட்பிலையே   

இன்னவை மீட்டெடுக்க --- மக்கள்     

இங்குசெய் பழுதுபார்ப் பின்படம்காண்.    


அரும்பொருள்:

ஆ கன்று -  பசுவும் கன்றும்.

மலி - மலிந்துவிட்ட  அதிகமான.

கரையான் -  கறையான், சிதல். மரப்பொருள்களை அரிக்கும் பூச்சி.

மண்டின -  நிறைந்தன

மூண்டு -  உண்டாகி

மீட்பு --- பழைய நிலை வருதல்.

இலையே -  இல்லையே

பழுதுபார்ப்பு -  மீளாக்கம். ( ரிப்பேர்)








இந்த கோவிட் மூன்றாண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இப்போதுதான் ஆங்காங்கு

சரிப்பட்டு வருகிறது.  பாவம் இந்த மக்கள்.





ROshini birthday. Best wishes.

 

Well wisher of our blog Mrs Roshini L Prakash celebrating her birthday with child Leah, A guest is enjoying the hospitality whilst Leah does not mind the Sr Citizen with a thick beard posing with them.





Roshini's mother and sister have joined in the celebration. A beard is accepted provided it is silvery.


We wish Roshini many happy returns.

வெள்ளியிலே உருக்கிவைத்த தாடி என்றால்

வீட்டுக்குள் வந்தென்னைத் தொடுதல் கூடும்.

அரக்குதல் என்பதே அரக்கி என்பதற்கு மூலம்.

 இவ்வாய்வில் அரக்கி என்பது தமிழ் வினைச்சொல்லினடியாய்ப் பிறந்தது என்பதை நிலைநாட்டுவோம்.

இதற்குரிய வினைச்சொல்:  அரக்குதல்.

அரக்குதல் என்பதன் பொருளைப் பட்டியலிடுவோம்.  நீங்கள் உங்கள் தமிழ் அகரவரிசையை விரித்துச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லதுதான், எமக்கு உதவி செய்கிறீர்கள் என்று எமக்குத் தெரியும்.

பட்டியல்:

உள்ளதை ஒளித்தல்.

இருப்பதைத் துடைத்துவிடுதல்

அதிகம் உண்ணுதல் ,   அடிக்கடி உண்ணுதல் ( அமித உணவு)

சேமிக்க வேண்டியதை வீண் செய்தல்,

தேய்த்து அழித்தல்,

வீண்படுத்தித் சிதைத்தல்,

அழுத்தி  அழித்துவிடுதல்.

இவைகளைச் செய்தலைத்தான் அரக்குதல் என்ற சொல் குறிக்கிறது


இவையெல்லாம் கெடுதலான செயல்பாடுகள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்.

அரக்கு >  அரக்கன்  : மேற்கண்டபடி நடந்துகொள்பவன்.   அரக்கி என்பது பெண்பால்.

இராமர் கதையில் வரும் தாடகை அரக்கி என்று கதைசொல்கிறது.


வினைச்சொல் தமிழில் இருப்பதால் இது தமிழ்ச்சொல்.

மற்றும் மடி> மரி என்ற திரிபு விதிப்படி,  அடக்கு > அரக்கு(தல்) என்று திரியும்.  ஆகவே இச்சொல்லும் இதன் உறவுச் சொற்களும் தமிழில் உள்ளன.

அர் >  அரை > அரைத்தல்  என்பதும் கல்லால் அழுத்தி தேய்தலையே குறிக்கிறது.  எனவே அடிச்சொல்லும் உறவுச் சொற்களும் தமிழிலே உள்ளன.

அர்>அர்+  அ+ கு >  அரக்கு  ஆகிறது.  இந்த மூலச்சொற்களை ஆய்ந்தால், அங்கு அரைத்து அல்லது தேய்த்து அழி என்பது வாக்கியப்படுத்திய பொருள்.   அர்: அரைத்தல், கல்லால் தேய்த்தல்.   அ:  அங்கு.  கு: சேர்தல் அல்லது கூடுதல். 

அரக்கு என்பதில் தலை போனால்  ரக்கு என்றாகும்.  ரக்கு> ராக்கு> ராக்கு + அது + அம் >  ராக்கதம் > ராட்சசம் என்று வரும்.

ககரம் சகரம் ஆகும்.   ராக்கதம்>ராச்சதம்.

தகரம் சகரம் ஆகும்:   ராக்கதம்> ராட்சசம் . அழிதன்மை கடைப்பிடித்தல் என்று பொருளாகிறது.

தமிழ் என்பது வீட்டு மொழி எங்கிறார்கள் அறிஞர்/  தம் இல் >தமிழ் என்று பொருத்தமாக உள்ளதால் இவ்வாறு இச்சொல் அமைந்திருத்தல் தெளிவு. ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் இது அறியப்பெறுதல் கூடும்,

பூசை மொழி அல்லது சமஸ்கிருதம் என்பது வீட்டு மனிதர்கள் பூசைகளைப் போய் நடத்தியபோது பயன்படுத்திய ஒலிகளின் தொகுப்பு. இதைத் தமிழரும் அடுத்தடுத்து இருந்தவர்களும் பயன்படுத்தினர். பூசை மாந்தர் மற்ற ஒலிகளைப் பயன்படுத்தி, அரக்கி என்பதை  ராட்சசி என்றனர்.  இதை இன்னோரிடுகையில் விளக்கியுள்ளோம்.

வீட்டில் நாலுபேர் நன்றாக உள்ளபோது ஒருவர் அரக்கியாக இருந்தால் மற்றவர்கள் இதை வெறுப்பர்.  தாடகையும் மற்ற அரக்கிகளும் அரக்கர்களும் வெறுக்கப்பட்டதற்கு இதுதான் காரணியாகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

புதன், 12 ஜூன், 2024

குடமுழுக்குப் படங்கள்

 ( Different shots of the same congregation moving towards temple)


ஆருனக்கே இணை மாரியம்மா---உனை

ஆராதிப்பே   னுன்றன் பேராதர  வே வேண்டும்.

தேருடனே வந்தாய்  தெளிந்தேன்--- இணையில்லை

தேவதையே வானின் திகழொளி நீ !  கண்டேன்  (ஆருனக்கே)



 



தல், தலை, தலம்

 தல் என்பது இடம் என்னும் பொருளிய பழங்காலத்துச் சொல். இது இன்று ஒரு விகுதியாக மட்டும் தமிழில் வழங்கி வருகிறது.

ஆக்குதல்,  அழித்தல் என்ற சொற்களில் வினையினோடு கூடித் தல் என்னும் சொல் பெயரைத் தருகிறது. பொருளுக்குப் பெயர்கள் உள்ளன.  அத்தன்மைபோல் வினைகளுக்கும் பெயர்கள் உள்ளன. இவை தொழிற்பெயர்கள் எனப்படும். தொழில் என்றால் செயல் அல்லது வினை.

தல் என்பது இடம் மற்றும் தொடர்பு என்றோம். தல் என்பதிலிருந்து அமைந்த இடப்பெயர்களை அறிந்துகொள்வோம். இது தொடர்பு என்றும் பொருளாம். இச்சொல் திரிந்து தரை என்றுமாகும்  .  தல்>தர்> தரை. இடம்.  பூமி. இது லகர ரகரப் போலி.

தல் >  தலம்:  இதன் பொருள் இடம். தொடர்பு.

தலை என்று முடியும் ஊர்ப்பெயர்கள்.

இது பூசை மொழிக்குச் சென்றபின் ஸ்தலம் என்றானது,  இதில் ஸ் வந்தால் த என்ற வல்லொலி ஸ்த என்று மென்மைப்படுகிறது என்ற நினைப்பில் இவ்வாறு இணைத்தனர். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு ஸ்த என்பது சொல்ல எளிதாயிருக்கும். ஸ் என்று கொஞ்சம் காற்றை வெளிவிட்டு இதைச் சோதனை செய்து உங்கள் முடிவை மேற்கொள்ளலாம்.  உங்கள் கருத்தை பகர்ப்புச் செய்துகொள்ளமாட்டோம்,  அஞ்சுதல் ஒழிக. பூசைகளிலும் ஸ் என்ற ஒலிவந்தால் கேட்க இனிதாகும். சில பூசாரிகள் ஸ் ஸ் என்று ஒலியெழுப்புவதைக் காணலாம். சில பூசாரிகளிடம் சென்று அவர்கள் ஸ்ஸ்ஸ்ஸ் என்று தொடர் ஒலியெழுப்புவதைக் கேட்கலாம்.  திருநீற்றை பற்றனின்மேல் ஊதிவிடுவதற்கும் ஸ் என்பது பயன்படும்.

தான் என்ற தமிழ்ச்சொல் தான் தன்னில் சார்பின்றி இருத்தலைக் குறிக்கும். நீங்கள் வயதானவர் இல்லையென்றால் தானே எழுந்து நிற்பீர். இந்தச் சோற்றை எல்லாம் தானே  தின்றுவிடு, நான் உதவி செய்யமாட்டேன் என்று தாய் சின்னப்பையனிடம் சொல்கிறாள்.  தானே என்றால் அம்மாவைக் கூப்பிடாதே என்று பொருள்.

தான் என்ற தமிழ்ச்சொல் உலகப்பெரும்புகழ்  அடைந்த சொல். ஸ்தான் என்றாகி உஸ்பெஸ்கிஸ்தான் வரை போய்விட்டது.  தான்> தனி. தனிநாடு கேட்பவர்களும் ஸ்தான் என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். எல்லாம் நீங்கள் தானே > தாமே எழுகிறீர்,  தனக்கு உதவி வேண்டியதில்லை என்பதுதான். அப்புறம் பிறநாடுகளிடம் உதவி கேட்பது வேறு விடையம்.> விடயம்.

இந்தியாவின் கோணமுனையிலிருந்து உலகப்புகழ் பெற்றிருக்கிறது ஸ்தான். இதற்கு நாம் மகிழலாம்.

பண்டைக்காலத்தில் நீ என்பதற்கு நீம் என்பது பன்மை. நீம் என்பது நீம்+ கள் என்பதில் இருக்கிறது, நீங்கள் என்று மாறியுள்ளது.  சீனமொழியில் நீமென் என்று வரும்.

தல் என்பது ஐ என்பதனுடன் சேர்ந்து தலை என்று சொல் பிறந்தது, இன்னொரு சொல் மண்டை என்பது, உங்களின் செயல்பாட்டுத் தலைமை இடமாக எல்லாம் தலையில் மண்டிக் கிடப்பதால் தலைக்கு மண்டை என்றும் பெயர். ஐ என்பது உலகில் உயர்வு குறிக்கும் விகுதியும் சொல்லும் ஆகும்.

தல் + ஐ  >  தலை

மண்டு + ஐ >மண்டை'

இரண்டுக்கும் ஐ விகுதியே வந்து சிறப்புச் செய்துள்ளது.

சிறப்பான இடம் தலை அல்லது மண்டை.

கலை என்பதற்கும் ஐ விகுதியே கொடுத்திருப்பது அதன் உயர்வைக் காட்டும் நெறியாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


அருள்மிகு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் படம்

  ஜொகூர்பாரு அருள்மிகு  மாரியம்மன் கோவில் குடமுழுக்கு,  இன்று காலை 12.06.2024 சிறப்புடன் நிறைவுபெற்றது.( கும்பாபிடேகம்) படங்கள் சில.




படம் உரிமை:  கருஜி சுவாமி

 







படங்கள் வேண்டுமென்போர் தொடர்பு கொள்க.
கருஜி சுவாமி
இவ்விணைய வலையின் மூலம்.

அருள் மாரியம்மனைப் பணிவோம்
அணுகும் வாழ்க்கை இடர்களே தணிவோம்.
பொருளென்று தேடுவோம் அம்மனை; 
போற்றும் ஆலயம் நம் அனை வருக்கும் நன்மனை.

ஆலயம் செல்வழி  பாடி---ஒரு
கோல மயில் தென்றல் இன்பத்தி லாடி,
மேலெழுவீர்  அன்னைதேடும் --இந்த
மேதினிசேர் பிள்ளையாய் அருள் கூடி., 



கருஜி அவர்களுக்கு நன்றி.


செவ்வாய், 11 ஜூன், 2024

மோடி விழாவில் சிறுத்தை ( இணையச் செய்தி பற்றிய கவி)

 இணையத்தில் வரும்செய்தி "இருக்கும்  - அன்றி

இல்லாமை கூறாரோர் உண்மை" என்றோ

"கணையொத்த புனைவென்றோ" கூறலாமே--நம்

கருத்திருக்கச் செய்திதனைக் கண்ணுவோமே.


சிறுத்தையொன்று வந்ததென்றார் படமே - கண்டோம்,

சீர்மிக்கக் கூட்டத்தில் வந்த  தென்றால்

பொறுத்திருக்க வேண்டாமே  உண்மை ---  என்போம்

புனிதர்மோடி என்பததன் பொருளே  கண்டீர்.

வாழ்க மோடிஜீ.


இருக்கும் - 'நடந்து  இருக்கும்'.

கணை - துன்பம்

கண்ணுவோமே -  கருதுவோமே

புனிதர் - உண்மையானவர்.

சிறுத்தை -  ஒரு புலிவகை


https://www.youtube.com/shorts/jI0kb2n0_dc



நம் தமிழன்பரின் மறைவு. பி. பாக்கியமுத்து

 




தமிழன்பர்களுக்கு ஆதரவாகவும் நல்லன்பராகவும் 

நின்ற நம் தமிழன்பர் பி. பாக்கியமுத்து அவர்கள்

 கடந்த எட்டாம் திகதி ஜூன் மாதம் 2024 ல் காலமானார் 

என்பதை  அறிந்து வருந்துகிறோம். அவர்தம் 

ஆத்மசாந்திக்காகப்  பிரார்த்திக்கின்றோம்.


இறைவனின் ஒளியுலகில் வாழ்க.



HELPFUL TO ALL.......

He was helpful to all:

Among Tamils he stood tall. 

 Any in need  of assistance,

He went forward,  helped with persistence.

Sad we are, he left us early,

We can't say all in words thus merely;

Rest in skies above the seas

Your thoughts remain, like golden keys.

-------------------------------------------------------------------




குறிப்பு:

[அகத்துமா - உள்ளில் உள்ள ஒரு பெரிய கண்ணுக்குத் தெரியாதது. இதுஆத்துமா ஆத்மா ஆன்மா என்றெல்லாம் திரிந்து வழங்குகிறது.]




ஞாயிறு, 9 ஜூன், 2024

சொல்லமைக்க எந்த எழுத்தை வீசவேண்டும்?

 விகுதி, சொல்லிறுதி களைவு:

இதை அறிந்துகொள்ள, தொல்காப்பியம் பல்காப்பியம்,  காக்கைபாடினியம் முதலிய இலக்கணங்களின்  நூற்பாக்களை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

கழுகுகள் நேரப்படி வந்து தமக்கு வைக்கும் உணவுகளை உண்டுவிட்டுப் போகும் கோயில் திருக்கழுக்குன்றம்.

அங்கு அந்தக் கழுகுகளும் இன்னும் உள்ளவையும் வருகை புரிந்துவிட்டுப் போகும் கோயில் இந்தத் தலத்தில் இருக்கிறது.

இதற்குப் பெயர் அமைக்கும்போது,  முன்னரே மக்கள் இதைக் கழுகுமலை, கழுகுக்குன்றம் என்றெல்லாம் அழைத்தனர் என்று தெரிந்திருக்கிறது. பின்னர் முறையான பெயர் வந்தது.

திருக் கழுகுக் குன்றம்  என்று சொன்னால், கழுகு என்பதில் கு இருந்து பெயரில் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.  அந்தக் குகரத்தை நீக்கிவிட்டு, திருக் கழுக் குன்றம் என்று பெயர் அமைத்தனர்.

ஆனால், கழு என்றால் அது கழுகு என்றும் குறிக்கும்.  கழாய் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இதனாலும் கு என்னும் ஈறு தேவையில்லை ஆயிற்று.

சொல்லமைக்கும்போது, பொருளறிந்து விகுதி களைந்துவிடுதல் நல்ல உத்தி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சனி, 8 ஜூன், 2024

காண் கிரசிலிருந்து மோடிமயக்க ஓட்டம்

 காண்கரைசற் கட்சிக்கால் கடந்தோர் எல்லாம்

கட்சிப்பின் செயிப்போராய்க் கடுகி வந்து 

வான் உயரம் தொடலாமே என்றே  நம்பி

வந்திட்ட சொல்வருதே வாழ்க வாழ்க!

வீண்குடியின் கட்டுக்குள் வீழ்ந்து ணங்கி

விடுபாடே அறியாராய் விளியா வானின்

மீன்நிலையைக் கண்டிடலாம்  எனவந் தாரே

மீண்டுவர  வாழ்சொர்க்கம்  மீளும்  வெறறி! 


காண் கிரசுக் கட்சியிலிருந்து ஓட்டம் பிடித்துச் சிலர்

பின் ஜெய்ப் பின் கட்சிக்கு வருகின்றராம். அதைப் பற்றிய

கவி இது

பின் ஜெயி(ப்)- போர் என்பது  BJP  என்று வரக்கூடியது. ஒரு போரைப் பின்பு ஜெயித்தோம் என்பது,

காண்- கரைசல்- கட்சி என்பது ஒரு கட்சிப்பெயர்.

கடுகி - விரைவாக

வான் உயரம் தொடலாம் -  எம் பி பதவி கிடைக்கலாம் என்பது

நம்பி வந்திட்ட -  நம்பிக்கையுடன் கட்சி மாறி வந்த

வீண் குடியின் கட்டுக்குள் -  பயனின்றி ஒரு குடும்பத் தலைமையில் அடக்குமுறைக்குள்

வீழ்ந்து உணங்கி -  சாய்ந்து ஈரம் உலர்ந்து போய்

விடுபாடே அறியாராய் -  எப்படி இதிலிருந்து பிய்த்துக்கொண்டு போவது என்பது தெரியாமல்

விளியா -  சாகவும் முடியாமல் ( அதாவது அரசியலிலிருந்து விலகவும் இயலாமல் )

வானின் மீன் நிலையைக் கண்டிடலாம் -  நட்சத்திர எல்லையை எட்டிவிடலாம் (என்று)

வந்தாரே - கட்சி கடந்து வந்தனரே

மீண்டுவர வாழ்சொர்க்கம் - மறுமலர்ச்சி வந்துவிடும்,

மீளும் வெற்றி  - வெற்றி வந்துவிடும் என்பது. 

கால் கடந்தோர் - இருந்து உயர்வு இன்றிக் காலம் கழித்தோர் என்றும் பொருள்.

கால் : காலம்.

அறிக மகிழ்க

மெய்ப்ப் பின்னர்




 

அன்பு : வேண்டும் லவ் வேண்டாம் சுட்டுச்சொல் பொருள் விரிந்தது.

 அன்பு என்ற சொல்லைப் பிரித்து இப்போது ஆராய்வோம்.  அன்பு என்பது இங்கும் இருக்கும்,  அங்கும் இருக்கும்.  இல்லாமலும் இருப்பதுண்டு.  எனினும் நாம் அன்பு என்றால் அங்கிருந்து உம்மை நோக்கி வருவதைத்தான் சொல்கிறோம். மற்றவர்கள் நம்மிடம் அன்புடன் நடந்துகொள்ளவேண்டும்  -- எதிர்பார்க்கிறோம். நமக்கு இசைவானது நடக்கவில்லை என்றால் நாம் சிலவேளைகளில் கத்திவிடுகிறோம். இதற்குக் காரணம், அன்பு நம்மிடம் காட்டப்படவில்லை என்ற எதிர்பார்ப்புதான்!

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல். அங்கிருந்து வருகிறது என்பதுதோன்ற,  அ என்பதை முதலெழுத்தாகப் போட்டுக்கொள்ளுங்கள்.  இந்த உணர்வு,  அவ்விடத்திற்குரியது, அங்கிருந்து முளைத்து உங்களை நோக்கி வருவது, வரவேண்டியது.  அ -வுக்கு அடுத்து இன் போட்டுக்கொள்ளுங்கள். இது தோன்றுமிடத்திலிருது வருவது என்று காட்டுகிறது.  இன் என்பதில் இங்கு வரவேண்டியது என்பதை இகரம் சுட்டுகிறது.  நகர ஒற்று வந்து சேர்தல் குறிக்கும். இப்போது :

அ + இன்.

இப்போது சுட்டுச்சொற்களில் விகுதியில் ஒன்றும் பொருள் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம்.  அதிலும் பொருள் காணலாம்.  காண்பவனுக்குத் தான் பொருள். காணாதவன் எதையும் என்றும் காணமுடியாதவன் தான்..  அங்கிருந்து வந்த மனத்தில் இயக்க அசைவு, என் உள்ளில் வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது என் உள்ளில் புகவேண்டும். அந்தச் சொல்லுக்கு ஒரு விகுதி வேண்டுமே.  எந்த விகுதி போடுவது என்றால், பு என்னும் விகுதி போடவேண்டும். பு என்பது புகுந்தது என்று குறிப்பால் உணர்த்தும். குறிப்பால் என்றால்  என்ன பொருள். அறியாததுபோல் மறைவாகவும் இருக்கவேண்டும். அறிந்துகொள்ளுவதற்கு ஏதுவாக வெளிப்படையாகவும் இருக்கவேண்டும்.  இவை ஒன்றுக்கொன்ரு எதிரானவை. இரண்டையும் ஏற்ப மட்டுறுத்திப் பொருண்மை அறியவேண்டும். பு என்ற விகுதியைப் போட்டுவிட்டால்:

அ + இன் + பு >  அன்பு.  என்றாகிவிட்டது.

அன்பு தான் இங்கு வந்து சேர்ந்துவிட்டது, அப்புறம் இ தேவையில்லை.  இருப்பிடம் வந்து இணைந்துவிட்டால் அப்புறம் கடப்பிதழ் தேவையில்லாதது போலுமே இது. நீ வந்திருந்தாலும் உன் இருப்பிடம் இதுவே,

அங்கிருந்து இங்கு வந்து புகுந்துவிட்டாய் நெஞ்சிலே

என்று பொருள். இதற்கு பு போடுகிறோம். பூவும் சூடிக்கொள்ளலாம்.

ஆங்கிலச் சொல் லவ் என்பது.  ஏன் ஆங்கிலத்தில் உங்கள் அன்பானவரிடம் பேசுகிறீர்கள்.  எல் என்ற Lக்கு  இல்லை என்ற அபசகுனமான பொருளும் இருக்கிறது.  ஓவர் என்ற முடிந்துவிட்டதன் குறிப்புக்கும் அது தொடக்கமாய் உள்ளது, OVE (R)  ஒவ என்று ஒலித்து முடிவைக்காட்டுகிறது!

அன்பு என்ற தமிழ்ச்சொல்லை இவ்வாறு அமைத்த  நம் குகைவாழ் தமிழ் முன்னோரைப் பாராட்டுவோமாக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

அர்த்த என்ற சங்கதச்சொல் பாதி என்று பொருள்தருவது

அர்த்த என்ற சங்கதச்சொல், எவ்வாறு பாதி என்று பொருள்பட்டது? 

தமிழில் அர்த்த என்பதை "அரை". என்று குறிப்பிடுவோம்.  இரண்டும் 'அர்' என்ற அடிச்சொல்லிலிருந்தே தோன்றுகிறது. அர் என்றால் பாதி என்று பொருள். தெய்வ ஆற்றலில் சிவனார் அம்மையின் பாதிதான். அர் என்ற அடிச்சொல்லுக்கு  மற்ற பொருண்மைகளும் உண்டு எனினும்  அரை என்பதும் கவனத்தில் கோள்ள வேண்டியதொன்றே ஆகும். அம்மனே மறுபாதி    ஆகும்.

அர் + ஐ > அரை.

அர் + து + அ > அர்த்த

எடுத்துக்காட்டு: அம்மையப்பர்,  அர்த்த நாரீசுவரர்.

அர் என்பது அறுத்தல் என்பதன் பகுதியுடன் தொடர்பு உள்ள சொல்லாகும்.

இதை இன்னோர் இடுகையில் விளக்குவோம்.

அரு, அருமை என்பனவும் குறை குறிக்கும். அர் என்பதே அடிச் சொல்.

அரன் என்பது  செம்மை நிறத்தோனென்றும் மறுபாதிக்கு உரியோன் என்றும் இருபொருள்  தரும்.

சங்கதம் என்றால் சமஸ்கிருதம். இது பூசைமொழியும் ஆகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 7 ஜூன், 2024

வாக்குக் குறைந்ததால் மோடிக்கு என்ன? - வெண்பா

 மோடிப்  பெருமகனார் முன்னணியில் நிற்பவரே

ஆடும் அரசியலில் வாக்கு  வரண்டென்ன?

ஈடில் அகல்வானம் இல்லாப் பெயலாலே

கூடாய்க் குறுகுமோ கூறு.


வாக்கணித்  தேர்தலில் வாழ்வைப் பெறுநர்தாம்

நோக்கறிந்து தொண்டில் சிறந்தாலே ---- போக்குறா

ஏற்புறு உள்ளுறைவாய் ஆவர்  உயர்பணிப்

பாற்படவே தள்ளரிய ராம். 


எண்ணிக்கை இந்நிலையில் கண்டாலும் வீழ்ச்சியே

பண்ணார்மன்  னர்மோடி  பற்றாதே ----அண்ணாகேள்

சங்கு சுடும்போது  சார்பொன்று கார்பெறினும்

வெண்கண்மை பங்கமுறா தாம்.



இவற்றால் தேர்தல் இருக்கை எண்ணிக்கை குறைந்தது விசுவாமித்திரர்

மோடியின்  தூயதொண்டினை எவ்வாற்றானும் பாதிக்காது

என்பது கூறப்பட்டது,


அரும்பொருள்

மோடிப் பெருமகனார்  - இந்தியப் பிரதமர் மோடி

வரண்டென்ன -  குறைந்தால் என்ன

ஆடும் -  பலரும் சூழ்ச்சிகளும் நல்லவைகளும் கலந்து செய்யும் அரசியல் விளையாட்டில் இயங்குவது.

பெயல் - மழை

கூடாய் - பெரிதும் மூடிய சிறிய இடம்.

வாக்கணி - வாக்களிக்கும் அழகிய முறை

வாழ்வு -  வெற்றிபெற்றுச் சம்பளம் பெறும்  சீரான உயிர்பிழைப்பு

பெறுநர் - பெறுகிறவர்கள்

நோக்கறிந்து -  சனநாயக முறைப்படியான திட்டங்கள் அடைய வேண்டிய எல்லைகள் முதலியன தெரிந்து

போக்குறா - தோல்வி அடையாத (  போய்விடாத)

ஏற்புறு - மக்கள் ஏற்றுக்கொள்ளும்

உள்ளுறைவாய் -  அவை உறுப்பினராய்

உயர்பணிப் படவே -  தொடர்ந்து அங்கு சபையில் இருந்து

பாற்படவே - செயல்படுதலுக்கு 

தள்ளரியராம் -  தம் பதவி இழக்கமாட்டார்கள்

இந்நிலையில் - தேர்தலில்

எண்ணிக்கை கண்டாலும் வீழ்ச்சியே -  எண்ணிகை வீழ்ச்சியே கண்டாலும் என்று மாற்றி அறிக.

பண்ணார் மன்னர் - சிறந்த ஆட்சி செய்பவர்.  \

பண்ணார் என்றால் பண் ஆர்ந்த

பற்றாதே  -  அவரை அது பற்றிக்கொள்ளாது  

ஏ - தேற்றம். ( தெளிவு)

சார்பு - சங்கின் பக்கத்தில் உள்ளது  எதாவது ஒன்று

கார் - கரிந்துவிட்டாலும்

வெண் கண்மை - வெளிப்பான தன் நிறத்தின் தன்மையில்

பங்கம் - கெடுதல்

உறாதாம் - ஏற்படாதாம்

அறிக மகிழ்க

பொருள் எழுதியுள்ளோம்.  08062024 1809


வியாழன், 6 ஜூன், 2024

சிந்தனை - சொல்

இந்தச் சொல்லின் தோற்றத்தை இன்று சிந்திப்போம்.

சிந்துவது என்றால் கொஞ்சம் கொட்டிப்போவது.   வீட்டுக்கு வந்த விருந்தினர்க்குக் கொஞ்சம் காப்பி ( குளம்பி)  கொண்டுசெல்கையில் சில துளிகள் தரையில் விழுந்துவிட்டால்,  சிந்திவிட்டது என்று சொல்கிறோம். இச்சொல் சிறுமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று பாடினால் அது சிந்துகவி. அளவாக இல்லாமல் மும்மூன்று சீர்கள் ஒரு வரிக்கு வருமாறு பாடுவது.

ஏறாத மலைதனிலே --- (இ)ரண்டு

எருது நின்னு தத்தளிக்க, 

பாராமல் கைகொடுத்த ----  எங்க(ள்)

பழநி மலை  ஆண்டவனே

இதுவும் சிந்துதான் .  சிந்து என்பது சிறுவகை நூலையும் குறிக்கும்.  சின்+து> சிந்து  . சில்> சின்.  சில்> சிறு.  சில்> சிறு> சிறு+ அமி(ழ்)+ அம் > சிறு அம் அம் > சிரமம்,   அமிழ் என்பதில் உள்ள இழ் என்ற இறுதி நீங்கிற்று.  எதையும் நீக்காவிட்டால் ஒருவேளை சிரமிழம் என்றோ சிற்றமிழ்வம் என்றோ வந்திருக்கலாம்.  அமிழ் உமிழ் என்பவற்றில் இழ் என்பது சொல்லாக்க ( வினையாக்க) விகுதி.  விகுதி தேவையில்லை. இதே விதியமைப்பை முன்னர் வேறு சொற்களைக் கொண்டு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இது ஒன்றைச் செய்வதில் உள்ள சிறு இடையூறுகளைக் குறிக்கும். சிற்றிடர் என்னலாம்.   நூலுக்கு வருவோம், இந்தச் சிறு நூல்கள் சிந்து நதிக்கரையில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுபோய் விற்கப்பட்டன என்று பி டி சீனிவாச ஐயங்கார் கூறி இது தமிழ்ச்சொல் என்றார்.  எம் பழைய இடுகைகளில் காண்க.   சிந்தடி என்பது ஒரு யாப்பியல் குறியீடு.

ஆங்கிலக் கவி டென்னிசனின் கவியை மொழிபெயர்த்து ஓடை என்ற தலைப்பி இங்கு இடுகை செய்துள்ளேம்.  சிந்துகவி தான்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

இது ஓடை என்ற தலைப்பில் வெளியிட்டோம். நீங்கள் ஒரு சிந்து எழுதி ஓடை என்னும் கவிதைக்குப் பின்னூட்டம் செய்யுங்கள்.  அதை இடுகையாகப் பின் வெளியிடுவோம். நம் நேயர்களுடன் பக்ர்ந்துகொள்ளவும். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்





தவறுதல் இடைக்குறை: தவல்

தமிழைப் படிக்கமாட்டேன் என்று விலகிச் செல்லும் மாணவர்கள் இன்று நிறைய உள்ளனர். சாதம், சோறு என்ற சொற்களைக் கூட விலக்கிவிட்டு,  Rice போடு, அல்லது serve rice என்றுசொல்லி முடிப்போர் பலர்.  தமிழைப் போதிக்கும் முறைகளில் சில இக்கால மாணவர்களுக்குப் பொருந்திவராமல் போனதனாலே இவ்வாறு நேர்ந்துள்ளது. இலக்கணம் உரைப்பதைவிட எப்படிச் சொன்னால் புரியும் என்று சிந்தனை செய்து சொற்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் காட்டினால் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகலாம். அவ்வப்போது இத்தகையை முறைகளை எழுதுவதில் கடைப்பிடித்திருக்கிறோம்.

இந்த முறையைப் பயன்படுத்தி, தவல் என்ற சொல்லை விளக்குவோம்.

தவறு(~தல்)  இதில்   று என்பதை எடுத்துவிட்டால் தவ என்பதே மிச்சம். இதில் தவ என்பதைப் பாவித்துக்கொள்வோம். தவ+ அல் >  தவல்,  இரண்டு அகரங்களில் ஒன்று கெட்டது. தவயல் என்றோ தவவல் என்றோ வருவதில்லை. தவல் என்பதன் பொருளென்ன என்றால் தவறுதல் என்பதுதான்.

தவல்அருஞ்  (செய்வினை)  - தவறிவிடாத செயல்.

தவல் அருந்  ( தொல்கேள்வி)  -  கெடுதல் இல்லாத பழைய கேள்வி யறிவு ( கேள்விஞானம்.)

தவல்  -  (தவறுதல் )  மரணம்

தவல் -  வறுமையால் வருத்தம்.  ( பொருளின்மையால் கெட்டுப்போவது). செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் கெட்டுப்போவது என்க

தவல் -   ( வினைச்சொல்)  நீங்குதல்.  [ தவலுதல் ]

இவை எல்லாம் தவறுதல் என்ற சொல்லால் பொருள் சொல்லக்கூடியவைதாம்.

சுட்டடிச் சொற்கள் வளர்ந்த பண்டைக் காலத்தில் ஒருவன் அங்கு போய்க் கெட்டான் என்பதற்கு   த அ ( தா  ஆ)  என்று ஓரசைகளைக் கொண்டு பேசியிருப்பர் என்று தெளியலாம். பண்டை ஓரசைச் சொல்லாக்கத்தில் த அ அல் து எனக் கலந்து தவறு என்ற சொல் உருவாகியுள்ளது தெரிகிறது.  இது புரியவில்லை என்றால் தவிர்த்துவிடலாம். அல் இடைநிலை. து வினையாக்க விகுதி.

தபுதல் என்ற சொல்லை இங்கு விரிக்கவில்லை. தப்புதல் என்பதும் தொடர்புடைய சொல். இதை விளக்கவில்லை.

கவிதையில் இடைக்குறை, தொகுத்தல் எல்லாம் உண்டு. இங்கு சொல்வது சொல்லாக்க இடைக்குறை. அதாவது இடைக்குறை முறையால் இன்னொரு சொல் உண்டாகுதல் அல்லது அறியப்படுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.



புதன், 5 ஜூன், 2024

சரித்திரம்

 "இதிற் கூறப்பட்டவை திறமாகவும் சரியாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன" என்று சொல்வதுதான் வரலாறு என்பதற்கு ஒரு சொல்லமைப்பதற்காத் தரப்படுகின்ற, அன்று தரப்பட்ட -- ஒரு மேல்வரிச் சொற்புனைவு உதவி ஆகும்.  சரித்திரம் என்ற சொல்லிலே அது இன்று மோந்தறியத் தக்க மறைதிறவாக இருக்கின்றது.

சொல்லமைப்பிலே " திறம்" என்பது ஒரு விகுதியாய் வரவேண்டி யிருப்பின், சொல்லமைப்போன் அதைத்  திறம்> திரம்  என்று மாற்றிக்கொள்வான். விகுதியாக வரின், திறம் என்ற வல்லழுத்  தொலியும் இங்குத் தேவைப்படாது. அதனால்தான் சரித்திரம் எனற்பாலதை, சரித்ரம் என்று கூட குறுக்கிக் கொண்டனர் நம் பூசைமொழியில்.  இது நம் சிற்றூரான் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நுட்பம் ஆகும். புலவர்கள் சரியாகச் சொல்லவேண்டு மென்பதிலே குறியுடையோர் ஆதலின், இந்த நுட்பமான எழுபாட்டை அறிந்து கடைப்பிடித்தல் அருமையே.

எழுபாடு - இடையே எழும் நிகழ்வு.

திரம் என்ற விகுதியை பன்முறை நோக்கி விளக்கியுள்ளோம். ஒன்று இங்கே காணலாம்:

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_63.html

பிற:

சரித்திரம்:

https://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_4550.html

சரித்திரம் சொற்பொருள்:

https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_12.html

சரித்திறம் சரித்திரம் சரிதை

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html

இவற்றையும் வாசித்து  ( இச்சொல் வாய்+இ~த்தல்) என்பதன்  திரிபு.)   மகிழுங்கள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

Edit note: https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html




செவ்வாய், 4 ஜூன், 2024

செய்வினை உலக வழக்கு.

இப்போது செய்வினை, செய்வித்தல், செபித்தல் முதலிய சொற்களை ஆய்வு செய்வோம்.

ஆக்கம்  என்பது  அவலம் எனனும் சொல்லுகு எதிர்ச்சொல் போல் பாவிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் எதுவும் பாதியில் நின்றுவிடாமல் முடிந்து பயன் தருவதாக இருக்கவேண்டும்.  செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு என்று கலித்தொகை கூறியுள்ளது. 

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! -
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை

என் திறம் யாதும் வினவல்; வினவின், 
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.  

இது கலித்தொகையில் 19 ம்  பாடல்.  நாம் செய்துகொண்டிருக்கும் எதுவும் பாதியில் நின்று தடைப்பட்டு விட்டால் அதுதான் அவலம் என்று இப்பாடல் கூறுகிறது.  செய்வதை முற்றாக முடிக்க ஒரு திறமை தேவைப்படுகிறது.  இது " என் திறம் ( திறமை ) என்ன என்று கேட்காதீர்!" என்கின்றது.  அவலமாவது வலிமை அற்ற தன்மை. முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.  அவலம்:  வலம் அல்லாத நிலைமை.  அ - அல்லாதது;  வலம் - வல் அம் - வலிமை நிலை.  இது நாம் செய்யும் எதிலும் ஏற்படுதல் கூடும்.  செய்யும் வினை முற்ற(வேண்டும்) என்பதும் கூறப்படுகிறது.

தானே ஒன்றைச் செய்தலும் செய்வினை எனப்படும். " ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை"  என்று தன் செயலால் ஏற்படும் எதையும் செய்வினை என்றும் குறள் கூறுகிறது.

ஆனால்  பேச்சு வழக்கில் செய்வினை என்று பிறர் கெட்டுப்போக மந்திரம் செய்வது, மற்றும் பில்லி சூனியம் வைப்பதையும் குறிக்கும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



திங்கள், 3 ஜூன், 2024

மோடி முனிவர்க்கு வாழ்த்துக்கள் Rajarishi Modi

 இந்தக் கவிதை யாம் மோடிஜி அவர்களைப் பற்றி எழுதியது. இதை எழுதியபின் எம் மடிக்கணினியின் காட்சிமேடையில்(desktop) சேமித்து வைத்திருந்தோம்.. திடீரென்று காணாமற் போய்விட்டது. சேமித்தவை பலவற்றைத் திறந்து பார்த்தும் கிட்டவில்லை.  அப்புறம் கணினியின் தள்ளுக்கூடையில் ( recycle bin) தேடிப் பார்க்கவே, எழுத்துக்கள் எல்லாம் கசடுற்று  (gibberish) ஓர் ஆவணம் இருந்தது.  இதுவாகத் தானிருக்கும் என்று அதை மாற்றுரு உறுத்தியின் மூலம் மீட்டெடுக்க முயன்ற போது இயலவில்லை. மடிக்கணினியை மூடிவிட்டு துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம். மீண்டும் இன்று காலை திறந்து பார்த்தோம். மீண்டும் பழையபடி அங்குத் தோன்றியது. கசடுறைவுகள்  (gibberish) நீங்கிவிட்டிருந்தன.

அம்மனுக்கு நன்றி நவின்று அதை இங்கு மீள்படைப்புச் செய்கின்றோம்.


விசுவா மித்திர  மேதை மோடியின்

விவேகா நந்தரைப் போற்றிடு உளத்தால்

சிவாய என்றதும் செய்பவை முடிப்பார்

தவாநல் முன்னவர் தகவுறுத் தினர்காண்.


இவர்:


இராமரைப் போற்றுவார் இராமகி  ருட்டினர்

அறாத்தொடர் புடைய ஆத்தும  ஞானியர்

சிறார்சிசு கொஞ்சுவர். சீர்பல நயந்தே

தராதன தந்தவர் தகைமை சான்றவர்.


அவாய்நிற் பனவே அடைந்தன முழுமை

உவாமதிப் பூரணம்  ஓங்குக உலகில்;

சிவாஏசு  அல்லா சேர்அருள்  மண்டும்

நவைதீர் நலம்கூர் பாரினில் பரதம்.


மோடி  முனிவர் சூடும் வெற்றியால்

வாடா ஞாலமும் வகைநலம் காண்க.

மேடுபள் ளங்கள்  பரதகு  முகமே

வீடுற்  றுயர்ந்து  வேண்டுவ வெல்கவே.


ராசரி    சியாக   மறுவர வோங்கிய

மாசறு காட்சி  மன்னவர் மோடி

ஏசறு  நற்பயன் யாவினும் வென்ற

பாசறு மாட்சிப் பண்ணுறு மோலோர்.


அருஞ்சொற்கள்:

விசுவாமித்திரர் - உலக நண்பர் முனிவர்

தவா - தவறாத

அவாய் நிற்பன - முடியாது நிற்பவை

தகவு உறுத்தினர் - நேர்மை உணர்த்தியவர்

அறாத்தொடர்பு -  முடிந்துவிடாத தொடர் உறவு

வீடு - விட்டுவிடுதல்

வேண்டுவ - வேண்டியவை

ராசரிசியாக - இராஜ ரிஷியாக

மறுவர வோங்கிய - மறுபிறவி கொண்ட

பரத குமுகமே -  பாரத சமுதாயமே

வென்ற - பெற்றுவிட்ட

ஏசறு -  குற்றமற்ற

பாசறு - இலாபம் அடையும் சிந்தனைகள் இல்லாத


மோடிஜி வாழ்க

   


சனி, 1 ஜூன், 2024

மண்திறம் உரைக்கும் மந்திரி.

இவ்வினிய வேளையில் மந்திரி  என்ற சொல்லின் திறமறிதல் இனிதாகும். இச்சொல் தமிழில் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இது தமிழில் தோன்றிப் பிற உடன்பிறப்பு மொழிகளில் விரவிய சொல்லாகவும் இருக்கலாம்; அல்லது அங்கொரு மொழியிற் கிளைத்தெழுந்து தமிழிலும் திறம்பெற்ற சொல்லாகவும் இருக்கலாம். நாம் ஆராயப் புகுமுன் எதுவாக இஃது  இருக்குமோவென்பதே சரியான கேள்வி ஆகும்.  ஆராய்ந்தபின் ஆய்வுக்கு ஏற்ற வாறு  நம் முடிவு இருக்கவேண்டும். ஆய்வு செய்யுமுன் ஒன்றை முடிபுகொள்ளல் வழுவாகும். தமிழருக்கும் ஏனை இந்தியருக்கும் மலாய்மொழியினருக்கும் உள்ள நீண்டகால உறவின் விளைவாக அம்மொழியிலும் இச்சொல் வழங்கிவருகிறது.,  Menteri Kewangan என்றால் நிதியமைச்சர். இங்கு Menteri என்ற சொல் அவ்வாறே ஆளப்பெறுகிறது. நிதியைக் குறிக்கும் wang என்ற சொல் சீனமொழிச் சொல். மலாய் கலவையாய் எழுந்த மொழியாதலின் பல சொற்களும் அங்கு வழங்குதல் காணலாம். பல மக்களுடனும் கலந்துறவாடியதன் விளைவாக அவர்கள் போலினீசியச் சொற்களைப் பயன்படுத்தவில்லை அல்லது மறந்துவிட்டனர் எனலாம்.

நாம் இங்கு மந்திரி என்ற சொல்லை ஆய்கிறோம். குறளில்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்  639

எனக் காண்க. 

மந்திரி என்ற சொல் இங்கு வெகு பொருத்தமானது.  அமைச்சர் என்ற சொல் அரசு என்னும் அமைப்பில் உள்ளடங்கி அரசற்குச் சூழுரை நல்கி வேலை பார்ப்பவர் என்ற பொருளைத் தருகிறது.  ஆனால் மந்திரி என்ற சொல் திறமான முறையில் அரசு செழிக்க மற்றும் நாடு செழிக்க நல்லுரைகளை வழங்கி முன்னேற்றம் அடையப் பாடுபடவேண்டியவர் என்ற அழுத்தத்தைத் தருகிறது. இப்பொருள் மந்திரி என்ற சொல்லிலே அமைந்திருக்கிறது. ஆகவே இந்த முரண்பட்ட நிலையை நன்கெடுத்துக் காட்டும் சொல்லாகும்.

மாதம்தோறும் மும்முறை மழைபொழிகிறதா என்பதை மந்திரி அரசற்குச் சொல்வார் என்று ஒரு பழைய கதை சொல்கிறது.மழை பொழிந்தாலே மண் திறம் பெறும். விளைச்சல் பெருகும்,  இவ்வாறு மழைப்பொழிவு உதவவில்லை என்றால் மந்திரி பாசனத்தின் மேம்பாட்டுக்குரிய வேலைகளை மேற்கொள்ளவேண்டும், அதுவே அவரின் முதலாய பணியாகும். இப்பொருள் மந்திரி என்ற சொல்லில் அமைந்து கிடக்கிறது.

[ அரசன், மந்திரி இருவரும் ஓர் இடத்திலே இருந்தாலும், மழைப்பொழிவு உதவாத நிலையில், மாற்று வழிகட்கு ஏற்பாடு செய்தல் மந்திரியின் கடன். (Duty Scheme, Discharge of Responsibilities). King had other responsibilities.  ]

மண் திறம் என்றால் நாட்டு விளைநிலங்களின் நிலை மற்றும் செழிப்பு, இதை மேம்படுத்தவே மண்திறம் காக்கும் மந்திரிகள் முற்காலத்தில் அமர்த்தப்பட்டனர். மந்திரி என்ற சொல்லும் இவர்களின் இந்த ஆதிகாலக் கடமையிலிருந்தே வந்தது ஆகும். Indian people were basically of agricultural societies. Taxes were paid by them to the ruling classes.

மண் திறம் > மண்+ திற+ இ >  மண்திறி >  மண்திரி >  மந்திரி  என அமைந்தது இச்சொல்.

றகரம் ரகரமாகுதல்,  ஒலியியல் மாற்றம்.

இங்குத் திற இ என்பது திரி ஆனது. இதுபோல் அமைந்த சொற்கள்:

திரிபுகளை மனத்துள் கொள்க:- [இவை சொல்லாக்கப் புணர்ச்சி முறை. உரை மற்றும் செய்யுளுக்கு உரிய புணரியல் சார்ந்தவை அல்ல]

மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்.

மன்னுதல் - நிலைபெறுதல். ஒருவன் தின்றவுடன் வாந்தி எடுக்கவேண்டும் என்று "மந்திரம்" செய்கிறான் இன்னொருவன்.  இது குறிப்பிட்ட காலத்துக்குத்  தொடரும்படி செய்யப்படும்.  இதுதான் இங்கு "  மன்னுதல்" ( நிற்றல் அல்லது நிலைபெறுதல்) எனப்படுகிறது. 

தன் திறம் >  தந்திரம்.

தண் + செய் >  தஞ்செய்.  > தஞ்சை.  ஊர்ப்பெயர்.

தண்செலும் >  தண்செல்ம்> தஞ்சம்.  ( கடுவெயிலில் நிழலை நாடுதல்போல் ஒரு துன்பத்தில் அல்லது கெடுதலினின்று காப்பான இடம் புகுதல்) . செல்ம் என்று குறுக்கும்வழி குறுக்குதல்.

திறம் என்ற இறுதி வரும் சொற்களில் முன் வேறுபதத்துடன் கூடிய பின், திறம் என்பது திரம் என்று ஆகும். மண்திறம்> மண்திரி > மந்திரி. வல்லின றகரம் சொல்லிற் புணரும் காலை தன் வன்மை குன்றிவிடும்.  இது பல சொற்களில் காணப்பெறும் திரிபு ஆகும்.  மண்ணின் அல்லது விளைநிலங்களின் மாற்றங்களை ஆய்ந்து ஆலோசனை வழங்குவோனே இவன். மண் திரி > மந்திரி எனினும் ஒப்பதே ஆகும்.

உணவு உண்டாக்குதல் ஒரு முதன்மையான கவனத்துக்குரிய வேலையாதலின் இதற்காகவே அமைந்த பதவி மந்திரி வேலை. மண்ணின் திறம் அல்லது மண்ணின் திரிபுகள் முதன்மையான கவனத்துக்குரியதாகும்.

திறம்> திறை.  வரியைக் குறிக்கும்.  திறை விதிப்பவர் என்று பொருள் கொண்டாலும், மண்திறை> மண்திரை> மண்+திர்+ இ > மண்திரி> மந்திரி என்றே வரும். திறை+காசு என்ற கூட்டுச்சொல்லில், திறை என்பது திரை என்றே மாறும். இது இவ்விளக்கத்தை மாற்றிவிடாது.  திரைக்காசு ( ரை) என்றே, வல்லினம் இடையினமாகும். மறவாதீர். இது ஒலியியல் சார்ந்த திரிபு ஆகும். இந்த ஒலிமாற்ற நுட்பத்தை அறிந்துகொள்க. ஒருசொன்னீர்மையில் ஒலி மாறும்.  அறிக. ஒருசொன்னீர்மை - formation into a single word. This pertains to contrastive relationships in speech sounds.

கரிகால் சோழன் முதலியோர் காவிரி ஆறு வெட்டி வளம் சேர்த்தது காண்க. அதனால் சோழநாடு சோறுடைத்து என்ற வரணனை எழுந்தது. பிற்காலத்தில் மந்திரிகள் பலவற்றிலும் ஆலோசனை கூறுவாராயினர். இது வேலைவிரிவு ஆகும். இது இயல்பான வளர்ச்சியே ஆகும். பிற்காலத்தில் துறைக்கொரு மந்திரி அமைந்தனர்.

மண்திறம்> மண்திரம்> மந்திரி என்பது உணர்க.

மண்டு(தல்) என்பது " மந்து " என்று மாறுதல்

மாடுகள் ஆடுகள் மண்டிய நிலையே மந்தை.  மண்டுதல் வினைச்சொல்.

மண்டு> மண்து> மந் து ஐ >  மந்தை. (கால்நடைகள் மண்டி யிருக்குமிடம்).  சொல்லை இவ்வாறு திரித்து அமைப்பதே அறிவுடைமை, மண்டு+ ஐ > மண்டை என்று அமைப்பது தலையைக் குறிக்கும் சொல்லுடன் மயங்குதலை உண்டாக்கும், அதை எப்படித் தவிர்ப்பது? ஆகவே மண்டு என்ற சொல்லில் வரும் டு என்பது உண்மையில் து என்பதே,  யாது வழிஎனின்,  சொல்லின் தாத்தாவைக் கண்டுபிடித்து, மண் து ஐ >  மந்தை என்று சொல்லமைத்தனர். சொற்களை முட்டாள்தனமாக அமைக்காமல் பிற்காலத்தவருக்குப் பொருள்மாறாட்டம் ஏற்பாடாமல் அமைத்தனர். அவர்களை வணங்குவோம். பொருள் சொல்கையில் ஆடுமாடுகள் "மண்டிடம்" என்க.

மண் - சொல்லின் விரிபொருள்

மண் என்பது நாளடைவில் நாட்டையே குறித்தது இயல்பு. மண்ணுலகு என்பது விண்ணுலகை வேறுபடுத்தி அறிய ஒர் நல்ல சொற்றொடர்.

வேறு திரிபுகள்:  மண் சிலை > மஞ்சிலை.   இங்கு ஞ் என்னும் மெய் வந்தது காண்க. மட்சிலை என்று அமைப்பது புணரியலை ஒட்டிய முறை. சொல் அவ்வாறு அமையவில்லை.  மொழிக்கு அதிகச் சொற்கள் அமையவேண்டும். அதுவே தேவை என் க.   

மண் என்பதன் வேறு பொருண்மைகள்:  1 . உயர்வு, மாட்சிமை  2 ஒப்பனை3 உலகம்.  மண்திரி> மந்திரி என்ற திரிபு, தொடக்கத்தில் வேளாண்மை மேற்பார்வை என்று பொருள்பட்டாலும் நாளடைவில் மாட்சிமைப் பொருளை எட்டிற்று.

வரி கட்டுகிறவர்கள் விளைச்சல் செய்வோரே. இதனாலும்  மண்திரி> மந்திரி என்பது பொருத்தம் ஆகிறது.  மண்+திரை+இ > மண்+திர்+ இ > மந்திரி என்றுமாகும். நிலவரி, விளைச்சல் வரி முதலியன விதிப்பவர். எவ்வாறாயினும் தமிழ்ச்சொல்லே இதுவாகும். திர் என்பதே மூலச்சொல்.  இது மூலச்சொல். திரும்பு என்ற சொல்லுக்கும் இதுவே மூலம்.

அரசனின் வேலை என்ன? மக்களைக் காப்பது.  எல்லோருக்கும் போதுமான சோறு கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது. மண்ணிலிருந்து விளைவனவுக்குத் திறையும் வாங்கவேண்டும். திரை என்று எடுத்துக்கொண்டாலும், மண்+திர்+இ என்று வந்து மந்திரி என்று திரிபு அடைகிறது, இது சொல்லைப்பார்த்தவுடன் தெரிந்துவிடுமா? தெரிந்துவிடுமானால் ஏன் மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியமுனிவர் சூத்திரம் செய்யவேண்டும்? இதை புரிந்து கொள்ளவேண்டும். ( சூழ்ந்து - ஆலோசித்து, திரு - உயர்வான முறையில், அம் - அமைபெறுவது:  சூத்திரம் ). "நூற்பா".

சூழ்+ திரு+ அம் > சூத்திரம்,  ஒ.நோ: வாழ்த்து+ இயம்> வாத்தியம்.

பூசை மொழி (சமஸ்கிருதம்)  இந்தோ ஐரோப்பியம் என்பது ஐரோப்பியர் கொள்கை. அதிலிருந்து பெருவாரியான சொற்களை அவர்கள் உரோமப் பேரரசு காலத்தில் எடுத்துக்கொண்டு தங்கள் மொழி/மொழிகளைச் செழுமைப் படுத்தினர். இது (வட அல்லது மரத்தடி மொழி) நம் உள்நாட்டு மொழி.  ஐரோப்பியரிடமிருந்து நாம் பெற்றதன்று. இதைப் பிற அறிஞர்களும் கூறியுள்ளனர். இதை இப்போது தேடி எடுக்க நேரமில்லை. முன் ஓர் இடுகையில் குறிப்பிட்ட நினைவு உள்ளது, இங்குள்ள இடுகைகளில் தேடிப் பிடிக்கவும்,


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.