ஞாயிறு, 9 ஜூன், 2024

சொல்லமைக்க எந்த எழுத்தை வீசவேண்டும்?

 விகுதி, சொல்லிறுதி களைவு:

இதை அறிந்துகொள்ள, தொல்காப்பியம் பல்காப்பியம்,  காக்கைபாடினியம் முதலிய இலக்கணங்களின்  நூற்பாக்களை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

கழுகுகள் நேரப்படி வந்து தமக்கு வைக்கும் உணவுகளை உண்டுவிட்டுப் போகும் கோயில் திருக்கழுக்குன்றம்.

அங்கு அந்தக் கழுகுகளும் இன்னும் உள்ளவையும் வருகை புரிந்துவிட்டுப் போகும் கோயில் இந்தத் தலத்தில் இருக்கிறது.

இதற்குப் பெயர் அமைக்கும்போது,  முன்னரே மக்கள் இதைக் கழுகுமலை, கழுகுக்குன்றம் என்றெல்லாம் அழைத்தனர் என்று தெரிந்திருக்கிறது. பின்னர் முறையான பெயர் வந்தது.

திருக் கழுகுக் குன்றம்  என்று சொன்னால், கழுகு என்பதில் கு இருந்து பெயரில் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.  அந்தக் குகரத்தை நீக்கிவிட்டு, திருக் கழுக் குன்றம் என்று பெயர் அமைத்தனர்.

ஆனால், கழு என்றால் அது கழுகு என்றும் குறிக்கும்.  கழாய் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இதனாலும் கு என்னும் ஈறு தேவையில்லை ஆயிற்று.

சொல்லமைக்கும்போது, பொருளறிந்து விகுதி களைந்துவிடுதல் நல்ல உத்தி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

கருத்துகள் இல்லை: