சகிப்பு, சகித்தல் என்பன பலவாறு இவற்றின் தோற்றம்பற்றி விளக்கப்படலாம். இவை பலவாறு காட்டப்பெறும் தன்மை கொண்டு இலங்குதற்கு நாம் மகிழவேண்டும். அவற்றுளொன்றை இப்போது நாம் காணலாம்.
சகித்தல் என்பதாவது அகம் இயைந்து செல்லுதல். இந்தப் பொருள் செந்தமிழின் வழியிலே அறியக்கிடக்கின்றது.
அக இயைப்பு>
அகரத் தொடக்கத்தன சகரத் தொடக்கத்தனவாய்த் திரியும். திரியவே:
சக இயைப்பு> ச(க+இ)யைப்பு> சகி[யை]ப்பு> சகிப்பு.
ககரம் இகரத்துடனிணைந்து கிகரம் ஆதலும் யை என்னும் கூடுதல் ஒலி ஒழிதலும் ஆன திரிபுகள் சகிப்பு என்ற சொல்லைத் தோன்றச்செய்கிறது.
சகிப்பு என்பது ஒரு திரிபுச்சொல்.
திரிபுகள் இல்லாத மொழி உலகில் இல்லை என்னலாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக