"இதிற் கூறப்பட்டவை திறமாகவும் சரியாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன" என்று சொல்வதுதான் வரலாறு என்பதற்கு ஒரு சொல்லமைப்பதற்காத் தரப்படுகின்ற, அன்று தரப்பட்ட -- ஒரு மேல்வரிச் சொற்புனைவு உதவி ஆகும். சரித்திரம் என்ற சொல்லிலே அது இன்று மோந்தறியத் தக்க மறைதிறவாக இருக்கின்றது.
சொல்லமைப்பிலே " திறம்" என்பது ஒரு விகுதியாய் வரவேண்டி யிருப்பின், சொல்லமைப்போன் அதைத் திறம்> திரம் என்று மாற்றிக்கொள்வான். விகுதியாக வரின், திறம் என்ற வல்லழுத் தொலியும் இங்குத் தேவைப்படாது. அதனால்தான் சரித்திரம் எனற்பாலதை, சரித்ரம் என்று கூட குறுக்கிக் கொண்டனர் நம் பூசைமொழியில். இது நம் சிற்றூரான் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நுட்பம் ஆகும். புலவர்கள் சரியாகச் சொல்லவேண்டு மென்பதிலே குறியுடையோர் ஆதலின், இந்த நுட்பமான எழுபாட்டை அறிந்து கடைப்பிடித்தல் அருமையே.
எழுபாடு - இடையே எழும் நிகழ்வு.
திரம் என்ற விகுதியை பன்முறை நோக்கி விளக்கியுள்ளோம். ஒன்று இங்கே காணலாம்:
https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_63.html
பிற:
சரித்திரம்:
https://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_4550.html
சரித்திரம் சொற்பொருள்:
https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_12.html
சரித்திறம் சரித்திரம் சரிதை
https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html
இவற்றையும் வாசித்து ( இச்சொல் வாய்+இ~த்தல்) என்பதன் திரிபு.) மகிழுங்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
Edit note: https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக