பெண்ணுக்கு முன்னெப்போதும் அடுத்துவராத ஆண்மகன் ஒருவன் அடுத்துவர நேர்ந்தால் . நாணம் அல்லது வெட்கம் ஏற்படுகிறது. இது அடுத்தவருதல் முன் நடவாமையினால்தான்.
அடுத்து வருதல் என்பதைக் காட்டுவது அடுச்சை என்ற சொல் அடுச்சை என்றால் அடுத்தலின் காரணமாக எழுகின்ற எதிர்நிகழ்வு.
அடுச்சை என்ற சொல் இடைக்குறைந்து அச்சை என்றாகும். சில இடைக்குறைகள் இப்போது முழுச்சொற்கள்போல் மொழியில் உலவுகின்றன. இதற்குக் காரணம், இடைக்குறை வல்லொலி இழந்து சொல்ல எளிதாக அமைந்தமைதான். இவ்வாறு வந்த சொற்களை அவ்வப்போது நம் இடுகைகளில் காட்டியுள்ளோம்.
இலச்சை என்பது இல் அச்சை. இல் என்பது இடம். அச்சை என்பது அதை அடுத்துத் தொடுவதால் ஏற்படும் மறுப்புச்செயலும் அதற்குரிய மனவுணர்வும்.
இல்+ அச்சை > இலச்சை.
முதல்முறை என்பது தலை என்ற சொல்லாலும் குறிக்கப்பெறும். அ என்றால் அங்கு, கு வந்து சேர்தல். முதல்முறையாக வந்து சேர்ந்தவன் இவ்வாறு எதிர்நிகழ்வைப் பெண்ணிடம் ஏற்படுத்துவான். அதனால் தலை+ அ + கு> தலையக்கு> தலக்கு என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது.
தலக்கு என்பது தலக்கம் என்றும் வரும்.
இலச்சை, தலக்கு என்பனவின் அமைப்பு அறிக.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக