வெள்ளி, 14 ஜூன், 2024

அரக்குதல் என்பதே அரக்கி என்பதற்கு மூலம்.

 இவ்வாய்வில் அரக்கி என்பது தமிழ் வினைச்சொல்லினடியாய்ப் பிறந்தது என்பதை நிலைநாட்டுவோம்.

இதற்குரிய வினைச்சொல்:  அரக்குதல்.

அரக்குதல் என்பதன் பொருளைப் பட்டியலிடுவோம்.  நீங்கள் உங்கள் தமிழ் அகரவரிசையை விரித்துச் சரிபார்த்துக்கொள்வதும் நல்லதுதான், எமக்கு உதவி செய்கிறீர்கள் என்று எமக்குத் தெரியும்.

பட்டியல்:

உள்ளதை ஒளித்தல்.

இருப்பதைத் துடைத்துவிடுதல்

அதிகம் உண்ணுதல் ,   அடிக்கடி உண்ணுதல் ( அமித உணவு)

சேமிக்க வேண்டியதை வீண் செய்தல்,

தேய்த்து அழித்தல்,

வீண்படுத்தித் சிதைத்தல்,

அழுத்தி  அழித்துவிடுதல்.

இவைகளைச் செய்தலைத்தான் அரக்குதல் என்ற சொல் குறிக்கிறது


இவையெல்லாம் கெடுதலான செயல்பாடுகள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்.

அரக்கு >  அரக்கன்  : மேற்கண்டபடி நடந்துகொள்பவன்.   அரக்கி என்பது பெண்பால்.

இராமர் கதையில் வரும் தாடகை அரக்கி என்று கதைசொல்கிறது.


வினைச்சொல் தமிழில் இருப்பதால் இது தமிழ்ச்சொல்.

மற்றும் மடி> மரி என்ற திரிபு விதிப்படி,  அடக்கு > அரக்கு(தல்) என்று திரியும்.  ஆகவே இச்சொல்லும் இதன் உறவுச் சொற்களும் தமிழில் உள்ளன.

அர் >  அரை > அரைத்தல்  என்பதும் கல்லால் அழுத்தி தேய்தலையே குறிக்கிறது.  எனவே அடிச்சொல்லும் உறவுச் சொற்களும் தமிழிலே உள்ளன.

அர்>அர்+  அ+ கு >  அரக்கு  ஆகிறது.  இந்த மூலச்சொற்களை ஆய்ந்தால், அங்கு அரைத்து அல்லது தேய்த்து அழி என்பது வாக்கியப்படுத்திய பொருள்.   அர்: அரைத்தல், கல்லால் தேய்த்தல்.   அ:  அங்கு.  கு: சேர்தல் அல்லது கூடுதல். 

அரக்கு என்பதில் தலை போனால்  ரக்கு என்றாகும்.  ரக்கு> ராக்கு> ராக்கு + அது + அம் >  ராக்கதம் > ராட்சசம் என்று வரும்.

ககரம் சகரம் ஆகும்.   ராக்கதம்>ராச்சதம்.

தகரம் சகரம் ஆகும்:   ராக்கதம்> ராட்சசம் . அழிதன்மை கடைப்பிடித்தல் என்று பொருளாகிறது.

தமிழ் என்பது வீட்டு மொழி எங்கிறார்கள் அறிஞர்/  தம் இல் >தமிழ் என்று பொருத்தமாக உள்ளதால் இவ்வாறு இச்சொல் அமைந்திருத்தல் தெளிவு. ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் இது அறியப்பெறுதல் கூடும்,

பூசை மொழி அல்லது சமஸ்கிருதம் என்பது வீட்டு மனிதர்கள் பூசைகளைப் போய் நடத்தியபோது பயன்படுத்திய ஒலிகளின் தொகுப்பு. இதைத் தமிழரும் அடுத்தடுத்து இருந்தவர்களும் பயன்படுத்தினர். பூசை மாந்தர் மற்ற ஒலிகளைப் பயன்படுத்தி, அரக்கி என்பதை  ராட்சசி என்றனர்.  இதை இன்னோரிடுகையில் விளக்கியுள்ளோம்.

வீட்டில் நாலுபேர் நன்றாக உள்ளபோது ஒருவர் அரக்கியாக இருந்தால் மற்றவர்கள் இதை வெறுப்பர்.  தாடகையும் மற்ற அரக்கிகளும் அரக்கர்களும் வெறுக்கப்பட்டதற்கு இதுதான் காரணியாகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: