கிருபை என்னும் சொல்லின் மூலங்களைக் காண்போம்.
கிடைப்பவற்றில் மிக்க உயர்வானது, பெரியது என்றால் பற்றனுக்கு இறையருள்தான்.
தமிழில் இரு என்றால் பெரியது.
இரு + பு + ஐ > இருபை> கு+ இரு+ பு+ ஐ > கிருபை ஆகும்.
கு - வந்து சேரும் , இரு - மிகப் பெரிய, பு - புவியில் . ஐ - உயர்வானது,. விகுதியுமாகும்.
கி - கிடைத்து, இரு- இருப்பனவில், பு - புவியில், ஐ - உயர்வானது , ஆகவே கிருபை என்றும் ஆகும்.
எழுத்துக்கள் கூடிப் புணர்ந்தமையும் திரிபுகளும் இங்கு விளக்கப்படவில்லை. பழைய இடுகைகளில் கூறப்பட்ட முறையே இதற்குமாகும்.
இருமுறைகளிலும் வரலாம். இன்னும் உள்ளன. அவை இருக்க. இது பல்பிறப்பிச் சொல்.
அறிக மகிழ்க/
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக