செவ்வாய், 18 ஜூன், 2024

மனிதனும் மனுசனும்

 தனித்தமிழ்ச் சொல்லாகக் கருதப்படுவது மாந்தன் என்பது.  இதன் அடிச்சொல் அல்லது சொற்பகுதியாகக் கூறுவது மான் என்ற சொல்தான்.  இந்த மான் என்பது விலங்காகிய மானைக் குறிக்கவில்லை.

மனுசன் என்பது சிற்றூர் வழக்குச் சொல் வடிவம்.  இது மனிதன் என்ற சொல்லின் திரிபு என்பர்.

இந்த வடிவங்களை இங்கு விளக்கவில்லை. இவ்விடுகையில் மனுசன் என்பதை மட்டும் இன்னொரு கோணத்திலிருந்து  விரித்துரைப்போம்.

மன்  அடிச்சொல். நிலைபெற்றது என்று பொருள் படுவது. மனிதப் பிறவி என்பது நிலைபெற்றதுதான்.  இறத்தல் உண்டாயினும் மனிதன் புவியில் நிலைபெற்றவன் என்று கருதலாம்.

அவனுக்கு ஏனை விலங்குகள் இணையாகமாட்டா.

மன் + உசன்.

உய்> உய்+ அன் > உயன்>  உசன்.

இது யகர சகரப் போலி.  வாயில் > வாசல் என்பது போல.  இகரம் (யி) என்பது ச  ஆனது. ( அ).  இது இகர அகரத் திரிபுக்கும் எடுத்துக்காட்டு.

எனவே உயன், உசன் என்பவை உயர்வு அல்லது உய்வு உடையவன் என்று பொருள் தரத்தக்கது.

இந்தப் பொருண்மையை எடுத்துக்காட்டியுள்ளனரா என்று தெரியவில்லை.

மனிதன் நிலையான உய்வுகளை உடையவன் என்பது வரலாற்று உண்மை. சிற்றூர்ச் சொல்லில் இது அமைந்துள்ளது ஓர் அரிய உண்மை.

உசன் > உஷன் ஒலிமாற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

அறிக மகிழ்க.

 

கருத்துகள் இல்லை: