உலகநண்பர் மோடிஎனும் உத்தமமா முனிவர்
திலகமென்பர் தேர்ந்தருளித் தேர்தல்வெல்வு உற்றார்
பலகலைஞர் பாராட்டிப் புகழ அறிந் தோர்தம்
நிலைநானூ(று ) இருக்கைகளே நேரிதினே நன்றே.
நலம்வருக நலம்வருக நாட்டினர்யா வர்க்கும்
நனிசிறக்க அவராட்சி தணிவுறுமே இன்னல்
தனிஎவரும் இணையில்லை நாட்டில் மேம் பாடே
இனிநிலத்து நற்காலம் நேரிதினே நன்றே.
பொதுநலமே போற்றுகிற இதயநெறிச் செல்வார்
இதுநலமென் றறிந்தபடி எந்நாளும் வெல்வார்
மெதுநடையொன் றாளாத விஞ்சுவிரை வாளர்
கதிமோடி காண்கின்றோம் நேரிதினே நன்றே.
இவை தாழிசைப் பாட்டுகள்.
உலகநண்பர் - விசுவாமித்திரர்
முனிவர்திலகம் - முனிவருள் தலைமையுடையார்
தேர்ந்து அருளி - வேட்பாளர்களை ஆய்ந்து எடுத்து நாட்டினுக்களித்து
அறிந்தோர்தம் - கணிப்புச் செய்து கண்ட எண்ணிக்கை அவருக்கு
நேரிதினே நன்றே - எப்படிப் பார்த்தாலும் நாட்டுக்கு நல்லது
தணிவுறும் - குறைவாகும்
இதயநெறி - மனச்சாட்சிப்படி நடத்தல்
மெதுநடை - விரைவாகச் செல்லாமை
ஆளாத - மேற்கொள்ளாத
விஞ்சுவிரைவு - அதிவேகம்
கதி மோடி - மேடியே நாட்டுக்குக் கதி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக