புதன், 1 மே, 2024

நட்பினை(சேர்தலை) மிகுத்தல்

 நட்பு என்ற சொல் நள் என்ற அடிச்சொல்லில் பிறந்தது. நள்+ தல் என்பது நட்டல் என்றும் வரும்.  நண்பு மற்றும் நட்பு என்றும் தோன்றும். நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு என்று தேவர் திருவாய் மலர்கின்றார். நண்பர்கள்  ஆனபின்  வீடு  இருந்த இடத்தில் இருக்கும் என்றாலும் வீடில்லை  அதாவது விடமுடியாது என் கின்றார்.  நண்பர்  ஆனபின் பிரிந்துவிடுதல் எளிதன்று.  நண்பர்களாகு முன்னர் மலைகள்போல்   பெரியனவாகத் தெரிந்த குற்றங்களும் கண்களாற் காணவும் இயலாதன ஆகிவிடும். அதனால்தான் வள்ளுவனார் வீடில்லை,  விட்டு விலக முடியாது என்று சொல்கிறார் வெகு திட்டவட்டமாக.

ஒரு செடியை நடுதல்,  மரத்தை நடுதல் இவை போன்றவைதாம்.  இந்த நட்டலும். கொஞ்ச நாட்களிலே  வேர்விட்டு வளரத் தொடங்கிவிடுகிறது. கூடியவர் பிரிந்தால் கொஞ்சம் அழுகையும் வரலாம்,  அப்போது உங்கள் நண்பர் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததாக ஊரெல்லாம் ஓமலித்தாலும் உங்களுக்குத் தெரியாது போய்விடும். நட்பில் குற்றம் தெரிவதில்லை. அப்புறம் வீடில்லை.  விடுபாடு கிடையாது.

இவ்வாறெல்லாம் ஏன் சொல்கிறோ மென்றால்,  நட்பு என்பதற்கும் செடி மரம் நடுவதற்கும் வேறுபாடில்லை.  எல்லாம் நள் என்ற அடிச்சொல்லிலிருந்தான் வருகிறது.  அதனால்தான் :"நட்டலிற் கேடில்லை, பின்னர் வீடில்லை:" என்கிறார்.

இப்படி நட்பில் மிகைபாடு இருத்தலால்,  பூசைமொழியில் மிகுத்தல் கருத்திலிருந்து மித்திரம் என்னும் சொல்லைப் படைத்துள்ளனர். நட்பு என்பதே ஒரு கூடுதலில் வரும் மிகைதான்.  இதை உணர்ந்துகொண்டால் மிகு திறன் என்பது ஏன் மித்திரம் ஆனதென்பதை உணரலாகும்..  இதை "திறன்" என்று சொல்வதை விட திரன் என்று சொல்வதே திரிதல் காட்ட எளிதான சொல்லமைபு ஆகும்.  இது உண்மையில் திரி+ அன் > திரன்தான். திரிபுப்பொருள். அகரவரிசையை  நோக்காது  எழுத்துத் திரிபுகளை மட்டும் நோக்குக. இந்த உத்தி புரிதலுக்குத் தேவையானதாகும்.  திரி என்பதில் இகரம் கெட்டு திர் அன் திரன் என்று வந்த சொல்.  மிகத் திரிதல் > மித்திரி அம்> மித்திர ஆகி,  பூசைமொழியில் வரும் நட்புச்சொல்லுக்கு மிக்க நெருக்கமான திரிபு வடிவங்களை முன்வைக்கும்.  திறம், திரம், திரி அம்,  என்பவற்றில் திரி  அம் என்பது மிகத் தெளிவான விளக்கம்  அதாவது புரியவைக்கும் விளக்கம் ஆகும்.

கூடுதல் என்ற தமிழ்ச் சொல்லும் மித்திரன் என்ற சங்கதச் சொல்லும் அதிகம் புலப்படுத்தும் கருத்தில் உண்டாயின. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: