பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும்
வெகுதூரமே
.......
பாசாடு அவிக்குளே செல்லா தவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
,,,,,
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும்
பரிபூரணானந்தமே.
சிலவரிகள் விடப்பட்டன.
தாயுமான சுவாமிகள்.
சுவாமிகட்கு எங்கு பார்த்தாலும் கடவுள் பரிபூரணானந்தமாகத் தெரிகிறார்.
இன்னொருவருக்குக் கடவுள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இதன்
பொருள் ? கடவுள் தெரியவில்லை என்றால் அது
பார்ப்பவனின் கோளாறுதான். அது கண்ணிலும் நெஞ்சிலும் உள்ள கோளாறு.
தெரியாதவனிடம் கேட்டால் அவன் அவரைக் கண்டுபிடித்துச் சொல்ல
முடியாது.
பாசம் என்னும் நெருப்புக்குள் (அவிபட்டுக் கொண்டிருந்தால் ) இருந்தால் அவனுக்குக் கடவுள் தெரியமாட்டார்.
நெருப்புக்குள் எரிந்துகொண் டிருப்பவனுக்கு நெருப்பு மட்டுமே தெரியும்.
அவர்(கடவுள் ) எங்கிருந்தும் நீங்கியதே இல்லையே. என்று தாயுமானவர் காட்டுகிறார்.( எங்கும் இருப்பவரைக் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் அது உனது கோளாறு தான் ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக