அம்பு அஸ்திரம் என்ற சொற்களை நாம் விரித்து ஆய்ந்துள்ளோம். இவற்றை முன்னர் நீங்கள் படித்திராவிட்டால் இங்குச் சென்று வாயிக்க- ( வாசிக்க)லாம்.
சொடுக்குக: https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html
இப்போது இன்னொரு வகையில் அஸ்திரம் என்ற சொல்லை அறிந்துகொள்ள முனைகிறோம். மேற்கண்ட இடுகையில் அஸ்திரம் என்பது தூரத்திலிருந்து அடிக்கும் வழி என்பதை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை. இப்போது அடியை அல்லது உதையை மையமாக வைத்து அதே சொல்லைக் காட்டுவோம். தமிழிலே ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இதைக் காட்டலாம் என்பதை முன்னரே நாம் கூறியுள்ளோம். இங்குள்ள இடுகைகளில் சிலேடைகள்போல சொற்பிறப்பைக் காட்டுதலைத் தவிர்த்துள்ளோம். சிலவேளைகளில் தமிழ்மொழியில் வளத்தையும் வசதியையும் விரித்துரைப்பது அவசியமாகிறது.
அஸ்திரம் என்ற சொல்லையே இன்றும் எடுத்துக்கொள்கிறோம்.
முதலில் இறுதல் என்ற சொல்லைக் கவனத்தில் கொண்டுவருகிறோம். இறுதல் என்றால் முடிதல். இறு என்பதனுடன் தி என்ற விகுதி சேர இறுதி என்ற சொல் பிறந்து முடிவு என்ற பொருளைப் பயக்கிறது. இன்றைக்கு உள்ள அஸ்திரங்களை அல்லது எறிபடைகளை ( missiles ) கொண்டு சில நொடிகளிலே பல ஊர்களை அழித்து பல்லாயிர அல்லது பல்லிலக்கவரை சாம்பலாகச் செய்துவிட முடியுமன்றோ? இத்தகைய திறனை அதே சொல்லில் காட்டுதல் கூடுமோ? பார்க்கலாம். அஸ்திரம் என்ற சொல்லையே தேர்ந்தெடுப்போம்.
இறு என்ற சொல்லிலிருந்துதான் இற இறத்தல் என்ற சொல்லும் வருகிறது. பல இறப்புகள் நிகழும் என்பதால் இறம் என்பது பொருத்தமான சொல்லிறுதி ஆகும். இறம் என்பதை இரம் என்று வைத்துக்கொள்ளலாம்.
அடித்து + இறு + அம் > அடித்திறம் > ( டி யை விலக்க) > அத்திறம் > அத்திரம்> அஸ்திரம் என்ற அதே சொல் வந்துவிட்டது.
அழித்து அல்லது அடித்து இறுதல்.
அழித்திறம் > அத்திறம் > அஸ்திரம் என்றும் ஆகும், ழி விலக்கப்பட்டது.
பூசைமாந்தர் செய்ததுபோல இச்சொல்லை நாம் மாற்றி அழிப்பை அல்லது அடித்தலை மறைவாக்கியுள்ளோம்.
அஸ்திர என்பது astro என்ற சொல் போலவே இருப்பதால் மிக்க நன்று.
இப்போது ஏவுகணை, எறிபடை என்பனவும் அறிவோம். பறக்குத்தி, பறவெடி, வெடிப்பறவி என்று பல உண்டாக்கலாம். சொல்லுக்கு நமக்குப் பஞ்சமில்லை. மனநிறைவு தருகிறதா என்பதே அறியத்தக்கது,
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக