சனி, 18 மே, 2024

பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் ( ஒரு சாதியினர்)

 பந்தோபாத்யாய  அல்லது பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் 

 இது ஒரு சாதியினர் ஆவர்.  இந்த வடபெயரின் தமிழ்,   பண்தோய் என்பதுதான், இவர்கள் பண்டை நாட்களில் பாடித் திரிந்தவர்கள். பண் என்றால் பாட்டில். அதில் தோய்ந்திருந்தவர்கள்.  பாணர் வீடு வீடாய்ப் போய் பாடலைப் பாடி வீட்டிலுள்ள பெண்ணுக்கும் அவளைச் சில காரணங்களால் பிரிந்து சென்றுவிட்ட தலைவனுக்கும் இடையில் பிணக்கைத் தீர்த்துவைக்கவோ திருமண முயற்சிகட்கு உந்துததல் கொடுத்து உறவை உயிர்ப்பிக்கவோ முயலுவர்.இவர்கள்  செய்துவைத்த ஒற்றுமை முய₹சிகளை இறையனார் அகப்பொருள் என்னும் நூலிலோ அன்றி ஏனைச் சங்க இலக்கியப் பாடல்களிலோ காணலாகும்.

Bandyopadhyay [ பண்தோய்வாத்தியாய( ர் )

பந்தோ என்று திரிந்துள்ள வடக்குமொழி வழக்கு  "பண்தோய்"  என்பதுதான். பண்ணில் அல்லது பாடலில் தோய்ந்து வாழ்தல்.  வாய்மொழியாகப் பாடித் திரிவதைத் தவிரப் பழங்காலத்தவர்க்கு  வழி வேறில்லை. வாய்த்தி>  வாத்தி> வாத்தியார்கள் என்று அவர்கள் குறிக்கப்பட்டனர். இவ்வாறு நாட்டில் திரிந்தவர்கள் பலராதலால், அதுவே ஒரு தொழிலாகி, அதைச் செய்தவர்கள் வாத்தியார்(வாத்தியாய)  என்றாகிவிட்டனர். வாய்ப்பாடகர்ளும் வாய்த்தி  ஆர்களே.  ஆர்கள் என்றால் அவர்கள் என்பதுதான். இவர்களெல்லாம் ஒரு சாதி ஆனார்கள்.  சாதி என்பது தொழிற்சார்பினர் என்பதுதான். சார்> சார்தி> சாதி> ஜாதி.  இவர்கள் ஒவ்வொரு கூட்டத்திற் பிறந்திருந்த படியால்,  சார்(தல்)> சா> ஜா என்ற சொல் உண்டாகி அது பிறத்தல் என்று பொருள்படும் சொல்லைப்  பிறப்ப்பித்தது.  தொல்காப்பியத்தில்  சாதி என்பது நீர்வாழ் உயிரினங்களுக்கே வழங்கியது.  பின்னரே அது மனிதர்களுக்கு உதவும் சொல்லானது. இஃது பிற வழக்கு ஆகும்.  மாறிவழங்குதல்.

இது பாணர் அல்லது பாணர்ஜி  என்றும் வரும். இதன் தமிழ் வடிவம் பாணனார் என்பதுதான். பாணர்ஜி என்பதும் பந்தோவாத்தியார் என்பதும் ஒரு பொருளுடையவை.

இவர்கள் பாக்களால், பாடலால், சிறந்தோங்கிய சீருடையார்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





கருத்துகள் இல்லை: