வெள்ளி, 15 மார்ச், 2019

சாத்துதல் சொல்விளக்கம்.

இன்று சாத்துதல் என்ற சொல்லை நோக்கி உணர்ந்துகொள்வோம்.

இச்சொல்லுடன் தொடர்புடைய வேறு சில சொற்களைக் கண்டு அளவளாவி யுள்ளோம். மறந்திருந்தால் நினைவூட்டிக் கொள்வதில் யாதுமொரு தவறில்லை.


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_29.html  இங்கு சாளரம் என்ற சொல்லுடனான தொடர்பு ஆய்வுபெற்றது.



htmlhttps://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_19.html 
சாதுவன் முதலிய சொற்கள் இங்கு நம் கவனத்தைக் கவர்ந்துகொண்டன

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_6.html

இதில் ஐதீகம் என்ற சொல்லினை விளக்கியுள்ளோம்.  இவ்வுரைச் செலவின்போது சாத்துதல் என்பதும் தொட்டுரைக்கப்பட்டது.  An explanation in passing. You may find it interesting.

இந்த ஐதீகம் என்பது ஐடியா, ஐடியலாஜி  என்னும் சிலவற்றுடன் பிறவித் தொடர்புற்றது ஆம்.

இனிச் சாத்துதலுக்குச் செல்வோம்.

சார்தல் வினைச்சொல்.   சார் என்பது  சார்த்து என்றாகும். இது பிறவினை வடிவம்.  இவ்வாறாம்போது    சார் என்பதில் ஈற்று ரகர ஒற்று கெட்டுவிடும்.   ஆகவே சார்த்து > சாத்து ஆகும்.

ஒரு கதவைச் சாத்துகையில்  திறந்தவாறுள்ளதைக் கொண்டுபோய்க் கதவு நிலைச் சட்டத்தில் சார்த்துகிறோம்.  ஆகவே அது சாத்துதல்.

பயன்பாட்டு வழக்கில் ஒருவனைச் சாத்து சாத்து என்று சாத்திவிட்டார்கள் என்றால்  அடிக்கும் கைகளைக் கொண்டுபோய் அவன் உடலில் சேர்த்து வலிக்கும்படி செய்தனர் என்பதே பொருள்.

உணர்பொருளைச் சார்ந்தவாறு அதன் உள்ளமைவாக இருக்கும் எதையும் அதன் சாரம் என்போம்.   இது அப்பொருளைச் சார்ந்தது என்பதே அர்த்தமாகும்.

மின்னியலில் அதைச் சார்ந்துள்ள அல்லது உள்ளுறைந்த ஆற்றலை மின்சாரம் என்றனர்.  அதாவது மின் ஆற்றல் சார்ந்தது என்பது அர்த்தமாகும்.

சார் > சாரம்.

தம்மைச் சார்ந்திருப்பவளே சம்சாரம்.  தம் > சம்.

தம்சாரம் > சம்சாரம்.  தகரம் சகரமாகும்.  யாப்பில் மோனையுமாகும்.

தூங்காதே தம்பி தூங்காதே  -
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற பாட்டில்
 தூ> சோ மோனையுமாய்   ங்  ம்  இடையின ஒன்றிவருதல் எதுகையுமாய் நிற்றல் காணலாம்.

சார் > சாரை.  பாம்பு வகையில் தன்வலிமை குறைந்த ஒரு பாம்பு.

சாரீரம் :  தொண்டையைச் சார்ந்தவாறு ஈர்க்கப்படும் ஒலி.  சார்ந்து ஈர்த்தல். 

will review for typos


.





கருத்துகள் இல்லை: