உறக்கத்தின்போது கனாக்கண்டு நல்லபடியாக ஒலிப்புறாத சொற்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையே சொப்பனம் ஆகும்.
கருத்து: சொற்களைப் பன்னுதல்.
பன்னுதலாவது பலமுறை நன்`கு ஒலிக்காமல் வாய் அசைவுறல்.
பல் > பன் (லகர 0னகரத் திரிபு). ( பல தடவை என்னும் அடிப்படைக் கருத்து)
பன் > பன்னு: வினைச்சொல் ஆக்கம்.
பன்னுதல் : தொழிற்பெயர்.
இன்று உள்ள பொருள்:
கனவு, குறைச் சொல்லொலிக் கனா.
சொல்+ பன்னு + அம் > சொற்ப(ன்)னம் ( இடைக்குறை:ன் )> சொற்பனம் > சொப்பனம்
இங்கும் விளக்கம் சிறிது உள்ளது.
.https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html
இதன் அடிப்படைப் பொருள் சொற்களைப் பன்னுதல் என்பதே ஆதலின், இன்று இதன் பொருள் மாறிவிட்ட நிலையில் இது திரிசொல்லாகும்.
சொல்லிலும் திரிபு; பொருளிலும் திரிபு.
இத் திரிசொல்லைப் பயன்படுத்திப் பாபநாசம் சிவன் எழுதிய:
" சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய சாமி உனை மறந்தார்! --- அந்தோ
அற் பப் பணப் பேய் பிடித்து அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்."
இங்கு சொற்பன, அற்பப்பண என்ற எதுகைகள் மிக நன்று.
நாவால் பொய்மொழிவார் ---- தனுதுவாழ்
நாளெலாம் பாழ்செய்வார். ---- உன்
பாவன நாமமதை ----- ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்
அந்தோ விந்தை இதே ----- அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே ---- இவர்
சிந்தை திருந்தி உய்ய ---- குகனே
உந்தன் திருவருள் புரியாயோ.
இந்தப் பாடலை எம்.கே தியாகராஜ பாகவதர் ( மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராசன், இசைவலர் ) படத்தில் பாடியிருந்தார்.
இனி அந்தோ என்ற சொல்லாட்சியைப் பார்ப்போம்.
என்ன (தமிழ்) > எந்து ( மலையாளம்)
வந்து (த ) .> வன்னு (மலை)
இவ்வாறு 0ன்ன > ந்த மாறுதலுடைமை காணலாம்.
இதுபோலவே
அன்னை > அன்னோ (தாயே ) என்பது
அன்னோ > அந்தோ என்று மாறிவந்துள்ளது.
இடையில் இந்த ஒலிமாற்றினை விளைப்பது து அல்லது த் என்னும்
இடைநிலை தான்.
அன்+ ஓ = அன்னோ. ( அன்+ஐ = அன்னை) இதைப் பின் காண்போம்.
அன்+ த் + ஓ = அந்தோ.
இரண்டிலும் அன் என்பதே அடிச்சொல்.
அன்னில் உள்ள 0னகர ஒற்று அம்மில் மகர ஒற்றாகும்.
ம்>ன் போலி. திறம் > திறன். அறம் > அறன்.
இவ்வாறு அறிந்து மகிழ்வீராக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக