இன்று ஓர் அன்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் அவரைக் கேட்டது: சாமி! எப்படி இருக்கீங்க? என்பதுதான்,
பேச்சுத் தமிழிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறதன்றோ?
செந்தமிழ்: எப்படி இருக்கிறீர்கள்?
பேச்சுத்தமிழ்: எப்படி இருக்கீங்க?
இது ஒரு சுருக்கமாகவே தெரிகிறது. தொகுத்தல் என்றாலும் இடைக்குறை என்றாலும் சுருக்கம்தான்.
இரு : பகுதி.
க்: சொற்பகுதி புணர்வில் வலி மிகுதல்.
கிறீர்கள் > கீங்க.
இதைக் கூர்ந்து நோக்கினால் கிறீர்கள் என்பது கீங்க என்று உருமாறியது பெரிய மாற்றம்தான்.
கிறீர்கள் > கி ( றீர் ) க ( ள் ) > கீக > கீங்க.
ளகர ஒற்றுக் கெட்டது. கள் > க ஆனது.
(க் + இ ) + ( ற் + ஈர் ) என்பவற்றிலே பெரிய மாற்றம்.
இவற்றில் க் + ஈ இரண்டும் இணைந்து கீ என்று மாறி , மற்ற இ, ற், ர் ஆகியவை வீழ்ந்தன.
கீ என்பது க என்ற இறுதியைச் சந்திக்க கீக என்பது ஒரு ஙகர ஒற்றுப்பெற்றது,
ஆக கீங்க ஆனது.
ரகர ஒற்று பெரும்பாலான திரிபுகளில் ஒழிந்துவிடும். இங்கும் தொலைந்தது.
வருவார்கள் என்பது வருவாக என்னும் போது ரகர ஒற்று ( ர் ) ஒழிந்தது. ளகர ஒற்றும் ஒழிந்தது.
ளகர ஒற்று மறைவது தேள்வை என்பதில் தேவை என்ற மாற்றம் ஏற்படுகையில் கண்டுகொள்க.
செய்தீக வந்தீக என்பனவும் உள்ளன. இவற்றில் ர், ள் தொலைதல்.
இடைக்குறை தொகுத்தல் முதலியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் மக்களே.
புலவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் தமிழிலக்கணம் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது,
திருத்தம் பின்
ஒரு பிழை திருத்தம் பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக