பன்றி வருடத்தில் நன்று வருமென்றால்
ஒன்று மிதுகாறும் இன்றேகாண்--- சென்றவை,
கொன்றதும் மூச்சுமே நின்றதும் போகட்டும்,
நன்றே வருக இனி.
இந்தப் பன்றி வருடம் / ஆண்டு என்பது பல கொடூரங்களைக்
கொண்டுவந்துள்ளது. அவை உங்களுக்குத் தெரியும்.
அவற்றை வரணனை செய்தல் தவிர்ப்போம். மறப்போம்.
இல்லையென்றால் சோகத்திலிருந்து தப்பமுடியாது.
கவலையே மிஞ்சும். இனி வருவது நல்லதாகட்டும்
என்பது இப்பாடல்.
யாப்பு: மோனைகளைக் கையாளாமல் பெரிதும்
எதுகைகளாலே ஆக்கப்பட்டுள்ளது இப்பாடல்.
எதுகைகள்: பன்றி, நன்று, ஒன்று, இன்று,
கொன்று, நின்று, நன்று என்பன.
இது நேரிசை வெண்பா. ஒரு சீன விளம்பரத்தைப்
பார்த்தேன். அது இது பன்றி ஆண்டென்பதை நினைவு
படுத்தியபோது இப்பாடல் முகிழ்த்தது. உடன்
கைப்பேசியில் பதிந்துகொண்டேன். வாசித்து
மகிழ்வீராக. இவ்வாண்டில் எல்லாம் நல்லதே
நடக்கட்டுமாக.
வருடம் சொல்லமைப்பு
வருடம் என்ற சொல்: அறுபது ஆண்டுகளும்
மீண்டும் மீண்டும் சுற்றுச்
சுற்றாக வருபவை. அதனால் இதன் அடிச்சொல்
வருதல் என்பதே என் ஆய்வு. மழை குறிக்கும் வர்ஷ
என்பதும் மழை வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில்
வருவதாலே வருஷ என்று அமைந்தது. இவை தமிழ்
மூலங்கள். ஆண்டு என்பது ஆட்சி என்பதிலிருந்து
வருகிறது. அடிச்சொல் ஆள் என்பது; அது ஆளுதல்.
இனி அடுத்தடுத்து வருவதால், அடு> அண்டு> ஆண்டு
எனினும் ஒப்புதற்குரித்தே. அதனால் ஆண்டு என்னும் சொல்
இருபிறப்பி ஆகும்.
சோகம்
சோகம் : இது சோர்தல் அடிப்படையில் எழுந்த சொல்.
சோர்+ கு+ அம் = சோர்கம் > சோகம். ரகர ஒற்று
கெட்டது. ரகர ஒற்று கெடுதல் முன் இடுகைகளிலும்
விளக்கப்பட்டுள்ளது. ய ர ல வ ழ ள பெரிதும் வீழ்வன.
தேய்ந்து அழிவது தேகம்: தேய்+கு+ அம் = தேய்கம் > தேகம்
ஆனது காண்க.
தேள்வை (தேவை) துளிக்கடை (துக்கடா)
ளகர ஒற்று மற்றும் ளகர வருக்க வீழ்ச்சி: தேள்வை > தேவை;
துளிக்கடை > துக்கடா. (ளி).
கொடியது ஊர்ந்து நாம் அறியாமலே வந்துவிடுகிறது.
ஆகவே கொடு ஊரம் ஆகிற்று. கொடூரம்.
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக