சுமேரியாவில் தமிழர்கள் இருந்தனர் என்பதை பெரும்பேராசிரியர் மறைமலையடிகள் கூறிச்சென்றார். தமிழர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், பல நாடுகட்கும் சென்று தம் வணிகததை வளர்த்து நிலைபெற்றிருந்தனர் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் கருத்தாகும்.
இவர்கள் தமிழகத்திலிருந்தோ குமரி நாட்டிலிருந்தோ அங்கு (சுமேரியா) சென்றனர் என்பதே முன் நாம் அறிந்த வரலாறு.
மலேசியா பினாங்கு அறிஞர் முனைவர் லோக நாதன் என்பார், சுமேரியாவேதமிழர் பிறந்தகம் என்பார். தமிழர் அங்கிருந்து தமிழகம்
சென்றேறினர் என்பார்.
சுமேரிய மொழியிலும் தமிழிலும் காணப்பட்ட சொல்லொற்றுமைகளை அவர் அடித்தளமாகக் கொண்டு, அவர் தம் தெரிவியலை (theory) மெய்ப்பிக்க முனைந்தார்.
இத் தமிழறிஞர் ஏறத்தாழ மூன்று நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார் (Age more than 70). நமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தெரிவியல்கள் யாவும் நன்கு ஆய்தற்குரியனவே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக