வெள்ளாளர் என்ற சொல் -ளர் என்று முடிகிறதே யன்றி, -ழர் என்று முடியுமாறு இப்போது எங்கேயும் எழுதப்படுவதில்லை.
சோழர் என்பது உண்மையில் சோளர் என்பதிலிருந்து வந்ததென்று ஆய்வாளர் சிலர் கூறியதுண்டு. அதிகமான சோளம் விளைந்த நாட்டுக்கு உரியோர் என்று பொருள்தரும் சோளர் என்பதே சோழர் என்று மருவிற்று என்றனர். ள > ழ ஆகும் என்றனர்.
12-ம் நூற்றாண்டுக் சோழர் கல்வெட்டு ஒன்று "வெள்ளாளர் " என்பதை வெள்ளாழர் என்கிறது. இவ்வடிவம் நூல்களில் இல்லையென்று தெரிகிறது.
எவ்வாறாயினும் ள > ழ திரிபினை மனத்தில் இருத்துங்கள்.
பேச்சு வழக்கில் ழ என்பது ள ஆவது யாண்டும் கேட்கப்படுவது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக