எப்போதும் சில்லென்று வீசுவாய் திரைத்துணி
எழவும்பின் விழவும் நீ இயன்றபடி செய்குவாய்.
தப்பேதும் இல்லைஎன்றன் தாவணியும் நகர்த்துவாய்
தனியேனென் றெண்ணாமல் தழுவிடுதல் புரிகுவாய்
தளிர்களையும் இலைகளையும் தலையசைத்தே அயர்த்துவாய்
தண்ணீரில் அலைகளெழத் தாமரைக் குளம் தவழுவாய்
குளிர் நுகர நான்மகிழக் காற்றினியாய் உலவுவை
குளிர்வேண்டி ஏங்கினேனே நேற்றெவண் நீ ஒளிந்தனை?
சில் - ஜில் வடவெழுத்து நீக்கப்பெற்றது .
காற்றினியாய் - இனிய காற்றே
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக